Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக தேடப்பட்ட போதை பொருள் மன்னன் கைது…. நாடு கடத்திய அதிகாரிகள்…!!!

ஆசியாவில் தேடப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் டிசே சி லோப் என்ற நபர் போதைப்பொருள் கடத்தலில் மன்னராவார். சீனாவை சேர்ந்த இவர், கனடாவின் குடியுரிமையை பெற்று ஜப்பானிலிருந்து நியூசிலாந்து நாடு வரை ஆசிய பசிபிக் நாடுகளில் பல ஆயிரங்கள் கோடி மதிப்பு கொண்ட போதை பொருட்களை கடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடத்தில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச காவல்துறையினர் அவரை கைது […]

Categories
தேசிய செய்திகள்

வாகனங்களில் போதை பொருள் கடத்தல்…. உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியை சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியின் டிரைவர் போதை பொருட்களை கடத்தியதால் போலீசார் கைது செய்யப்பட்டு இருந்தார். இருகைக்கு பின்னால் வைத்து போதை பொருளை டிரைவர் கடத்திச் சென்றிருந்தார். இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்களான காஷ்மீரை சேர்ந்த விஜய் கொஜ்ஜார்(72), சுனில் கவுசிக் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தங்கள் மீது பதிவான வழக்கு ரத்து செய்ய கோரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியும் போதைப்பொருள் கடத்துறீங்களா…. வசமாக சிக்கிய நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியிலுள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு சென்ற 2013 ஆம் வருடம் மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 2 பார்சல்கள் வந்தது. அந்த பார்சல்களில் ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுப்புவது போல் முகவரி இடம் பெற்றிருந்தது. இதனிடையில் இந்த பார்சல்கள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் இது தொடர்பாக கூரியர் நிறுவனத்தினர் போதைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பார்சல்களை காவல்துறையினர் பிரித்து பார்த்தபோது அதில் இருந்த காலணியில் 82 கிராம் எடையுள்ள […]

Categories
உலக செய்திகள்

பாப்பி செடிகள் சாகுபடிக்கு தடை…. மீறினால் விளைவுகள் மோசமாக இருக்கும்…. தலீபான்களின் அதிரடி உத்தரவால் பரபரப்பு….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் போதை பொருள் தயாரிக்க உதவும் பாப்பி செடிகளின் சாகுபடிக்கு தலீபான் அரசு தடை விதித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டில் அபின், ஹெராயின் போன்ற போதை பொருட்களை தலீபான்கள் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்கான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கோதுமை சாகுபடிக்கு பதிலாக அதிக வருமானம் வரக்கூடிய பாப்பி செடிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.  இந்த பாப்பி செடிகள் மூலம் தயாரிக்கப்படும்  போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது வழக்கம். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“தன்னை புதைக்க சவக்குழி தோண்டிய பெண்!”…. பிரேசிலில் கொடூர சம்பவம்….!!

பிரேசிலில் ஒரு பெண் தன்னை புதைக்க தானே சவக்குழி தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த அமன்டா அல்பாக் என்ற 21 வயது இளம்பெண் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று Florianopolis என்ற நகரில் இருக்கும் தன் நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட சென்றிருக்கிறார். அதன்பின்பு, அவரை காணவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து, கடந்த 3 ஆம் தேதியன்று சாண்டா கேடரினா கடற்கரைப் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

“சோதனை பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்!”.. 7 பேரின் உடல்கள் மீட்பு.. ரியோ-டி-ஜெனிரோவில் பரபரப்பு..!!

பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவிற்கு அருகில் போதை பொருள் கடத்தல் கும்பலை தேடியபோது 7 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனிரோ நகரத்திற்கு அருகில் இருக்கும் மாங்குரோவ் என்ற வனப்பகுதிகளுக்கு இடையில் வாழும் மக்கள், போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. எனவே, காவல்துறையினர் அந்த பகுதியில் அடிக்கடி சோதனை மேற்கொள்வார்கள். இந்நிலையில், அங்கிருந்து காவல்துறையினரால் ஏழு நபர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் காவல் துறையினரால் கொடுமைகளை அனுபவித்து […]

Categories
உலக செய்திகள்

“போதை பொருள் விருந்தில் பங்கேற்பு!”.. விபத்தில் பலியான மாடல் அழகிகள் குறித்து வெளியான தகவல்..!!

இந்தியாவில் வாகன விபத்தில் பலியான கேரள அழகி மற்றும் அவரின் தோழி தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த அன்சி கபீர் என்ற 26 வயது இளம்பெண், கடந்த 2019 ஆம் வருடத்தில், மிஸ் கேரளா பட்டம் பெற்றார். அதே அழகிப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்த, அஞ்சனா சாஜன், அன்சி கபீருக்கு நெருங்கிய தோழியானர். அதன் பின்பு, இவர்கள் இருவரும் திருச்சூரை இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து வாகனத்தில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தபோது, […]

Categories
உலக செய்திகள்

“சூரிச் விமான நிலையத்தில் மாட்டிக்கொண்ட பெண்!”.. சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமானநிலையத்தில் 73 வயது பெண்மணியிடம் போதை பொருள்  பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூரிச் விமான நிலையத்தில் சோதனை பணியில் இருந்த காவல்துறையினர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 73 வயது பெண்மணி மீது சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே, அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரிடம், 4 கிலோ அளவிலான கோகோயின் போதை பொருள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பெண்மணி, Sao Paulo என்ற பகுதியிலிருந்து, சூரிச் வழியே ஆம்ஸ்டர்டாம் பகுதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்…? ஷாருக்கான் மேலாளருக்கு சம்மன்…!!!

கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்திய இளைஞருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை உறுதி”.. மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை நிராகரிப்பு..!!

சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவில் வாழும் இந்திய இளைஞர் போதைப் பொருள் கடத்தியதற்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்று அறிவித்திருக்கிறது. மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் கடந்த 2009 ஆம் வருடத்தில் சிங்கபூருக்கு 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் தான், வாங்கிய கடனுக்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இவருக்கு கடந்த 2010ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே, […]

Categories
உலக செய்திகள்

“படகில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்!”.. செய்தியை பார்த்து வருத்தமடைந்த பொறியாளர்.. சோக பின்னணி..!!

கனடாவில் வசிக்கும் பொறியாளர் ஒருவர், ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்த படகில், போதைப்பொருள் இருப்பதாக, வெளியான செய்தியைக் கண்டு பெரும் சோகமடைந்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகள், பிரிட்டன் எல்லை படைக்கு கொடுத்த ரகசிய தகவலின் படி,  கரீபியன் கடல் பகுதியிலிருந்து, ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்த படகை, பிரிட்டன் காவல்துறையினர், நேற்று சோதனை செய்துள்ளனர். அதில் 250 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 2000 கிலோ கொக்கைன் இருந்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் உட்பட ஆறு பேரை […]

Categories
மாநில செய்திகள்

சிங்கம்-2 பட பாணியில்…. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது…!!!

சிங்கம்-2 திரைப்பட பாணியில் தூத்துகுடி கடலோரப் பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜோனாதன் தோர்ன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி பகுதியில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது கடலோர பகுதியில் வெளிநாட்டு நபர் ஒருவர் சுற்றித்திரிவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் சர்வதேச போதை பொருள் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச போதை பொருள் கடத்தல் …இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நபர்…!!!

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷான் சிங்(38) என்பவர்  வசித்து  வருகிறார்.அவர் சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தொழில் வருகிறார் . கடந்த 2016- 17 ஆம் ஆண்டுகளில்  பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக அவர் மீது   இந்தியா வழக்கு பதிவு செய்துள்ளது. அதனால் அவரை கைது செய்ய வேண்டுமென […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை…. சோதனை செய்த போலீசார்…. வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் கர்ப்பிணி போல நாடகமாடி போதைப்பொருட்களை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு அவ்வழியாக வந்த கர்ப்பிணி பெண் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை சோதனையிடும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அந்த பெண் கர்ப்பிணியே அல்ல என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன்னுடைய வயிற்றில் ஒரு தர்ப்பூசணியை மறைத்து வைத்திருந்துள்ளார். அவர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – கேரள முன்னாள் அமைச்சரின் மகன் கைது…!!

கேரள மாநிலம் முன்னாள் உள்துறை அமைச்சர் குடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகைகள் அனேக, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உடன் கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை தொடர்பு இருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் மரண வழக்கு: தீபிகா படுகோனேவிடம் 5 மணிநேர விசாரணை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனே இடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் விநியோகித்தது,  போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட புகார்களின் கீழ்  நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் விவகாரம் – தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராகிறார்..!!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு இன்று  ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் மும்பையில் நடிகையின் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் மர்மங்கள் நிறைந்த பின்னணியில் மரணமடைந்தது தொடர்பாக அவரது தோழி நடிகை ரியா சக்கரபோர்த்தி  மீது மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, என்சிபி ஆகியன தனித்தனியே […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு அக்டோபர் ஆறாம் தேதி வரை காவல்..!!

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை ரியா சக்கர போர்த்திக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு  போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்கரபோர்த்தியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரன் சோபிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“போதைப்பொருள் கடத்தல் விவகாரம்”… மும்பை, கோவாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை…!!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கோவா மற்றும் மும்பையின் பல இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்புமுனைகள் ஏற்பட்டு வந்த நிலையில் உள்ளன. இந்த தற்கொலை வழக்கை விசாரிக்ககையில் பலரின் கூட்டு முயற்சிகள், போதைப்பொருள் கடத்தல் போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதை பொருள் புகார் தொடர்பாக மும்பை மற்றும் கோவாவில் 7 இடங்களில் போதை […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை சற்றுமுன் கைது – பரபரப்பு செய்தி …!!

பிரபல நடிகை கைது செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கின்றது. நிமிர்ந்து நில்லு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் கடத்தல் பிரிவில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த போதை பொருள் கடத்தலில் கேரள நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை முதல் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக தொடர் விசாரணை நடிகை ராகினி […]

Categories
உலக செய்திகள்

“போதைப்பொருள் கடத்தல்” கைது செய்யப்பட்ட பூனை தப்பியோட்டம்… மீண்டும் பிடித்த காவல்துறை…!!

இலங்கையில் போதைப்பொருள் கடத்திய பூனையை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருக்கின்ற சிறை ஒன்றில் புகுந்த பூனையின் கழுத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பை இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அந்த பிளாஸ்டிக் பைக்குள் 2 கிராம் ஹெராயின், இரண்டு சிம்கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டு ஆகியவை இருந்திருக்கின்றன. அதனால் அந்தப் பூனை சிறையில் இருக்கின்ற ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று சிறையிலிருந்து பூனை தப்பி […]

Categories

Tech |