போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட சில தினங்களிலேயே பதவி விலகப் போவதாக கடிதம் அளித்துவிட்டேன் என்று போப் பிரான்சிஸ் கூறியிருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த சனிக்கிழமை அன்று தன் 86 ஆம் பிறந்த நாளை கொண்டாடினார். சமீப நாட்களாக உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், கடந்த 2013 ஆம் வருடத்தில் போப் ஆண்டவராக தன்னை தேர்ந்தெடுத்த சில தினங்களில் உடல்நல பாதிப்புகளால் பதவி […]
Tag: போப் பிரான்சிஸ்
உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பற்றி பேசிய போது போப் பிரான்சிஸ் கண் கலங்கி அழுதது, காண்போரை கலங்கச் செய்துள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நாட்டு மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதன்பின், மக்கள் முன்னிலையில் உரை நடத்தியிருக்கிறார். அதற்கு பிறகு, உக்ரைனியர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் பற்றி பேசினார். திடீரென்று அமைதியான அவர், கண்ணீர் விட்டு அழுது விட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் பேச்சை […]
போரை நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு 222 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஆயுதங்களை வழங்கியும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. இதற்கிடையில் போரில் கைப்பற்றப்பட்ட லூகன்ஸ்க், டொனேஸ்ட்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய நான்கு நகரங்களையும் ரஷ்யா தங்கள் நாட்டோடு இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பை […]
கனடா நாட்டிற்கு சுற்றுப்பயணமாக சென்றிருக்கும் போப் பிரான்சிஸ் அங்கிருக்கும் பூர்வ குடியின குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். போப் பிரான்சிஸ் கனடா நாட்டிற்கு சென்றார். அப்போது அங்கு இருக்கும் அல்பேடா என்னும் பகுதியின் கிறிஸ்தவ பள்ளிகள் உள்ள இடத்திற்கு சென்றபோது அவர் தெரிவித்ததாவது, ரோமன் கத்தோலிக்க பள்ளிகளில் கல்வி கற்ற பூர்வ குடியின குழந்தைகள் மீது வன்கொடுமைகள் நடந்ததற்கு மன்னிப்பு கூறினார். மேலும், அவர் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முன்பே, கொடும்செயல்களுக்கு மன்னிப்பு கோரும் யாத்திரை […]
போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது “வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியமான பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதாவது பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் இப்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக கூறினார். ஆகவே விரைவில் இந்த குழுவில் 2 பெண்கள் இடம்பெறுவார்கள் எனவும் இதன் வாயிலாக இப்பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் இதற்கான முடிவு இதுவரை அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை” […]
போப் பிரான்சிஸ், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல் மிருகத் தனமானது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாடு ரஷ்ய போரால் கடும் விளைவுகள் மற்றும் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அங்கு ஆயுத தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பதில் தாக்குதல் நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வீரர்கள் உயிரிழந்து கொண்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி மூத்த […]
உக்ரைன் நாட்டிற்கு செல்ல விரும்புவதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். உக்ரைன் ரஷிய இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக வாடிகன் தேவாலயத்தின் போப் பிரான்சிஸ், போரை முடிவுக்கு கொண்டு வர, […]
உலகத்திலேயே அதிக விலை மதிப்பான பரிசு பொருட்கள் போப் பிரான்சிஸ் அவர்களுக்குத்தான் கிடைத்துள்ளது. அதாவது போப் பிரான்சிஸை பார்க்க வரும் முக்கிய பிரபலங்கள் மற்றும் பல்வேறு நாட்டின் பிரதமர்கள் போன்றவர்கள் விலை உயர்வான பரிசுப் பொருட்களை கொடுப்பார்கள். இவர் தனக்கு கிடைக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் விற்று அதில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறார்.
