திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.பங்களா கிராமத்தில் 200 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை திண்டுக்கல்-நத்தம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் வெற்றி வேந்தன் ஆகியோர் சாலை மறியலில் […]
Tag: பொதுமக்கள் சாலைமறியல்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனந்தாங்கல் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், சாலை வசதி போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மனந்தாங்கல் பகுதியில் உள்ள ஒருசில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால் அந்த கால்வாயில் கழிவுநீர்கள் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் […]
தேனி மாவட்டத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசபட்டியில் ரேசன்கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசிகள் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அரிசி எவ்வித பிரயோஜம் இல்லை என வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் பெரியகுளம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த தென்கரை காவல்துறையினர் […]