தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடம் ஜாதி, மதம் மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ளிட்ட 13 தகவல்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களிடம் 13 வகையான தகவல்களை சேகரிக்க வேண்டும். அதாவது மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், பெற்றோரின் ஆண்டு வருமானம், ஜாதி மதம் உள்ளிட்ட தகவல்கள் […]
Tag: பொதுத்தேர்வு மாணவர்கள்
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஜூலை 20-ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஜூலை 14ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் www.gde.tn.gov.inஎன்ற இணையதள […]
தமிழகத்தில் சென்ற 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் வைக்கப்படாமல் முந்தைய வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு மாணவர் சேர்க்கையானது நடந்தது. இந்த வருடம் 9 -12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவருக்குமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதிமுதல் பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. இதையடுத்து […]
தமிழ்நாட்டில் சென்ற கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு சற்று தாமதமாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்ற மே மாதத்தில் முடிவடைந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் […]
தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளில் 7,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. 10,11,12 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத மொத்தமாக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 27,30,000. ஆனால் இதில் 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத […]
தமிழகத்தில் தற்போது 2 வருடத்திற்கு பின் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. அதன்பின் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்னும் ஒருசில நாட்களில் நடைப்பெற இருக்கிறது. இதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 5-ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தோ்வு மே 6- ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 9- ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வரும் ஏப்ரல் 25 முதல் தொடங்க இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் இருந்து பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் எண்ணிக்கையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு மாணவா்கள் 4 லட்சத்து 86,887 […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை 50% வரை குறைக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பரவிய கொரோனா 2ஆம் அலை காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மதிப்பெண்கள் ஆனது மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி கல்வித்துறை பொது […]