கலினின்கிராட் வழியே ரஷ்ய பொருட்களின் போக்குவரத்தில் எவ்வித சலுகைகளையும் வழங்க முடியாது என லிதுவேனியா தெரிவித்துள்ளது. அண்டை நாடான கலினின்கிராட் வழியே ரஷ்ய பொருட்களின் போக்குவரத்தை தடை செய்வதில் எவ்வித சலுகையும் வழங்க லிதுவேனியா மறுத்துவிட்டது. இது ரஷ்யா-நேட்டோ இடையிலான மோதலை தூண்டக்கூடிய ஒரு விரிவாக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பால்டிக் கடலில் உள்ள கலினின்கிராட், லிதுவேனியா வழியே ரஷ்யாவிற்கான ரயில் இணைப்பையும் பரவலாகப் பயன்படுத்துகிறது. ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கி செயல்படும் லிதுவேனியா, ரஷியாவின் […]
Tag: போக்குவரத்து தடை
தமிழகத்தில் இருந்து சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு நுழைவு வாயிலாக வேலூர் மாவட்டம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் – மங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதையடுத்து 1989-ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தின் மேல் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் வருகிற ஜூன் […]
இந்திய- கனடா போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு உலக நாடுகள் இந்தியர்களுக்கு விமான போக்குவரத்து தடை விதித்தது. இதனிடையே கனடா விதித்திருந்த தடை ஜூலை 21ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம்(செப்டம்பர் 21) வரை இந்தியாவுக்கான போக்குவரத்தை தடையை நீட்டித்துள்ளது. இதுகுறித்து கனடா போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகையில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை இந்தியர்களுக்கு பயண […]
ஆகஸ்ட் 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வர இருக்கிறார். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் பயணிக்கும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய- கனடா போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு உலக நாடுகள் இந்தியர்களுக்கு விமான போக்குவரத்து தடை விதித்தது. இதனிடையே கனடா விதித்திருந்த தடை ஜூலை 21ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம்(ஆகஸ்ட்21) இந்தியாவுக்கான போக்குவரத்தை தடையை நீட்டித்துள்ளது. இதுகுறித்து கனடா போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகையில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இந்தியர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது […]
பக்ரைன் அரசு கொரோனா அச்சம் காரணமாக சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது. உலகிலுள்ள பல நாடுகள் கொரோனா அதிகமுள்ள நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வர தடை அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் தடையை நீக்கி விடுகிறது. அதாவது கொரோனா பரவல் பிற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக இந்த தடை விதிக்கப்படுகிறது. அதன்படி பக்ரைன் அரசு, சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில், பேருந்து, போக்குவரத்துக்கு ஆகியவற்றிற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தொடங்கிய இந்த தடை செவ்வாய்க்கிழமை காலை வரை அமலில் இருக்கும் என்றும், சுகாதாரம், […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை விதிப்பது பற்றி இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]
தலைக்கேறிய குடிபோதையில் மாநகரப் பேருந்தை வழிமறித்து அலம்பல் செய்த போதை ஆசாமியால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பு.. மாநகரப் பேருந்து ஒன்று தாம்பரம் பணிமனையிலிருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த நபர், சாலையில் படுத்து உருண்டு, பிரண்டு அலப்பறை செய்தார். பின்னர் “என்ன நினைத்தாரோ தெரியவில்லை”!!.. தீடீரென ஓடிப்போய் அந்த பேருந்தை தனது இரண்டு கைகளாலும் தடுத்தார். உடனே ஓட்டுநர் பேருந்தை […]
சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி மகாத்மா காந்தி சாலையில் 30 அடி தூரத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி குமரன்நகர்யில் மகாத்மா காந்தி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. மேலும் இச்சாலையை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் அம்மா உணவகம் அருகில் திடீரென்று 30 அடி நீளம் 10 அடி ஆழத்திற்கு […]
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ள. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 373ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அம்பத்தூரை தொடர்ந்து கடைசியாக 15 ஆவது மண்டலமாக மணலியிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது […]
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிகைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதாவது, […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் பல்வேறு […]