கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குறுக்கு வழியை தேடிய முருகன் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளார். அதன்படி கூகுள் மேப் மூலம் முருகன் புதுநகர், இம்பீரியல் சாலை வழியாக லாரன்ஸ் ரோட்டுக்கு வந்தார். அங்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. அப்போது அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது. […]
Tag: போக்குவரத்து பாதிப்பு
ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான தனியார் சட்டக் கல்லூரிகள் அமைந்திருக்கிறது. இந்த சட்ட கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்வது வழக்கமாகும் அவ்வாறு கடந்த சில நாட்களாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகளை முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எஸ் ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததால் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மண் சரிவும், மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பள்ளத்தை சரி செய்தனர். இதன் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கருங்காலக்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நத்தம்- மூன்றுலாந்தர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பேருந்தை வழிமறித்தார். அப்போது ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய உடன் வாலிபர் திடீரென அடிப்பகுதிக்கு சென்று டயருக்கு முன்னால் படுத்து கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனரும், கண்டக்டரும் கீழே இறங்கி வாலிபரை எழுந்து வருமாறு கூறியும் அவர் வரவில்லை. இதுகுறித்து […]
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்களின் உடலை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பரத் உள்ளிட்டோர் சென்ற 17ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட […]
கிராம மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதவராயன்பேட்டை கிராமத்தில் தி.மு க பிரமுகரான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பூதவராயன் பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கடலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பழனிச்சாமியின் கழுத்து தோள்பட்டையில் இருந்த கொழுப்பு கட்டி அகற்றப்பட்டுள்ளது. […]
கனமழை காரணமாக கிராமங்களுக்கு வெள்ளம் புகுந்ததால் 16 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடந்தொரை, தேவச்சோலை, நெலாக்கோட்டை, பிதிற்காடு பாட்டாவயல் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. மேலும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சென்ற பத்தாம் தேதி தொரப்பள்ளி, இருவயல் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள்ளே வெள்ள நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதை அடுத்து பலத்த […]
ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் […]
தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக பணக்கள்ளி, குளியாடா, ஆசனூர், திம்பம், பெஜலெட்டி, கோடிபுரம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர் பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்வதற்கு தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தரைபாலம் […]
சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் நாகொண்டபள்ளி கிராமத்தின் வழியாக செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் அவ்வழியாக செல்வோர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் சாலையை சீரமைக்க கோரி நேற்று மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பொழுது சாலையை […]
சாலையில் மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள குமுழி, லோயர் கேம்ப், கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழுந்தது. இதனால் மலைப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து லோயர் கேம்ப் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலைகளில் கிடந்த […]
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் மலை பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் சிதறியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை சில நிமிடங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. தொடர் மழை எதிரொலியாக நகரை ஒட்டி உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, தேவதை அருவி, பாம்பார் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் வத்தலகுண்டு மற்றும் மேல்மலை செல்லும் பாதையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் […]
பழமை வாய்ந்த மரம் சாலையில் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்ததால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஆண்டுகள் பழமையான காட்டரசு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் […]
சேலம் மாவட்டத்திலிருந்து 320 அடி நீள காற்றாலை விசிறியின் றெக்கை லாரியில் ஏற்றப்பட்டு கரூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சேலம் to கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகில் லாரி வளைந்துசெல்ல வேண்டி இருந்தது. ஆனால் அந்த இடத்தில் லாரி திரும்பமுடியாமல் நின்றது. இதன் காரணமாக அங்கு பேருந்து , லாரி உட்பட […]
ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. நீலகிரி மாவட்டத்தில் சென்ற இரண்டு வாரங்களாகவே தென்மேற்கு பருவ மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னூர், எல்லநெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரம் கனமழை பெய்துள்ளது. மேலும் நடுவட்டம், மசினகுடி, கேத்தி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் பழமையான ராட்சத மரம் […]
விருதாச்சலம் சித்தலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள சாவடி குப்பத்தில் உள்ள குடிநீர் தொட்டி மூலமாக நகராட்சி நிர்வாகம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மோட்டார் பழுதடைந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இல்லாமல் தவித்த பொதுமக்கள் விருதாச்சலம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ட்ராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த […]
பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வயலூருக்கு செல்லும் பிரிவு சாலையில் 150 வருடங்கள் பழமையான அரசமரம் இருந்தது. நேற்று வீசிய சூறைக்காற்றில் அந்த மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீரமலை என்பவரது குடிசை மற்றும் பயணிகள் நிழற்குடை மீது விழுந்துவிட்டது. இதில் வீரமலை லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]
ஊட்டியில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் லவ்டேல் என்ற இடத்தில் நேற்று இரவு மரம் முறிந்து விழுந்ததனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை எந்திரம் மூலம் துண்டு […]
அரக்கோணம் அருகே மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தை அடுத்த இருக்கும் மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் குறுகலாக உள்ள பகுதியின் வழியே பேருந்துகள், வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக சரிவான சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளானதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சென்ற சில நாட்களாக மழை பெய்வதால் […]
ஊட்டியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சொன்ன நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணி தொடங்கி 2 மணி வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை ஆகிய இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன […]
திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவில் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் சுமார் 5 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ,தாளவாடி அருகே இருக்கும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடகாவிற்கு தினந்தோறும் நிறைய வண்டிகள் செல்வதால் இரவு நேரத்தில் ரோட்டை கடக்கும் வனவிலங்குகள் வண்டிகளில் மோதி இறப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் […]
சேலத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தின் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக அஸ்தம்பட்டி, பெரமனூர் உட்பட பல்வேறு இடங்களில் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி […]
நேற்று டெல்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஹைட்ராலிக் கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக பழுதடைந்து நின்றது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது என்றும், குருகிராமில் உள்ள ஹோண்டா கௌக்கில் இருந்து மஹிபால்பூர் சென்றடைய கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது என்றும் இயந்திரவியல் பொறியளர் ஒருவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையில் நடுவே வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அப்பகுதியில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து தேவனூர் நாடு ஊராட்சியில் உள்ள அரிப்பாலம் கிராமத்தில் இருந்து விளாரம் செல்லும் சாலையின் குறுக்கே திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு நீண்ட தூரத்திற்கு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி […]
போடிமெட்டு பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடி மெட்டு, குரங்கணி, கொட்டகுடி போன்ற பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை […]
கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே குளங்கள் உடைந்ததால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நாகர்கோவில்- பூதப்பாண்டி வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த காரணங்களால் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் அருகிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்கள் ஒழுகினசேரி பாலம் அருகிலும், நிறுத்தப்பட்டது. இதனால் […]
தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு பாதிப்படைந்தது. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் அருகே நின்று கொண்டிருந்த இலவ மரம் தொடர் மழை காரணமாக நேற்று காலை 8 மணியளவில் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததில் ரயில்வே மின்கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையம் செல்லும் ரயில் போக்குவரத்து சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து அறிந்த திருவள்ளூர் […]
தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்க்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை இருக்கிறது. 24 மணி நேரமும் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அந்த வழியில் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் திம்பம் சாலையில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த காரணங்களால் அங்கிருந்த […]
எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று எவர்கிரீன் சரக்கு கப்பல் வெற்றிகரமாக பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிப்தின் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதத்தில், ஜப்பான் நிறுவனத்திற்குரிய எவர்கிரீன் என்ற மிகப்பெரிதான சரக்கு கப்பல் பயணித்தது. அப்போது, கால்வாயின் இடையே திரும்பி தரை தட்டி நின்றுவிட்டது. இதனால், சூயஸ் கால்வாயின், போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சர்வதேச நாடுகளின் வர்த்தகத்தில் அதிகமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு, ஆறு நாட்களாக தீவிரமாக போராடி கப்பலை மிதக்க வைத்தனர். இதனையடுத்து மீண்டும் […]
ஜெர்மனியில் ரயில் ஓட்டுனர்கள் நேற்றிலிருந்து பணி நிறுத்தம் செய்ததால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் Leipzig, Dresden மற்றும் பெர்லின் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள், பணி நிறுத்தத்தால் எரிச்சல் அடைந்துள்ளனர். தற்போது தான் மீண்டும் சுற்றுலா தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பணி நிறுத்தம் தவறானது என்று ஒரு பயணி கூறியிருக்கிறார். மேலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பணி நிறுத்தம் செய்தவர்களை, சிலர் பரிதாபமாக பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் […]
சூயஸ் கால்வாயில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்திற்குரிய உலகிலேயே மிகப் பெரிதான எவர்க்ரீன் என்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று முக்கியமான நீர் வழித்தடங்களில் ஒன்றாக இருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றிருக்கிறது. அப்போது கால்வாயின் இடையில் திரும்பும் போது பக்கவாட்டில் தரைதட்டியதில் சிக்கி அங்கேயே நின்றது. இதனைத்தொடர்ந்து சுமார் ஒரு வாரமாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்பின்பு எவர்க்ரீன் சரக்கு கப்பல் […]
பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த அளவிலான தட்பவெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. குறிப்பாக ஸ்காட்லாந்தில் -16.7C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இது போன்று கடந்த 2010 ஆம் வருடத்தில் தான் இது போன்ற வெப்பநிலை பதிவாகி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் பிரிட்டனில் பனி பொழிவும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்த பட்டிருப்பதால் […]
பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுபொருட்கள் ரத்தாகியுள்ளது. பிரிட்டனில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை டெலிவரி செய்வதை பல்பொருள் அங்காடிகள் ரத்து செய்துள்ளன. பனி பொழிவு அதிகமாக பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன. மேலும் பாதுகாப்புக்காக ஓட்டுனர்களும் சாலை பகுதிகளில் நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் புதுவருட தினத்திற்கு முன்பு பனிப்பொழிவு 6 இன்ச் […]
அமித்ஷா வருகையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுமார் 1 மணி நேரம் சிக்னலில் ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமித்ஷா சென்னை வருகிறார் என்பதற்காக வாகனங்கள் வெகுநேரமாக சாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் சென்னை மீனம்பாக்கத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் சிக்னலில் நிற்கின்றன. இதற்கிடையே ஒரு ஆம்புலன்ஸ் வேறு மாட்டிக்கொண்டு நிற்கிறது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா, பாஜக ஆட்சியா என்பதே […]
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து திம்பம் மழை பாதையில் தக்காளி பாரம் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனத்தால் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று திம்பம் மழை பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் […]
வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்ற கணவரை விரட்டி சென்று மறித்து மனைவி நடு ரோட்டில் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையின் தென் பகுதியில் பெட்டர் என்ற ஒரு சாலை உள்ளது. இங்கு கோடீஸ்வரர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை மாலை பெட்டர்சாலையில் கருப்பு நிறத்தில் ரேஞ்ச்ரோவர் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதற்கு பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற கார், ரேஞ்ச் ரோவர் காரை விரட்டி சென்று பிடித்துள்ளது. அந்த வெள்ளை நிற […]
மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக […]