கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். […]
Tag: பொதுமக்கள் அச்சம்
மேம்பாலத்தின் மீது பைக் மோதி சேல்ஸ்மேன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் […]
இந்தியாவில் கொரோனா 4-வது அலை வந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 21ஆம் தேதி அன்று 1549 ஆக தொற்று பாதிப்பு இருந்துள்ளது. இதை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை மாநிலங்கள் முழுவதும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மார்ச் 22ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்பானது 1581 என்று இருந்த நிலையில், […]
ஆடு மேய்க்க சென்ற 2 பேரை வழிமறித்து கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள மல்லையாபுரத்தில் மணி, ராஜப்பன் ஆகிய முதியவர்கள் வசித்து வந்துள்ளனர். ஆடு மேய்க்கும் தொழிலாளர்களான இவர்கள் வழக்கம்போல அப்பகுதியில் உள்ள சின்னமலை பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளனர். இதனையடுத்து ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் மீண்டும் ஆடுகளை அழைத்துகொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது மலைப்பகுதியில் திடீரென கரடி ஒன்று அவர்களை வழிமறித்து இருவரையும் தாக்க முயன்றது. […]
தொடர்ந்து திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் முஸ்லிம் சங்கம் சார்பில் காவலர்களை நியமித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக திருட்டு, போதை பொருள் விற்பனை போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து திருட்டு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தடுக்க காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹாசனா […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது . அதன் பிறகு கொரோன பாதிப்பு குறைந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதன்படி பள்ளிகளில் 9- 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டு 50% பேர் சுழற்சி முறையில் வருகை தருகின்றனர் . பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடுமோ என்று ஒரு […]
நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை அடுத்துள்ள சத்திரக்குடியை சுற்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் சத்திரக்குடி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பகள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் மின் விநியோகம் செய்யபடுகின்றது. அந்த மின்கம்பங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்யும்படி பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]
ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் பயங்கர சூறாவளி காற்று வீசியதால் அங்குள்ள 92 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் மகினோஹாரா நகரில் நேற்று திடீரென்று சூறாவளி காற்று சுழற்றியடித்தது. அதில் அங்குள்ள கட்டிடத்தில் மேற்கூரைகள் பயங்கர காற்றில் பறந்தன. மேலும் கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் சுக்குநூறாக நொறுங்கியது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கார்கள் சாலைகளில் கவிழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். ஆனால் அந்த சூறாவளி காற்றினால் யாருக்கும் எந்த பாதிப்பும் […]
திண்டுக்கல் மாவட்டம் பேத்துப்பாறை கிராம பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை, கணேசபுரம், அஞ்சுவீடு ஆகிய கிராமங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. பேத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானை ஒன்று உலா வருகிறது. மேலும் அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து […]
நாகையில் பழுதான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாகை மாவட்டம் சேஷமூலை ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி 30,000 கொள்ளளவு கொண்டது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால் ரூ.30,800 செலவில் சீரமைக்கப்பட்டது. […]
ஆந்திராவில் பரவும் மர்ம நோயால் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் எலுரு என்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களின் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அழைத்து வரப்பட்ட அதிமுகவினர் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் முன்பு கூடினர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஆளுங்கட்சியினரின் இந்த அலட்சியத்தால் கொரோனா பரவக் கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் […]