மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள குதிரைக்காரர் வீதி பகுதியில் பத்மினி என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் சங்கு,மணி மற்றும் துப்பட்டா ஆகியவற்றை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வருகின்றார். இவரின் இளைய மகன் முரளி (37)கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு முரளி தாய் பத்மினி இடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பணம் தர […]
Tag: போதை
கரூர் பேருந்து நிலையத்தில் உச்சக்கட்ட போதையில் கணவன், மனைவி இருவரும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் எழ முடியாமல் படுத்திருந்த பெண்ணை கணவர் எழுப்புவதற்காக அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து பெண்ணை அழைத்து சென்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மது எப்படி கிடைத்தது என போலீசார் […]
பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் கஞ்சா, குட்கா போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் கைது […]
கர்நாடகா மாநிலம், கலபுரகி மாவட்டம், வாடி டவுனை சேர்ந்தவர் விஷ்ணு ஜாதவ்(8). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விஷ்ணுவின் தந்தை அதில் இருந்து விடுபட மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அந்த மருந்தை மிளகாய் பஜ்ஜியில் விஷ்ணுவின் தந்தை தடவி வைத்து இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் மருந்து தடவி இருந்த மிளகாய் பஜ்ஜியை, விஷ்ணு சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவனுக்கு வாந்தி, […]
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக போதை, காவல் நண்பன் என்ற இரு குறும்படங்கள் வெளியீட்டு விழா காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் போதை, காவல் நண்பன் என்ற இரு குறும்படங்கள் வெளியீட்டு விழா காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், கல்லூரி […]
சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்வர் வீட்டில் சோதனை […]
தெலுங்கானாவில் இரண்டு இளம் ஆண்கள் குடி போதையில் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் ஜோகிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது நபர், அண்மையில் மெடேக் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்திருக்கிறார். முன்னதாக, இந்த இருவரும் துமாபலாபேட்டை கிராமத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் சந்தித்துள்ளனர். அங்கு எதார்த்தமாக இருவரும் பேசித் தொடங்க, உடனடியாக அது நட்பாக மாறியது.இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதத்தில், ஜோகிநாத் […]
காவல் துறையினர் விசாரணைக்கு சென்று வீட்டிற்கு வந்த வாலிபர் விஷம் குடித்தது தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருடைய மகன் ஹரிஷ் சனிக்கிழமை நண்பர்களோடு ஹோட்டல் சென்று உணவருந்தி விட்டு பின்பு பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், காவல் துறையினர் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி எழுதி வாங்கிவிட்டு அவரை அனுப்பி விட்டதாகவும், ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து […]
மதுவில் போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சித்தமநாயக்கன்பட்டி பகுதியில் எம்.புதுப்பட்டி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் முத்துமணி, கதிரேசன் ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டபோது மதுவுடன் போதை மாத்திரைகள் கலந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அதன்பின் […]
சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு காரணமாக போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலே முடக்கப்பட்டன. இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். தனிமையில் இருந்த சிலரின் பழக்க வழக்கங்களும் மாறியுள்ளது. இதன் அடிப்படையில் சிலர் மது மற்றும் போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளனர். மாணவர்கள் இணைய வழி கல்வி பயில்வதால் அவர்களின் அன்றாட நிகழ்வுகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இளம் பெண்களும் தங்கள் நண்பர்களை நேரில் […]
குடிபோதையில் சமையல் வேலை செய்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்குத் தெருவில் வசிப்பவர் சமுத்திரம். இவர் சமையல் வேலை செய்கிறார். கடந்த 11ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஊர் பொது கிணற்றில் இன்று சமுத்திரம் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், […]
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத […]
சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடை இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்துவதால் அதை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என நம்பப்படுகிறது பிரான்ஸில் சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு பலூன்களில் நிரப்பப்படுவதோடு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவதும் வழக்கம். ஆனால் அந்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் நைட்ரஸ் ஆக்சைடை போதைக்கு பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் அதிகரித்துள்ளது. இதனால் நைட்ரஸ் ஆக்சைடு வயது வராதவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் அந்த வாயு ஏராளமான பக்கவிளைவுகளை உடலில் […]
காஞ்சிபுரத்தில் ‘ஹான்ஸ்’ புகையிலையை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் பலரும் கடும் வேதனையில் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து வந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் கூட போதை […]