கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஊராட்சியில் அளேசீபம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஓசூர்-தர்மபுரி மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சாலை ஓரமாக இருக்கும் வீடுகளில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரமாக புதிதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டதாக கூறி ஒரு வீட்டின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 4,79,999 நிதி […]
Tag: பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தை பொறுத்தவரை ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகள் தமிழ்நாட்டில் வந்த பிறகு குறைந்தபட்ச கட்டணம் 39 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதோடு பயணிகள் பயணம் செய்யும் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சேவையை வீட்டில் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வஉசி பூங்காவில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, பெங்களூர், ஒட்டன்சத்திரம், தாளவாடி, திண்டுக்கல், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால் பருவமழையின் காரணமாக விளைச்சல் குறைந்ததால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தக்காளி […]
சாலையில் ரூபாய் நோட்டுகளை வாலிபர் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலை பகுதியான பெஜிலிட்டி அமைந்துள்ளது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வாலிபரின் கையில் ஏராளமான ரூபாய் நோட்டுகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனால் பயந்து போன வாலிபர் தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடினார். […]
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை
தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையில் நடுவே வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அப்பகுதியில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து தேவனூர் நாடு ஊராட்சியில் உள்ள அரிப்பாலம் கிராமத்தில் இருந்து விளாரம் செல்லும் சாலையின் குறுக்கே திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு நீண்ட தூரத்திற்கு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி […]
இந்த மாதத்துக்கான வீட்டு மற்றும் வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். […]