பாரிஸ் நகரில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வருகிற 2023-ம் ஆண்டு பெரும் அளவில் சரியும் என்று கூறியுள்ளது. அதோடு 2023-ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.3% மட்டும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா-உக்ரைன் போர் தான். ஏனெனில் போரின் காரணமாக உலக அளவில் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவைகள் […]
Tag: பொருளாதார வீழ்ச்சி
75 ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இலங்கை நாட்டில் கிட்டத்தட்ட 75 ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அன்னியச்செலாவணியில்லாமல் இறக்குமதி பெரும் பாதிப்புக்குள்ளானதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளதால் சாதாரண மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் எரிபொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் அல்லாடுகின்றனர். இனியும் பொறுத்துப் பயனில்லை என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபச்சேவுக்கு எதிராக மக்கள் அறப்போராட்டத்தில் […]
லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளது. மேலும் தலைநகர் பெய்ரூட்டில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் டயர்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதற்கிடையே மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருவதாகவும், சட்ட விரோத கும்பல்கள் மக்களை அச்சுறுத்துவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் வீட்டு வாடகை 2 லட்சம் லிராவாக […]
ஆப்கானில் பொருளாதாரம் சீர்குலைவால் அந்நிய செலாவணி நோட்டுகளுக்கு தலீபான் அரசு தடை விதித்துள்ளது. தலீபான்கள் ஆட்சி அமைத்து வரும் ஆப்கானில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் அந்நாட்டின் ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. அதோடு, வெளிநாடுகளில் உள்ள ஆப்கான் சொத்துக்களும் முடக்கப்பட்ட நிலையில் வங்கிகள் கடும் பணநெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. சர்வதேச நாடுகளும் தலீபான் அரசை அங்கீகரிக்காத போதும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரூபாய் நோட்டுகள் ஆப்கானில் புழக்கத்தில் உள்ளன. அந்த வகையில், அமெரிக்க டாலருக்கு, எவ்வித தடையும் இன்றி பொருட்களை […]
இராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் உணவு மற்றும் எரிபொருள்களுக்கான விலைவாசி பெருமளவில் உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ஆட்சியை கலைத்து இராணுவத்தினர் அதிகாரத்தை கைப்பற்றினர். இதனையடுத்து இராணுவத்தினர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகி மற்றும் அதிபர் என் மைன்ட் உட்பட பல அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் அடைத்தனர். இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பொதுமக்களும் கிளர்ச்சியாளர்களும் சூகிக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்துகின்றனர். இதில் […]
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளார். வடகொரியா நாடு கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து, உலகிலுள்ள பிற நாடுகளுடனான உறவை கைவிட்டது. மேலும் பிற நாடுகளிலிருந்து, தங்கள் நாட்டிற்கு வரும் சரக்கு கப்பல்களும் ரத்து செய்யப்பட்டது. எனவே வட கொரியாவில் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. மேலும் அமெரிக்காவால், வடகொரியாவிற்கு பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வடகொரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே […]