பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவில் உள்ள 8 பேருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
Tag: போராட்டம் வாபஸ்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில மாணவிகளின் குளிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவிகளின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால், செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த மாணவிகளின் போராட்டம் இன்று அதிகாலை 1.30 மணி […]
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைக்கக்கோரி டிசம்பர் 3ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் […]
அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் […]
போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது போக்குவரத்து துறை செயலாளர் பிரதாப் யாதவ் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடலூர் , திருப்பூரில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்கடந்த 2 நாட்களாக ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பிரதாப் யாதவ் உறுதியளித்ததை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு […]
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ம் ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து […]