தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் பாட பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வில் பங்கேற்ற இடங்களை தேர்வு செய்த பட்டியல் இன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதனை […]
Tag: பொறியியல் கல்லூரி
தமிழகத்தில் பிஇ பிடெக் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு தொழில் பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி […]
சென்னை அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் இன்று முதல் தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு கடந்த 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த தரவரிசை பட்டியலில் குறைகள் மற்றும் ஆற்றிய பணி இருக்கும் மாணவர்களிடம் மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அவகாசம் முடிவடைந்தது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கவுன்சிலிங் இன்று முதல் தொடங்க […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் உயர் கல்வியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளை சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், எம்ஐடி வளாக குரோம் பேட்டை பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கோவை PSG மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. அரியலூரில் உள்ள […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங்கை தமிழக உயர்கல்வித் துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக கல்லூரிகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 8 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 12 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் படித்த […]
நாடு முழுவதும் 3500 க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 500 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் அந்தந்த மாநிலங்களில் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களில் அடிப்படையில்தான் மாணவர்களிடமும் கல்விக் கட்டணம் வசூலிக்க படுகிறது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 75 ஆயிரம் முதல் 85 ஆயிரம் […]
கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து பாதிப்பு குறைந்த நிலையில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 1 வார காலத்திற்கு முன்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் 2021-22 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் தொடக்கம் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும், மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப O, A, B, C, D, E என கிரேடுகள் வழங்கப்படும். ஆனால் தமிழகம் முழுவதும் 60 க்கும் அதிகமான தன்னாட்சி பொறியியல் […]
பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 74.28 கோடி கட்டணத்தை தமிழக அரசு விடுவித்துள்ளது. இதில் தரச்சான்று படிப்புகளுக்கு ரூபாய் 50 ஆயிரம், வளர்ச்சி நிதி 5000, விடுதி கட்டணம் 40 ஆயிரம், போக்குவரத்து கட்டணம் 25 ஆயிரம் என கணக்கிடப்பட்டு விடுவிக்கப்படும். அரசு அளிக்கும் கட்டண தவிர வேறு எந்த கட்டணத்தையும் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 5 ஆம் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் […]
நாளை, நாளை மறுநாள் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமை பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (வியாழன்), நாளை மறுநாள் (வெள்ளி) பண்டிகை விடுமுறையை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை அன்று (அக்டோபர் 16ஆம் தேதி) விடுமுறை என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக பள்ளிகளுக்கு 16ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. அதனை தொடர்ந்து, தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. சனிக்கிழமை தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை […]
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பாடங்களை தொடங்குவதற்கு 14 கல்லூரிகளுக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதி அளித்துள்ளது. இன்றளவில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்ட மறுக்கின்றனர் . இந்நிலையில் அகில […]
வீடு புகுந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொறியியல் கல்லூரி நிர்வாகி மீது சினிமா நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் அதிராமபட்டினத்தை சேர்ந்த சமீரா என்பவர் எதிரொலி என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது புழலில் வசிக்கிறார். இவருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரை படத்தில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீரா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் […]