பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் காரியாபட்டி, ஆவியூர், அரச குலம், மாங்குளம், கம்பிக்குடி, சுருண்டு, உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2018 முதல் 2020 வரை வெங்காய பயிர் காப்பீடு வழங்கப்படாத கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் […]
Tag: போராட்டம்
கனடாவில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டின் எல்லையை கடந்து செல்லக்கூடிய லாரி ஓட்டுனர்கள் கொரோனோ விற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக செலுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகரான ஒட்டாவாவில், ‘சுதந்திர தின வாகன அணிவகுப்பு’ என்று லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் பத்து நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, […]
அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி அதிகரித்து அறிவிப்பு ஒன்றை மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில்முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்ஒய் .எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இதில் 11 வது ஊழியர் திருத்த குழு அளித்த பரிந்துரையின் படி இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு அம்மாநில அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 11 வது ஊதிய திருத்த குழுவின் பரிந்துரையின் […]
கொரோனா நோய் பரவல் காரணமாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதங்களாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கி வந்துள்ளது. இதனையடுத்து சில மாதங்களாக பள்ளிகள் திறந்த பிறகு முழு சம்பளத்தை வழங்கியுள்ளது. ஆனால் மீண்டும் தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் நிர்வாகத்திடம் முறையிட போது இவ்வாறு விடுமுறை அளிக்கப் பட்டால் பாதி சம்பளம் […]
மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் கூறும் சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது . கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே உள்ள பாலேசங்கப்பா அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான முஸ்லிம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியை உமாதேவி முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளி வளாகத்திலேயே ஒரு அறை அமைத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தார், மேலும் அவர் பள்ளி […]
கடலுார் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதம் பாதியாக சம்பளம் வழங்கப்பட்டது. இதையடுத்து இடையில் பள்ளிகள் திறந்தபோது ஒரு சில மாதம் முழு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பினால் 10 தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால், மறுபடியும் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளத்தை மட்டும் நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது போன்று விடுமுறை அறிவிக்கப்பட்டால் பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அறிவுறுத்தியதாக […]
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதை கண்டித்து கணக்குத்துறை சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சம்பளகணக்கு அலுவலகம் முன்பு கருவூல கணக்குத் துறை சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணக்கு துறை ஊழியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதை கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்கள் தன்னுடைய முகத்தில் அணிந்துகொள்ளும் ஹிஜாப் என்னும் ஒருவகை துணியை அணிந்துகொண்டு கல்லூரிக்குள் நுழைவதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனால் இஸ்லாமிய மாணவியர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவ்வாறு, கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு சில கல்வி நிலையங்கள் அனுமதி மறுத்துவரும் நிலையில் ஒரே சீருடை விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு […]
கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்கள் முகத்தில் அணிந்து கொள்ளும் ஒரு வகை துணியாகும். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் குந்தபூரில் உள்ள அரசு கல்லூரியில் மீண்டும் ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதற்காக சுமார் 40 […]
பல சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சீனாவிற்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தகுதியில்லை என்று 8 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் திபெத் மக்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி 20 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சீனாவிற்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தகுதியில்லை என்று 8 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் திபெத் மக்கள் ஒன்றிணைந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்பாக […]
புதுச்சேரியில் இரண்டு நாட்களாக மின்வாரிய ஊழியர்களால் நடத்தப்பட்ட தொடர் போராட்டம் முதல்வர் ரங்கசாமி உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது. புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தை நிறுத்துவதற்காக மின்வாரிய ஊழியர்களுடன் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊழியர்கள் கூறுகையில், அரசு தங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளதாகவும் தொடர்ந்து போராட்டத்தை […]
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாப்பாகுறிச்சி அருந்தியர் தெருவில் அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மற்றும் தமிழ்புலி கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]
சார் பதிவாளரை பணி இடமாற்றம் செய்யக்கோரி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ ள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாநிலச் செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இளையான்குடி கூட்டுறவு சார்பதிவாளரை இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் […]
அடிப்படை வசதிகள் செய்து தரகோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதிகளான தெரு மின்விளக்கு, குடிநீர், மோட்டார் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எம்.புதுப்பட்டி -எரிச்சந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கர்மா உங்களை தாக்கத் தொடங்கி விட்டது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்திருக்கிறார். இந்திய தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் கடந்த 2020ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கி 2021 ஆம் வருடம் நவம்பர் மாதம் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். சுமார் ஒரு ஆண்டாக நடந்த இந்த போராட்டம் உலக நாடுகளின் கவனத்திற்கு சென்றது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு […]
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் துறையை மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாரிகளும், ஊழியர்களும் பிப்..2 (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதல் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியிலுள்ள தென்றல் வீதி , குறிஞ்சி வீதி, சாலைத்தெரு உள்ளிட்ட வீதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து […]