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் தகவல் அனுப்பியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடிக்கும் நிலையில் உக்கிரன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இத்தாலியை சேர்ந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் “உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக ரஷ்ய அதிபரான புதினை சந்திக்க மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். மேலும் கடந்த 20 […]
இலங்கையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே தன் வரலாற்றுக் கால அனுபவங்களை வைத்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான பிரார்த்தனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் கடந்த 2019-ஆம் வருடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உயிர்தப்பிய நபர்களின் குடும்பத்தினர் […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய போப் பிரான்சிஸ், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஏதுவாக ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனும், ரஷ்யாவும் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நாடுகளின் தலைவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சில தியாகங்களை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் போப் பிரான்சிஸ் தன்னுடைய உரையில் உக்ரைன், ரஷ்யா நாடுகளின் […]
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பில் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் ஆயிரக்கணக்கானோர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்ட கறைபடிந்த உக்ரைன் தேசிய கொடியை போப் பிரான்சிஸ் ஆயிரக்கணக்கானோருக்கு முன்னிலையில் உயர்த்தி காட்டினார். உக்ரைன் போரில் இருந்து உயிர் தப்பிய சிறுவர்களை மேடைக்கு அழைத்து போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே போப் பிரான்சிஸ் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் போப் ஆண்டவர் ரஷ்யா-உக்ரைன் இடையே சமாதானம் நிலவுவதற்காக சிறப்பு பிரார்த்தனை ஒன்றையும் நடத்தினார். இந்த சிறப்பு பிரார்த்தனை வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் பாதிரியார்கள், பிஷப்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 3,500 பேர் பங்கேற்றனர். இந்த பிரார்த்தனையின் போது போப் பிரான்சிஸ், […]
போப் பிரான்சிஸ் சாம்பல் புதன்தினமான இன்று, உக்ரைனில் அமைதி நிலவ பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக பெத்லகேமில் இயேசு பிறந்ததாக கிறிஸ்தவ மக்களின் புனிதநூல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக 40 தினங்கள் உபவாசம் இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதனை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவ மக்கள், 40 தினங்கள் உபவாச நிலையை பின்பற்றுவார்கள். இந்த 40 தினங்கள் தவகாலம் என்று கூறப்படுகிறது. இந்த தவக்காலம் தொடங்கக்கூடிய தினம் சாம்பல் […]
தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உக்ரைன் நாடு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் சோகம் நிறைந்த குரலில் பேசிய போப் பிரான்சிஸ் “உக்ரைனில் நிலவி […]
போப் பிரான்சிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒரு தார்மீக கடமை என்று கூறியிருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தின் தலைவர் போப் பிரான்சிஸ், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை, “அன்பின் செயல்” என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பது, “தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்” என்றும் கூறியிருந்தார். தற்போது, அதையும் தாண்டி, “தடுப்பூசி செலுத்துவது, ஒரு தார்மீக கடமை” என்று கூறியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, தனிநபர்களுக்கு தங்களை காத்துக்கொள்ளக் கூடிய பொறுப்பு இருக்கிறது. இது நம்மைச் சுற்றியிருக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் […]
போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒளி அலங்காரங்களுடன் நிறுத்தாமல், ஏழை மக்களுக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். டிசம்பர் 25-ம் தேதியான இன்று, உலக நாடுகள் முழுவதிலும், கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இந்நிலையில், வாடிகன் நகரத்தில் இருக்கும் புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று […]
போப் பிரான்சிஸ் உயர்தர மருத்துவ சிகிச்சையானது வறுமை நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். போப் பிரான்சிஸ் உயர்தர மருத்துவ சிகிச்சை வறுமை நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் போப்பாண்டவர் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி வாடிகனில் உரையாற்றிய போது “கருணை உள்ளம் கொண்டு அனைவரும் எய்ட்ஸ் நோயாளிகளை தனிமைப்படுத்தாமல், அவர்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் […]
போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு செல்லவிருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த மாதம் 5 நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பயணம் முறையே டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை சைப்ரஸ் நாட்டின் தலைநகரான நிக்கோசியாவிலும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் […]
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் அறுவை சிகிச்சைக்குப்பின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் கடந்த ஜூலை மாதம் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் குணமடைந்து வாட்டிகன் திரும்பினார். […]
