சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாக போருக்கு முடிவு கட்டுதல் அவசியம் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். பக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று தலைநகர் மணமாவில் அந்த நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவில் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வமத உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் முன்னணி முஸ்லிம் இமாம்கள் உலகின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் மற்றும் நீண்ட காலமாக மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஈடுபட்டு […]
Tag: போப் ஆண்டவர்
ரோம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் (85) இருக்கிறார். இவர் சமீப காலமாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்நூலையில் போப் ஆண்டவர் மூட்டு வலி பிரச்சனை மற்றும் வயது முதிர்வின் காரணமாக பதவி விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது. இதனையடுத்து மே மாத இறுதியில் பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் போப் ஆண்டவர் […]
கனடா நாட்டிற்கு சுற்று பயணமாக சென்ற போப் ஆண்டவருக்கு அங்கிருக்கும் பழங்குடியின மக்கள் கிரீடம் அணிவித்து மகிழ்ந்தனர். உலகில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தலைவராக இருக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ் கனடாவிற்கு சுற்றுப் பயணமாக சென்றிருக்கிறார். அவர், அல்பெர்டா மாகாணத்தின் மாஸ்க்வாசிஸ் நகருக்கு சென்றார். அந்த நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபை நடத்திய பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே, அந்த பள்ளிகளுக்கு சென்று பூர்வகுடியின மக்களிடம் மனம் […]
கனடாவில் 1900-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிகளில் தங்கி கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனா். அப்படி தேவாலய பள்ளிகளில் படித்த பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கனடாவின் தற்போதைய அரசு இதை ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்பும் கோரியது. இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரவேண்டும் என போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார். உக்ரேன ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் உக்ரேனில் அமைதி நிலவுவதற்காகவும் சிறப்புப் பிரார்த்தனையை நடத்தியுள்ளார். இதனையடுத்து இந்த பிரார்த்தனையில் ஏராளமான பிஷப்கள், பாதிரியார்கள், மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து […]
கனடாவில் பழங்குடியின குழந்தைகள் கத்தோலிக்க திருச்சபை நடைபெறும் உறைவிட பள்ளிகளில் கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சுமார் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்பு கூடுகள் அந்தப் பள்ளிகளின் அருகில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் இந்த அநீதிக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று வாடிகனில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், “நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு […]
உக்ரைன் ரஷ்யா இடையேயுள்ள போரானது தீவிரமடையும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். மேலும் இந்த போர் சமாதானத்திற்கு வரவேண்டும் என்று போப் ஆண்டவர் பிரார்த்தனை நடத்தி வருகிறார். செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாதிரியார்கள், பிஷப்கள், மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த நூற்றாண்டில் நடந்த 2 உலகப் போர்கள் தந்த கடினமான அனுபவங்களை மனிதர்கள் மறந்துவிட்டதாக போப் பிரான்சிஸ் கூறினார். இந்த […]
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், புதிய சீர்திருத்தங்களை வாடிகன் சட்டத்தில் கொண்டு வந்திருக்கிறார். கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு எதிராக போராட முக்கியத்துவம் வழங்கக்கூடிய விதத்தில் வாடிகன் சட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சீர்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார். அதன்படி, ‘நற்செய்தியை அறிவித்தல்’ என்னும் தலைப்பில் 54 பக்கங்களுடைய சீர்த்திருத்த சட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. சமீப நாட்களில் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள், கார்டினல்கள் போன்றோர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. எனவே, போப் […]
குழந்தைகளின் நலனை கருதி கடவுளின் பெயரில் போரை நிறுத்துங்கள் என்று போப் ஆண்டவர் ரஷ்யாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 18-வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் இந்தப் போரினை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் கோரிக்கை விடுத்திருந்தது. இததைத் தொடர்ந்து போப் ஆண்டவரும் போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ரஷ்யா அதனை ஏற்க […]
உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசிகள் தான் கொரோனாவுக்கு எதிரான வலிமையான போர் ஆயுதங்களாக உள்ளது. ஆனால் உலக அளவில் பலரும் தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே கத்தோலிக்க பத்திரிக்கையாளர்கள் கொரோனா நோய் தொற்று குறித்து பரவி வரும் தவறான கருத்துக்களை எதிர்த்து போராடுவதற்கு உண்மை சரிபார்ப்பு வலையமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று கத்தோலிக்க பத்திரிக்கையாளர்களை சந்தித்த போப் ஆண்டவர் […]
தங்கள் பிள்ளைகள் ஆணுக்கு ஆண் பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று பெற்றோர்களுக்கு வாடிகனில் பேசிய போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பேசிய போப் ஆண்டவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது தங்களது பிள்ளைகள் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவ்வாறு இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஒருபோதும் […]
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த முன்னாள் போப் ஆண்டவர் முனி பேராயராக இருந்தபோது கையாண்ட 4 பாலியல் தொடர்புடைய வழக்கில் குற்றம் புரிந்ததாக குழு ஒன்று விசாரணையின் மூலம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் இருந்துள்ளார். இதனையடுத்து ஜெர்மனியின் முனிச் உயர்மறைமாவட்டத்தின் குழு ஒன்று கடந்த 1945 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தேவாலயங்களில் பாதிரியார்கள் செய்த பாலியல் ரீதியான […]
போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்த கிறிஸ்தவ தலைவர் போப் ஆண்டவருக்கு கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் பெருங்குடலில் பிரச்சனை என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவக்கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்யப்ப்பட்டது. இந்நிலையில் போப்பாண்டவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும் அவரின் உடல்நிலை தற்போது நலமாக உள்ளது என்றும் எனவும் […]
கொரோனாவால் வாடிகனில் உள்ள அருங்காட்சியங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள், மூடப்பட்டுள்ளதால் 50 மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனா எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில் […]
பணக்கார நாடுகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை பதுக்கி வைக்க கூடாது என்று போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வாடிகன் தேவாலயத்தில் பொதுமக்களுக்கு போப் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், ” கொரோனா தடுப்பூசி போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலோ அல்லது அந்த தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலோ, இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள். கொரோனா தடுப்பூசி, உலக மக்கள் அனைவருக்கும் உரிமையானதாக இருக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.