சாலையில் திடீரென 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்கமுடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமபடுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பனங்காட்டங்குடியில் இருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையில் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசடிபாலம் அருகே திடீரென 1௦௦ மீட்டர் அளவிற்கு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாடி கிராமத்திலும் இதேபோல் சாலை விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் […]
Tag: பொதுமக்கள் அவதி
தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக பணக்கள்ளி, குளியாடா, ஆசனூர், திம்பம், பெஜலெட்டி, கோடிபுரம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர் பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்வதற்கு தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தரைபாலம் […]
கனமழையின் காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள மிஸ்ஸிப்பி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக 2 நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சத்தால் 1.5 லட்சம் பொதுமக்கள் குடிப்பதற்கும், பல் […]
கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகா மற்றும் கேரள மாநில வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி […]
வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை அமைந்துள்ளது. இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 9 அடி ஆகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து […]
வெள்ளப்பெருக்கினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 83,800 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, பிலிகுண்டலு, ராசி மணல், அஞ்செட்டி, நாட்றா பாளையம், தேன்கனிக்கோட்டை மற்றும் […]
வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 270 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் மீட்டு அரசு […]
மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்பிறகு சேலையாறு அணைக்கு வினாடிக்கு 2676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கன மழை பெய்துள்ளது. […]
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என அண்மையில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் தமிழகம்,ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கிராமப்புறங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் எரிபொருள் இல்லாமல் பெட்ரோல் இல்லை என போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக […]
தமிழகத்தில் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீரென்று மின் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கோவை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். கரூர், புலியூர், காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட தாகவும், பல இடங்களில் ஒரு மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் […]
பலத்த மழையின் காரணமாக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதிகளில் அரை மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள கீரிப்பாறை பகுதியில் இருந்து லேபர் காலனிக்கு செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலில் இப்போதே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் பொதுமக்கள் குடிக்கவும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் குடங்களை தலையிலும், தள்ளுவண்டியிலும் சுமந்து கொண்டு […]
மட்காத குப்பை கிடங்கிற்கு மர்மநபர் தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகைமூட்டமாக இருந்ததால் அப்பகுதியில் அவதியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பின்புறம் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் குடியிருப்பின் எதிரே நகராட்சி நிர்வாகத்தினர் மட்காத குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பில் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மட்காத குப்பைகளை கொட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் அந்த கோரிக்கைகைக்கு […]
கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் சாலைகளில் தேங்கிய நிலையிலும், குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக கூடலூர் அப்பாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் […]
வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் அனைவரும் இந்த போராட்டதில் பங்கேற்றுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 78 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஊழியர்கள் 380க்கும் மேற்பட்டோர் வங்கியை புறகணித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட […]
கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்பு முழுவதும் வெள்ளம்போல் நீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி ஊராட்சியில் கொசக்குடி கண்மாய் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கண்மாய் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறினால் அப்பகுதியில் உள்ள மாரியாயிபட்டினம் குடியிருப்பு பகுதி நீர் சூழ்ந்து பாதிக்கப்பட ஆபத்து இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்தது. அதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேகரன், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அங்குள்ள 2500-க்கும் அதிகமான குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவதிப்பட்டனர். இதையடுத்து பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன் புரத்தில் உள்ள 4 தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. […]
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பட்டாளம், புளியந்தோப்பு கோவிந்தபுரம், கேம்.கார்டரன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பட்டாளம், புளியந்தோப்பு, கோவிந்தபுரம், கே. எம். கார்டன், தட்டான் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் கடும் […]
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஏற்காட்டில் உள்ள குப்பனூர் சாலையில் நேற்று பெய்த கனமழையால் 5 கிலோமீட்டர் தொலைவில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். முன்னதாக ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பட்டது. அதனால் […]
தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, சத்திரக்குடி, பார்த்திபனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். மேலும் பொன்னையாபுரம் தியேட்டர் பகுதியில் இருந்த […]
ராமநாதபுரம் மாவட்டம் கிராம பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் ஊராட்சியில் மேலதில்லையேந்தல், கீழ தில்லையேந்தல், மோர்குளம், சின்னபாளையேந்தல், பிளாதோப்பு, மருதன்தோப்பு, முனீஸ்வரன் என பல்வேறு கிராமங்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஊராட்சியில் இருக்கும் கிராமங்களுக்கு முறையை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் மே 31 வரை முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் காய்கறி, மளிகை கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 931 ரேஷன் கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டுள்ளன. இதனை அறியாத சில குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று அரிசி சர்க்கரை போன்ற அத்தியாவசிய […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்கள் இணைய தள வசதி முடங்கியதால் அவதி அடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் கடைத்தெருவில் அஞ்சலகம் ஒன்று உள்ளது. அந்த அஞ்சலகத்தை சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாப்பேட்டை, வாய்மேடு, மருதூர் தெற்கு, வண்டுவாஞ்சேரி, பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அஞ்சலகத்தில் காப்பீட்டு திட்ட வரவு செலவுகளும், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளும், ஆர்.டி கணக்குகளும் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் […]
கொரோனா தடுப்பூசி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மயிலாடுதுறையில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை இரண்டு முறை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசியை போட்ட பிறகு இரண்டாவது தடுப்பூசியை 15 நாட்களுக்கு பின் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பு வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அந்த அளவிற்கு பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் 102 டிகிரி வெயில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே உள்ளனர். அதன்பின் மாலை நேரங்களில் மட்டும் வெளியில் வருகின்றனர். சாலையில் நடந்து செல்வோர் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் […]
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீர்கள் சாலையில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2007-ம் ஆண்டிலிருந்து பாதாளசாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் ஆங்காங்கே உள்நுழைவு தொட்டிகள் உடைந்து சாலைகள் உள்வாங்கியுள்ளன. மயிலாடுதுறையில் 15 இடங்களில் ஆள்நுழைவு தொட்டிகள் உடைந்து சேதமடைந்ததுள்ளது. மேலும் சில நாட்களுக்கு பின் அவை சீரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 16-வது இடமாக தரங்கம்பாடி பகுதியில் ஆள்நுழைவு தொட்டி உடைந்துள்ளது. […]
சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]
டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]