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள கருத்தால் அனைவரிடமும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து போப் பிரான்சிஸ் வானொலி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அமெரிக்கா படைகள் வாபஸ் பெற்றதை அடுத்து அங்கு உருவாகியுள்ள புதிய அரசியல் நிலைமை குறித்து போப் பிரான்சிஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில் “அடுத்தவர்களின் மீது தங்களின் சொந்த கருத்துகளை வலுக்கட்டாயமாக திணிப்பது […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலைமை தொடர்பில் போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இறுதியாக, காபூல் நகரையும் நேற்று கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தலிபான்களின் கலவரத்தில் மாட்டிக்கொண்ட ஆப்கானிஸ்தான் தொடர்பில் போப் பிரான்சிஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பில் முடிவு கிடைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். வாடிகனில் வாராந்திர வழிபாடு நேற்று நடந்த போது, அவர் பேசியதாவது, “அன்புமிக்க, சகோதர […]
போப் பிரான்சிஸ் பெயரில் சுவிட்சர்லாந்தில் தனிப்பட்ட வங்கி கணக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது. கார்த்தினல் ஒருவர் நிதி மற்றும் ஊழல் முறைகேடு தொடர்பாக சிக்குவதும், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் சில நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நடந்தது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் சுவிஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் போப் பிரான்சிஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வத்திக்கான் நிர்வாகம் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி காலம் முதலே நிதி தொடர்பாக சுவிட்சர்லாந்துடன் இணைந்து செயல்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் […]
ரோம் மருத்துவமனையில் இருக்கும் போப் பிரான்சிஸிற்கு காய்ச்சல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் கெமல்லி என்ற மருத்துவமனையில் கடந்த 4ஆம் தேதி அன்று போப் பிரான்சிஸிற்கு குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு கடந்த 7ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் நலமும் தேறி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையின் அறைக்கு வெளியில் நடைபயிற்சி செய்கிறார். […]
போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்குப்பின் தற்போது குணமடைந்து வருவதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் ( 84 ) கடந்த 4-ந்தேதி சிகிச்சைக்காக இத்தாலியில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் அவருக்கு செய்யப்பட்ட மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் அவருடைய பெருங்குடலின் இடதுபாகம் நீக்கப்பட்டதாகவும், தற்போது உடல் நலத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாக வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் போப் பிரான்சிஸ் […]
போப் பிரான்சிஸ் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸிற்கு, பெருங்குடல் சுருக்கம் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவுடன் அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 மணி நேரங்களுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் பங்கேற்ற மக்களுக்கு மகிழ்ச்சியாக […]
கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், போப் ஆண்டவர் கனடாவிற்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜஸ்டின் ட்ருடோ கூறியிருக்கிறார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பூர்வக்குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் கடந்த மாதத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்து சுமார் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, Saskatchewan என்ற மாகாணத்திலும் கடந்த வியாழக்கிழமை அன்று மேரிவல் ரெசிடென்ஷியல் பள்ளியிலிருந்தும், சுமார் […]
உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் வாடிகன் நகரின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐரோப்பாவில் வாடிகன் என்ற நகரில் கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் வசித்து வருகிறார். இவர் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை மதகுரு ஆவார். இந்நிலையில் வாடிகன் நகர கார்டினல்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோர் குற்றம் செய்யாமல் இருப்பதற்காகவும், குற்றம் செய்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் வாடிகன் நகர சட்டத்தை சீர்திருத்தி புதிய சட்டத்தை […]
மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்த 3 வயது சிறுவனின் தந்தையை போப் பிரான்சிஸ் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு 3 வயது சிறுவனான ஆலன் குர்தி மத்திய தரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்துள்ளான். சிறுவனின் சடலம் துர்க்கி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் அவனின் புகைப்படம் உலகையே உலுக்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈராக்கில் திருப்பலி ஒன்றை நிறைவேற்றிய போப் பிரான்சிஸ் சிறுவனின் தந்தையான அப்துல்லா குர்தியை […]
போப் பிரான்சிஸ் இறுதிவரை போப்பாண்டவராக இருந்து ரோமிலே தன்னுயிர் போகவேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் . 84 வயதான போப் பிரான்சிஸ் பற்றிய தகவல்களுடன்’ தி ஹெல்த் ஆப் போப்ஸ் ‘என்ற புத்தகம் சனிக்கிழமை வெளிவந்தது. அதில் அர்ஜென்டினாவின் இத்தாலிய குடியேறியவர்களுக்கு பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ (போப் பிரான்சின் இயற்பெயர் ) அவர் தனது கடைசி காலத்தில் சொந்த நாட்டிற்கு செல்ல ஆசை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவரின் உடல்நிலை தற்போது அதிக ஆபத்தில் […]
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மாடல் ஒருவர் வெளியிட்ட ஹாட் பிகினி போட்டோவை போப் பிரான்சிஸ் லைக் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படு கவர்ச்சியாக பிரேசில் மாடல் ஒருவர் வெளியிட்ட பிகினி புகைப்படத்தை போப் பிரான்சிஸ் “லைக்” செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு மாடல் ஒருவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தையும் போப் லைக் செய்துள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த டிசம்பர் 23ம் தேதி மார்கோட் ஃபாக்ஸ் (Margot Foxx) என்ற […]