மத்திய அரசு புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், மின்துறை ஊழியர் சங்கங்களும், மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் வினியோகம், மின் பராமரிப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை […]
மயானத்தில் குடிநீர் இல்லாததால் பஞ்சாயத்து துணைத்தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள மயானத்துக்கு போதிய குடிநீர் வசதி இல்லை என்றும், மின்மோட்டார் பழுதாகி இருப்பதாகவும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த மாரியப்பன் மயானத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து […]
புஞ்சைபுளியம்பட்டி குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகேயுள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 75 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் ஓடை வழியாக சாயக்கழிவு நீர்கள் கலக்கின்றன. இதனை அருந்தும் கால்நடைகள் நோய் வாய்க்கு உட்பட்டுள்ளன. இந்நிலையில் சாயக்கழிவு நீர் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த பதிலும் அளிக்காததால் பொதுமக்கள் சத்தியமங்கலம் – கோவை நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் […]
கனடா அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிராக்டர் ஓட்டுநர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஒட்டாவாவில் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு அந்நாட்டின் அதிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்தியாவிலுள்ள சமூக ஊடகங்க பயனாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக அமெரிக்காவிற்கும் அந்நாட்டிற்குமிடையே எல்லை தாண்டும் ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ட்ராக்டர் ஓட்டுனர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள […]
நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கான்சாபுரம் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வத்திராயிருப்பு, மகாராஜபுரம், தம்பி பட்டி, கூமாபட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்டு கொண்டுவரும் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாததை கண்டித்து இந்த போராட்டமானது நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை […]
மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் உள்நாட்டுப்போர் வர வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் விவரிக்கின்றனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இந்நாட்டு ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்து வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர் . […]
கனடாவில் தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பாக போராட்டம் வலுத்து நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் ….. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கனடா இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவிவருகிறது .இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன . இதிலும் குறிப்பாக எல்லை தாண்டி வரும் டிரக் ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் தலைநகர் ஒட்டாவில் உள்ள பாராளுமன்ற […]
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அழகிரி காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 41 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகளே நடைபெறாமல் சாலை அமைத்ததாக நகராட்சி நிர்வாக வைத்த பேனரை கண்டித்து அழகிரி காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஏ.ஐ.டி.யு. சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மண்டல தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 36 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு டி.ஏ உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் 475 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கிய வகாப் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு […]
மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. , விடுதலை சிறுத்தை கட்சி என பல்வேறு கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்தப் போராட்டமானது குடியரசு தின விழாவில் தமிழக வீரர்களின் வாகன ஊர்வலங்களை புறக்கணித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்தப் போராட்டத்தில் திராவிட கழக மாவட்டத் தலைவர் திருப்பதி, ம.தி.மு.க. நகர செயலாளர் […]
பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. மெக்சிகோ நாட்டில் உள்ள டிஜுனா நகரத்தில் மூத்த பத்திரிகையாளரான லூர்து மால்டோநாட் வசித்து வந்தார். இவர் காரில் சென்ற கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளரான லூர்து மால்டோநாட் 3 வருடங்களுக்கு முன்பாகவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மெக்சிகோ அதிபருக்கு புகார் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மண்டல பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 73 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.இந்த போராட்டத்தில் மண்டல கவுரவ தலைவர் […]
மத்திய ரெயில்வே மந்திரி, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ரயில்வே தேர்வு வாரியம் வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி போராட்டம் நடத்திய இளைஞர்கள், பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் நின்ற ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். மேலும் ஓடும் ரயிலில் கற்களைக் கொண்டு எறிந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் […]
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ரயில்வே துறையால் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைக்கேடு நடந்திருக்கிறது என்று கூறி தேர்வை ரத்து செய்யுமாறு பீகார் மாநிலத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில், கயா பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் நின்ற ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். ரயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து புகை வெளியேறியது, பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே காவல்துறையினர் […]
தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீட்டு தொகை அளிக்கவும், தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் லாவண்யா என்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் பா.ஜ.க சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், பேசிய பா.ஜ.க மாநில தலைவர் […]
ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது வட்டார துணைத்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மறுபடியும் பழைய இடத்திற்கு பணி மாற்றம் செய்ய […]
ஸ்வீடனில் கொரோனாவை ஒழிப்பதற்காக போடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலைநகர் உட்பட பல முக்கிய பகுதிகளில் பொது மக்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்வீடனில் கொரோனாவை ஒழிப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான பாஸ்போர்ட் மற்றும் கட்டாயமாக முககவசம் அணிதல், பொது நிகழ்ச்சிகளில் குறைவான மக்கள் கலந்து கொள்ளுதல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுவீடனின் […]
ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் ஆனது மாவட்டச் செயலாளர் புவைஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த அருந்ததியர் மக்களின் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோசம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது […]
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட இன்ஜினியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டம் ஆனது மாவட்டத்தலைவர் ஆழ்வார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் ஊதியத்தில் 10% ஆபத்துக்கால ஊதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் ஆனது நடைபெற்றுள்ளது. இந்தப் […]
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஆந்திராவில் அரசுத்துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கானோரின் சம்பளம் விகிதம், ஓய்வூதியர் பங்களிப்பு, அரசு ஊழியர்கள் ஓய்வு வயது பற்றி ஜெகன்மோகன் ரெட்டி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 23 சதவிகிதமாக உயர்த்தி முதல்-மந்திரி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த ஊதிய உயர்வை அமல்படுத்துவதற்கு […]
கள் விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க கோரி சீமான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கி கள் இறக்குவதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கள் இறக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதற்கு நான் முழுமையான ஆதரவை தருகிறேன். கள் ஒரு […]
குடியரசு தின விழாவில் தமிழக வீரர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடியரசு தினவிழாவில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டமானது நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்று வேகமாக பரவி வரும் சூழலைப் புரிந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை ஏராளமான மக்கள் விரும்பி செலுத்தி கொள்கின்றனர் என்று […]
விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பருவநிலை மாறுபாட்டால் கனத்த மழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இதில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களின் முன்பு விவசாயிகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளதாக அதிமுக தெரிவித்திருக்கிறது. இதுபற்றி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் […]
ஹங்கேரியில் கொரோனா தடுப்பூசியை எதிர்த்து, வலது சாரி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டில் மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எதிர்த்து போராடி வருகிறார்கள். மேலும், தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது, சர்வாதிகார ஆட்சிக்கு சமம் என்றும் கோஷம் எழுப்புகிறார்கள். அதே சமயத்தில், பூஸ்டர் தவணை தடுப்பூசி வரை மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு, மக்களை அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருவது […]
ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1,000ரத்துக்கும் மேலானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமையன்று தடுப்பூசியினை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு எதிராக அந்நாடு விதிக்கும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சுமார் 8 ஆயிரத்துக்கும் மேலானோர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 3,000 போராட்டக்காரர்கள் ஜெர்மனி நாட்டின் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கஜகஸ்தானில் எல்.பி.ஜி எரிவாயுவால் தான் பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த எரிவாயுவின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் கொந்தளித்த நாட்டு மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கார்கள், வங்கிகள், அரசு கட்டிடங்களை கொளுத்திய போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே நடந்த கலவரத்தால் கிட்டத்தட்ட 19 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 225 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு […]
ஏமன் நாட்டை சேர்ந்த மரிப் நகரைக் கைப்பற்றுவதற்காக ஹவுதி அமைப்பினர்கள் மிகவும் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஏமன் நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியா ஆதரவைப் பெற்ற அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர்கள் ஏமனில் பதவியேற்ற அரசை கவிழ்த்துள்ளார்கள். இதனையடுத்து தற்போது வரை ஏமன் நாட்டிலுள்ள எண்ணெய் வளம் நிறைந்த மரிப் நகரை கைப்பற்றுவதற்காக ஹவுதி அமைப்பினர்கள் தொடர்ந்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சவுதி […]
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதால் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 500 நியாய விலை அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் நாளை (12.01.2022) போராட்டம் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பால சுப்ரமணியன் […]
பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், திருச்சியில் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளிலிருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டிருக்கும் 10 கலை கல்லூரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனை எதிர்த்து திருவரங்கம் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை முடிவுக்கு […]
தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு ரயில் நீர் என்ற குடிநீர் பாட்டில் வழங்கப்படுகிறது. அதேபோன்று மும்பையில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு வரும் மும்பை எக்ஸ்பிரஸில் தமிழகம் வரை ரயில் நீர் வழங்கும் ரயில்வே உணவக ஊழியர்கள், தமிழக எல்லைக்குள் வந்தபின்னர் ஹெல்த் பிளஸ் என்ற பெயரில் சீல் வைக்கப்படாமல் காலாவதியான, தேதி குறிப்பிடாத குடிநீர் பாட்டிலை விநியோகிப்பது வழக்கமாக செய்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அந்த குடிநீரில் பிளீச்சிங் பவுடர் வாடை வந்துள்ளது. […]
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முதல்வரை மறைமுகமாக விமர்சித்தது, பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு பல திட்டங்களை துவக்கி வைப்பதற்கு சென்றார். அவர் முதலில் ஹெலிகாப்டரில் வருவதாகத் தான் கூறப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் சாலை வழியாக வந்தார். ஹூசைன் வாலா எனும் பகுதியில் இருக்கும் தேசிய தியாகிகளின் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி முதலில் செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த பகுதிக்குள் பிரதமரின் வாகனம் செல்வதற்கு முன்பாக, அங்கு செல்லக்கூடிய […]
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே அரசு மருத்துவர்கள் ஊதியம் உயர்த்தி வழங்க தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதுபற்றி மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு பேசுகையில், கடந்த ஆண்டு முதல் கொரோனா கொரோனாவால் மருத்துவர்கள் இடைவிடாது ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பணிகளின் போது ஏராளமான மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருந்தபோதிலும் […]