திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலைகோட்டைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது முத்தழகுபட்டி-சின்னகாளைநகர் சந்திப்பு பகுதியில் 2 பெண்கள் நடந்து சென்றனர். அப்போது ஒரு கல் பயங்கர சத்தத்துடன் மலைக்கோட்டையில் இருந்து உருண்டு வந்ததால் பெண்கள் அச்சத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து எதிரே சாலையில் சுமார் 30 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது கல் விழுந்தது. மேலும் பள்ளி மாணவர்களை […]
Tag: பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் மாணவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்வது போல் தெரியவில்லை. படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்தாலும் கூட படியில் தொங்குவது தான் கெத்து, ஸ்டைல் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் காட்பாடி மற்றும் பாகாயம் பேருந்துகள் நூற்றுக்கணக்கான அளவில் இயங்கி வருகிறது. […]
சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு வீடியோ பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிலர் மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு பசியோடு ஒரு நாய்க்குட்டி வர அந்த நாய்க்கு ஒரு டம்ளரில் ஒருவர் மதுவை ஊற்றி வைக்கிறார். அந்த நாய்க்குட்டி தண்ணீர் என நினைத்து மதுவை குடித்து விட்டது. மது குடித்ததால் நாய் குட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு சிறிது நேரம் அங்கேயே படுத்து விட்டது. அதன் பிறகு அவ்விடம் […]
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாத்தூர் தொட்டிபாலத்தில் அடிபகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் நீட்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் இடுகாட்டுப்பதையில் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூர், நெருஞ்சிப்பேட்டை, குருவரெட்டியூர், சின்ன பள்ளம் போன்ற பகுதிகளில் மிக முக்கியமான 7 பள்ளங்கள் அமைந்துள்ளது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கடந்த 3 ஆண்டுகளாக பாலமலையில் மழை பெய்யாததால் பள்ளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கனமழை காரணமாக சிறு சிறு திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதுகுறித்து பாலமலையில் இருந்து வந்த மக்கள் கூறியதாவது, சின்னபள்ளம் வழுக்குப் பாறையில் இருக்கும் அருவியில் 60 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து […]
ரேஷன் கடையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அனந்தகிரி இரண்டாவது தெரு ரேஷன் கடையில் எடையாளர் மட்டுமே இருப்பதால் ஒருவரை பில் போட்டு முடித்து, அவரே பொருட்களை எடை அளந்து பொது மக்களுக்கு வழங்குவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் வேலைக்கு செல்ல […]
5௦ ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை. சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமாக 2 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. இந்த வீடு சுமார் 5௦ ஆண்டுகள் பழமையானது என்பதால் வீட்டின் மேல் பகுதியின் சுவர் பலவீனமான நிலையில் விரிசலோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென வீட்டின் 2வது மாடியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் […]
அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, பல்வேறு இடங்களில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவசர […]
சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. சிவகாசியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் என பல்லாயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. தொழில் நகரமாக கருதப்படும் சிவகாசிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வர்த்தகர் கள் தொழில் ரீதியாக வந்து செய்கின்றார்கள். சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு புதிய நகராட்சி அமைக்க பட்டது. விருதுநகரில் இருந்து சிவகாசி வருபவர்கள் திருத்தங்கல் வழியாகத்தான் வரவேண்டும். சிவகாசியில் இருந்து […]
மர்மமான முறையில் ஆறு ஆடுகள் இறந்து கிடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேகுபட்டி ஊராட்சி பாண்டியம்மன் நகர் வீதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்களது வீட்டிற்கு பின்புறத்தில் ஆடுகளை கட்டி வைத்துள்ளனர். நேற்று காலை மர்மமான முறையில் 6 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ஜோதி அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் உடம்பில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. […]
குப்பை கிடங்குகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அதிக அளவில் நுரையீரல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐஐடி கூறியுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ஒரு முக்கிய ஆய்வினை நடத்தியது. இதற்காக சென்னை 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது particulate matter குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பர்டிகுலேட் மேட்டர் என்பது காற்றில் கலந்துள்ள தூசுகள், அழுக்கு, அசுத்தமான திரவ துளிகள், கரி, புகை போன்றவற்றை குறிக்கும். இந்நிலையில் காற்றில் அசுத்தங்கள் கலந்துள்ளதா […]
ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. இந்த போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது அரசின் தலையாய கடமையாகும். இந்த போக்குவரத்திற்காக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் போன்ற பல வாகனங்கள் இருந்தாலும் ரயிலில் செல்வதற்கே மக்கள் விரும்புகின்றனர். ஏனெனில் ரயிலில் செல்வது மிகவும் பாதுகாப்பாக இருப்பதோடும், கட்டணமும் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக […]
மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் என்று செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து பேருந்துகளிலும் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகமானது பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் எந்த விதி முறையையும் பின்பற்றாமல் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் பிறகு பேருந்து நிற்கும்போது ஏறாமல் கிளம்பிய போது […]
மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது பொதுமக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த மின்சாரத்தால் ஆபத்து நேர்ந்தாலும், மக்களின் தினசரி தேவையாகவே மின்சாரம் மாறிவிட்டது. குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் பலத்த காற்று வீசும் சமயங்களில் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மூலமாக கூட சில சமயங்களில் ஆபத்து ஏற்படுகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள […]
தஞ்சாவூர் மாவட்டம் தென்னூர் அருகே தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரையிலான சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னூர் பகுதியில் சாலை வளைவாக இருந்தது. இந்த சாலையை நேராக மாற்றி விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விரிவாக்க பணியின் போது சாலையில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் சாலையின் நடுவே வைத்துவிட்டு தார் சாலை போட்டிருக்கின்றனர். இந்த மின் கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் […]
தொடர் மழையின் காரணமாக பாலம் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண்ணரிப்பு ஏற்பட்டு 5 இடங்களில் உள்ள பால்ம் உடைந்து விழுந்தது. இதேப்போன்று கூடலூரில் உள்ள ஆணை செத்த கொல்லி பகுதியில் அமைந்துள்ள பாலத்திலும் […]
ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதை ஆக மாற்றப்பட்டது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் இடையே கடந்த 2017-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதே வழித்தடத்தில் மற்றொரு ரயிலும் இயக்கப்பட்டது. இதனால் 2 நேரங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக ரயில்கள் இயங்கியது. அதன் பிறகு பழனிக்கு செல்லும் ரயிலும் […]
வீடுகளை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஏ. நாகூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் மக்கள் வீட்டிற்குள் தங்குவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் இரவு […]
கண்மாயில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி பகுதியில் இருக்கும் கண்மாய்கள் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடந்த ஆண்டு நெல்லில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கண்மாய் தண்ணீர் வற்றி மீன் பிடிக்க ஏதுவாக இருப்பதால் மீன்பிடித் திருவிழாவும் நடைபெறுகிறது. தற்போது பள்ளப்பட்டி பெரிய கண்மாயில் இருக்கும் விரால் மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே கண்மாய் நீரில் […]
இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு கேட்டு பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு வழங்கியுள்ளனர். அப்போது காடையாம்பட்டி எடுத்துள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்து மனு ஒன்றை […]
சாலை விரிவாக்க திட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மயானத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சப்-கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனுக்களை வழங்கியுள்ளனர். அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தினர் மற்றும் கோலார்பட்டியை சேர்த்த பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கோலார்பட்டியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து […]
புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் சுமார் 6 கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதில் 3 கட்டிடங்கள் பழுதடைந்ததால் 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை நேரங்களில் மாணவர்கள் ஒரே […]
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே மஞ்சமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அரவேனு – அளக்கரை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு ஒற்றையடிப் பாதை வழியாக 400 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பகுதிகள் கரடு முரடாக காணப்படுவதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு […]
வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுப்பதற்காக அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த யானைகள் வீடுகளை நாசம் செய்வதுடன் விவசாய நிலங்களையும் நாசம் செய்து வருகிறது. இந்த காட்டு யானைகள் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, பாக்கு மரம், வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் […]
கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் வங்கிகள் போன்றவை அமைந்துள்ளது. இதனால் உப்பட்டி, தொண்டியாளம், பொன்னானி, குந்தலாடி, முக்கட்டி, கரியசோலை போன்ற பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செல்கின்றனர். இது தவிர கேரளாவிற்கு செல்வதற்கும் பந்தலூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதன் காரணமாக பந்தலூர் பகுதிக்கு […]
அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் ஆர்.கொமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலம், […]
திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதன்பிறகு ஜனவரி முதல் மே மாதம் வரை வசந்த காலம் நிலவுகிறது. இந்த நேரத்தில் பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் கூடலூர் பகுதியில் இருக்கும் கோயில்களில் திருவிழா நடத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் […]
தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் அரிசியில் கல், மண், குப்பைகள் போன்றவைகள் இருப்பதாகவும், சமைத்து உண்ண முடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை அரசு எடுத்து தரமான […]
மழையூர் கிராமத்தில் அரசு பேருந்து தினமும் சரியாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம். கறம்பக்குடி அருகில் மழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 1800 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு வெள்ளாளவிடுதி, கருப்பட்டி பட்டி, சொக்கநாதபுரம், அதிரான்விடுதி, மீனம்பட்டி, கணபதிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் 100க்கும் அதிகமான மாணவ மாணவிகள் வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த கிராமங்களிலிருந்து படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர […]
கூடுதலாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கொட்டையூர் குடியநல்லூர், வேங்கைவாடி, சித்தலூர், பனையங் கால், புக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் வீடு […]
சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் திருவட்டார், சாமியார் மடம், அழகியமண்டபம், சித்திரங்கோடு ஆகிய 4 ஊர்களின் சாலைகளும் இணைகிறது. இதைத்தொடர்ந்து கண்ணனூர் ஊராட்சி மற்றும் கோதநல்லூர், வேர்கிளம்பி பேரூராட்சிகளின் எல்லையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலைகளின் வழியாக அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் போன்ற பல்வேறு வாகனங்கள் செல்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி வீடுகள் மற்றும் […]
கால்வாயை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூர் பகுதியில் இருக்கும் திற்பரப்பு அருவியின் மேல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதில் வலதுகரை மற்றும் இடதுகரை என இரண்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருக்கும் வலதுகரை கால்வாய் மூலம் சிதறால், இடைக்கோடு, முழுக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை போன்ற கிராமங்களுக்கு தண்ணீர் விடப்பட்டது. இதனால் குளங்கள் பெருகி விவசாயம் செழிப்பான முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சரியான […]
வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனையடுத்து நாங்கள் கூலித்தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சொந்தமாக எவ்வித சொத்துக்களும் இல்லை. மேலும் வாடகை கொடுக்கவும் […]
மருத்துவமனை அருகே கீழே விழும் நிலையில் இருந்த பழமையான மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வேரோடு வெட்டி அகற்றியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் பழமையான தூங்கு மூஞ்சி வாகை இன மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு இந்த மரம் திடீரென பட்டு போனதால் மிகவும் வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழும் […]
கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள தடதாரை, அத்திகுண்டா, ஏரிக்கரை, பந்திகுறி, மாதேபள்ளி, முஸ்லிபூர், எடகம்பள்ளி போன்ற கிராமங்களிலிருந்து பேருந்து மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் […]
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வழி சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாகத்தான் கும்பகோணம், குடவாசல், தஞ்சாவூர், கொரடாச்சேரி, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் பலவிதமான வாகனங்கள் செல்கின்றன. அந்த பகுதியில் சாலை குறுகிய அளவில் இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் […]
பொதுமக்கள் குளத்தை மூடக் கூடாது என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து பணிக்கம்பட்டி செல்லும் சாலையில் டிகோட்டாம்பட்டி அருகில் குளம் ஒன்று உள்ளது. மழை நேரங்களில் இந்த குளம் நீர் நிறைந்து காணப்படும். இந்நிலையில் சில மாதங்களாக அந்த குளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும் கழிவுநீர் உந்து நிலையத்தை அமைப்பதற்காக சிலர் இந்த குளத்தை மூட முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அந்த பணியை […]
சாலையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் நட்டிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து கோதாவடி மற்றும் கிணத்துக்கடவு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட விவசாய […]
