இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வருகின்ற 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தற்போது […]
Tag: பொருளாதாரம் நெருக்கடி
இலங்கை நாட்டிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார். இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உரம், […]
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இடங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டை போல பாகிஸ்தானிலும் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் எரிபொருள் இறக்குமதியின் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் […]