பொலிவியாவின் தலைநகரில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவின் தலைநகரான லா பாஸில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான இயற்கை சீற்றத்தால் தலைநகரில் வசித்து வரும் 65,000 குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு மற்றும் மலைப்பகுதிகளிலிருந்து உருண்டு வந்த பாறை போன்றவற்றால் அங்கிருக்கும் வீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]
Tag: பொலிவியா
பொலிவியாவில் தனியார் விமானம் ஒன்று எஞ்சின் கோளாறால் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பொலிவியாவில் சி 402 வகையை சேர்ந்த சிறிய விமானம் ஒன்றில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆகையினால் பறந்து கொண்டிருந்த அந்த இலகுரக தனியார் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் என்ஜின் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சமவெளியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இருப்பினும் இந்த விமானத்தில் பயணம் செய்த 4 அதிகாரிகள் பயங்கர படுகாயங்களுடன் உயிருடன் தப்பியுள்ளார்கள்.
பொலிவியாவில் பலத்த மழை பெய்து வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட இரண்டு நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்திருக்கிறது. இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டு, சான்டா க்ரூஸ் என்ற நதியின் வெள்ளத்தில் தூர்வாரக்கூடிய கனரக இயந்திரம் அடித்துச் செல்லப்பட்டது. எனவே, அதனை இரண்டு பேர் மீட்பதற்கு முயன்றனர். அப்போது, அவர்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். எனவே, வெள்ளத்தில் மாயமான இரண்டு பேரையும் ஹெலிகாப்டர் கொண்டு பாதுகாப்பு படையினர், தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமலையின் இடையே ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் கயிற்றில் நடந்து இத்தாலி வீராங்கனை சாகசம் நடத்தியுள்ளார். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பொலிவியா நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆண்டிஸ் மலைகளில் உள்ளது. மேலும், நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் பெரும்பாலான பகுதியும் அங்குதான் அமைந்துள்ளன. இந்த நிலையில், இத்தாலி வீராங்கனை ஒருவர் ஆண்டியன் மலைப்பகுதியில் உறைந்த சாச்சகோமனி ஆற்றின் இரு பகுதியிலும் அமைந்துள்ள பனிமலையின் இடையே கயிற்றின் மேல் நடந்து சாகசம் நிகழ்த்தியுள்ளார். மேலும், இந்த சாகசத்தை கடல் […]
பொலிவியாவில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொலிவியாவின் டரிஜா நகரில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சாலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது சுமார் 5 அடி உயரத்திற்கு ஆலங்கட்டிகள் குவிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவ்வாறு சாலைகளில் இருந்து 5,000 டன் எடையிலான ஆலங்கட்டிகள் அகற்றப்பட்டதாக அந்நகர மேயர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பலத்த மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உணவில் கட்டை விரலை வைத்து பரிமாறிய உணவகத்திற்கு பொலிவிய அரசு அபராதம் விதித்துள்ளது. பொலிவியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பர்கரை ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து அவர் பர்கரை சாப்பிடுவதற்காக வாயில் வைத்த பொழுது ஏதோ தட்டுபட்டுள்ளது. உடனே அவர் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அதில் இருந்தது ஒரு மனிதனின் கட்டைவிரல் ஆகும். இதனை அந்த பெண் அங்கிருந்த உணவக ஊழியரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். […]
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இடைக்கால அதிபராக 2019ஆம் ஆண்டு முதல் 2020 வரை பணியாற்றியவர் ஜெனீன் அனீஸ். இவர் 2019 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த இவோ மொரலீசின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. இதனால் இந்த நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அனீஸ் கைது செய்யப்பட்டார். மேலும் இவோ மொரலீசின் ஆதரவாளர்கள் ஜெனீன் அனீஸ் இடைக்கால […]
பொலிவியா பல்கலைக்கழகத்தில் பால்கனியில் கூட்டமாக மாணவர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் தடுப்புக் கம்பி உடைந்ததால் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேற்கு பொலிவியாவில் உள்ள ‘பப்ளிக் யூனிவர்சிட்டி ஆப் எல் ஆல்டோ’ என்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறை அறிவியல் கட்டிடத்தில் கூட்டமாக மாணவர்கள் பால்கனியில் நின்று உள்ளனர் .அப்போது திடீரென்று பால்கனியின் தடுப்பு உடைந்ததால் 8 மாணவர்கள் கீழே விழுந்தனர். அதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்து 3 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து […]
5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தொற்றின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஐந்து தினங்களில் மட்டும் 400 மேற்பட்ட சடலங்கள் தெருக்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 62,357 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 2,273 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் குறைந்த அளவிலையே தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தொற்றின் பாதிப்பு […]