இடிந்து விழுந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில் அங்கன்வாடி பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்று பள்ளிகளும் சாலையோரத்தில் அமைந்துள்ளதால் இதனைச் சுற்றியும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கஜா புயலின் போது அந்தப் பகுதியில் இருக்கும் மரங்கள் விழுந்து பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து […]
மேம்பாலத்தின் இருபுறங்களிலும் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் அருகில் கிழக்கு நீலம்பூர் கிளை கால்வாயின் மீது ஒரு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் மேம்பாலத்தின் இரு பக்கத்திலும் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தத் தூண்களில் எந்தவித அறிவிப்பும், ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாததால் அந்தப் பகுதியில் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன […]
தாமதமாக எரியும் மின் விளக்குகளை சரி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாந்தபிள்ளை கேட் பகுதியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை, காரைக்கால், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மேம்பாலம் வழியாக தான் செல்கிறது. அதுபோக மேரிஸ் கார்னரில் இருந்து வண்டிக்காரத்தெரு பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இந்த மேம்பாலம் வழியாக […]
குடிநீர் இணைப்பு செய்து தரக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள உலகநாதபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் முறையான குடிநீர் வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் தள்ளுவண்டிகளின் மூலம் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல […]
காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யும்படி பொதுமக்கள் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கோரையாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு காவிரி குடிநீர் மட்டும் விநியோகம் செய்யும்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் […]
பழைய தார் சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைத்ததால் வீட்டின் கேட்டுகளை திறக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட மோகனூரில் இருந்து கொங்கு நகருக்கு செல்லும் சாலை பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுமார் 26 லட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மீது புதிய சாலையை போட்டுள்ளனர். இதனால் […]
நீல நிறத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் பெரியார் நகர், நாராயண நகர், அம்மன் நகர், அப்பன் பங்களா, அய்யன் தோட்டம், கிழக்கு காலனி, மேற்கு காலனி, தெற்கு காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குழாய்களை திறந்தபோது நீல நிறத்தில் தண்ணீர் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபம் புதர் மண்டி காணப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையை கர்னல் ஜான் பென்னிகுயிக்கை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு சார்பில் லோயர்கேம்ப்பில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதி கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 181 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக […]
புதர் மண்டி கிடக்கும் பெண்கள் கழிப்பறை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி உள்ள 8-வத் வார்டு காந்திகிராமத்தில் பொது பெண்கள் கழிப்பறை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிப்பறை வளாகத்தில் இருந்த ஆழ்துளைக்கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்ததால் கழிப்பறை மூடப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சில மாதங்களாக கழிப்பறை பராமரிக்கப்படாமல் அப்பகுதியில் செடிகள் கொடிகள் வளர்ந்து மிகவும் புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. […]
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21-வார்டுகளுக்கும் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காகவே லோயர்கேம்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக 21-வது வார்டு லோயர் கேம்ப் பகுதியில் மிகவும் கலங்கலான, மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த […]
போடி நகராட்சியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகளை பிடித்து ஊருக்கு வெளியே விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி நகராட்சி மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளில் பன்றிகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் போடி நகராட்சி ஆணையாளர் சசிகலாவிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் உடனடியாக அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நகராட்சிகளில் சுற்றித்திரிந்த சுமார் 40 […]
மூஞ்சில்கரடு மலைப்பகுதியில் உள்ள ராட்சத பாறையை ஒன்று உருண்டு கீழே விழும் சூழலில் இருப்பதால் அதனை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மூஞ்சில்கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் மழையின் அடிவாரத்தில் விவசாயிகள் தக்காளி, நிலக்கடலை, மிளகாய், பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் […]