நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் நவம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை […]
Tag: போராட்டம்
நெதர்லாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்ததில் காவல்துறையினர் 7 பேர் காயமடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து அரசு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் அல்லது 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதனால் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நெதர்லாந்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி நெதர்லாந்தில் ராட்டர்டாம் என்ற நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]
லண்டனில் பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் ஆர்வலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ஒரு NHS உடல் நலமில்லாத தன் குழந்தையை காண செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கெஞ்சிய வீடியோ வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த மாதம் 8-ஆம் தேதியில், M25-ன் சந்திப்பு-25ல் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/11/20/3081061927266042680/640x360_MP4_3081061927266042680.mp4 […]
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்த மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம் […]
வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில் அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் […]
செவிலியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செவிலியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது செவிலியர் சங்க தலைவரான பழனியம்மாள் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து செவிலியர் சங்கத்தின் ஏழு அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் செவிலியர்கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று குருநாத் ஜெயந்தியையொட்டி காலை தொலைக்காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் பொழுது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் என்றும் கூறியிருந்தார். இதனை விவசாயிகள் வரவேற்றாலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தனர். 3 வேளாண் சட்டங்களை […]
சென்னை மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கல்லூரி தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை மாணவப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்ட நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் […]
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். மேலும் 3 […]
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெருவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் விவசாயிகள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது நமது விவசாயிகளின் வேதனையை நேரடியாக அறிந்தவன் நான். அதனால்தான் விவசாயிகளுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தினேன். நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபட்டு வருகிறேன். 3 வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு […]
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுவை காரணமாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்படி பெட்ரோல் ரூ.5 மற்றும் டீசல் ரூ.10 என்று […]
மாற்றுத்திறனாளி தம்பதியினர் அரசு வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலவாடி பகுதியில் சுரேஷ்-முத்துலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில் தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தம்பதியினர் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி கோரிக்கையை வலியுறுத்தி தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட […]
நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜகோபால கவுண்டர் பூங்கா அருகில் அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வலியுறுத்தியும் தங்களது கோஷங்களை எழுப்பினர். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மாணவர்கள் பின் […]
இந்திய தலைநகரமான டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் வருகின்ற 26ம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. ஆனாலும் விவசாயிகளின் நிலைமையைக் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விவசாயி பெயருக்கு முன்னால் தியாகி என்று குறிப்பிடப் பட […]
குமாரபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களை முகாமை விட்டு வெளியேறுமாறு கூறியதால் அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பத்மநாபபுரம் ஏரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் முட்டைக்காடு காலனி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த மக்கள் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். […]
கோவையில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை சட்ட நகலை எரிக்க […]
மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி வாசல்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]
வாலிபர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரதிருநல்லூர் காமராஜ் தெருவில் செல்வமணி மகன் குமரேசன் வசித்து வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் இருக்கின்றனர். இவர்களில் குமரேசன் மோட்டார் சைக்கிளில் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். இதனையடுத்து குமரேசன் கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென குமரேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதன்படி சென்னை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை முடிந்த பின்னரும் இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கின்றன. அதில் சென்னை பழைய வண்ணாரப் பேட்டை காத்பாடா, ராமதாஸ் நகர் மற்றும் லேபர் லைன் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் வீடுகளில் தேங்கியுள்ள மழை நீருடன் கழிவு நீரும் கலந்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுரோடு பகுதியில் கோபி மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது குழந்தையுடன் மதுரை மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்தில் பயணித்துள்ளனர் . அப்போது இந்த தம்பதிகள் பயண சீட்டு வாங்கினர். இதற்கான மீதி சில்லறை பிறகு தருவதாக நடத்துனர் கூறியுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து மண்டபப் பகுதி அடைந்தவுடன் தம்பதிகள் நடத்துனரிடம் சில்லறை பாக்கி திருப்பித் தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் நடத்துனர் சில்லறையை தர மறுத்ததால் […]
ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் முழுமையாக திறக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் கல்லூரிகளில் வைத்து மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெரிவித்து ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் […]
நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டையில் கூட்டுறவு நூற்பாலையானது இயங்கி வந்தது. ஆனால் இந்த ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி கடந்த 2004-ஆம் ஆண்டு திடீரென்று அடைக்கப்பட்டது. இதன் காரணமாக 250 நிரந்தரம் மற்றும் பல ஆயிரத்துக்கும் மேல் உள்ள மறைமுகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்தனர். இதனையடுத்து இந்த நூற்பாலையை மீண்டும் திறக்ககோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. […]
சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவிரிநகர், பழனிநகர், கேசம்பட்டிநகர் குடியிருப்பு வீதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பாதிப்படைந்த கிராம பெண்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டத்தில் […]
கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளித்திருப்பூர் அருsalai mariyal கே கல்குவாரி ஒன்று இருக்கிறது. இந்த குவாரியில் கற்களை பெயர்க்க வெடி வைக்கப்படும். அப்போது அதிலிருந்து சிதறும் கற்கள் கொமராயனூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விழுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள கூப்புக்காடு பிரிவு என்ற இடத்துக்கு திரண்டு வந்து திடீரென சாலையில் அமர்ந்து […]
சூடான் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவம் புரட்சி செய்து ஆட்சியை தங்கள் வசம் கொண்டு வந்தது. இதையடுத்து சர்வதேச நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டதோடு நாடு முழுவதும் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படைகளை கொண்டு போராட்டங்கள் ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் ராணுவ தளபதி […]
நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தமிழ் சினிமா நடிகரான சூர்யா நடித்த திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடிகரான சூர்யாவை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அந்தியூர் பிரிவில் கண்டன போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். அப்போது வன்னியர் […]
விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கக்கரைக்கோட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இங்கு இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக பெருமளவு கொண்டு வந்து வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்கரைக்கோட்டை கிராமத்தில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் அடைக்கப்பட்டது. இதனால் நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் நெல்லை விற்பனை […]
சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்ககோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விளை நிலங்களுக்கு செல்லக்கூடிய சுமார் 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஏரிக்கரை வழியாக சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையின் வழியில் விவசாயிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழைக் காலங்களில் சாலையின் வழியே போக முடியவில்லை என்றும் சாகுபடிக்கு தேவையான […]
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தரக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திருமணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி கலந்து கொண்டார். மதுரை ஐகோர்ட்டானது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தரக்கோரி தஞ்சாவூர் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் திருவையாறில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை […]
மரவள்ளி கிழங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், தலைவாசல் தாலுகாவுக்கு உட்பட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட சேகோ தொழிற்சாலைகள் இருக்கின்றது. இதில் தற்போது 200 சேகோ ஆலைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மீதம் உள்ள ஆலைகள் கடந்த 10 தினங்களாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயிரிட்ட மரவள்ளியை அறுவடை செய்யாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே மரவள்ளிகிழங்கை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து அதற்கு உரிய […]
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தரகோரி பா.ம.க. சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் தெற்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபாலன் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அந்த […]
சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில்உள்ள கூழையனூர் பகுதியில் கடந்த 10 வருடங்களாக சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையை […]
மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்கக்கோரி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவியது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை குறைத்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்கும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி பல மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தன. இதனால் […]
கேரளாவில் பழங்குடி சமூக மாணவியை இழிவாக பேசியதால் அவர் போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு கேரள அரசு நீதி வழங்க வேண்டும் என்று தேசிய தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்த பழங்குடி வகுப்பை சேர்ந்த தீபா மோகன் என்கின்ற மாணவி கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படைப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக பேராசிரியர் நந்தகுமார் என்பவர் […]
சாலை வசதி இல்லாததால் விரக்தியடைந்த மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மொசகுளம் கிராமத்தில் கடந்த 30 வருட காலமாக சாலை வசதி செய்து தரப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக மழை காலங்களில் சாலை போக்குவரத்து பயனற்ற நிலையில் ரோட்டில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாகத்தான் விவசாயிகள் விளை நிலங்களுக்கு போகவும், இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு தூக்கி செல்ல வேண்டியதும் இருக்கின்றது. […]
தாசில்தார் லஞ்சம் கேட்டதால் உயிரிழந்த தாயின் பிணத்தை எடுத்துக்கொண்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மேஜையில் வைத்து மகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தர்மாவரம் பட்டணம் பகுதியை சேர்ந்த பெத்தண்ணா என்பவரின் மனைவி லட்சுமி தேவி. இவர்களுக்கு நாகேந்திரம்மா, லட்சுமியம்மா, ரத்தினம்மா என மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெத்தண்ணா இறந்துவிடவே அவர் பெயரில் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு […]
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பழைய ஆயக்கட்டு கால்வாய்களில் வண்டிப்பாதை சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும், பழுதடைந்த அனைத்து மடைகளையும் சீரமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தெக்ரி-இ-லெப்பை என்ற அரசியல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீம் ஹசன் ரிஸ்வி உள்ளார். இவர்கள் பாகிஸ்தானில் இஸ்லாமிய கொள்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறார்கள். மேலும் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பொதுவாகவே இவர்கள் சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும் இறுதியில் வன்முறையில் தான் முடிவடைகின்றன. சான்றாக […]
இத்தாலி நாட்டில் பணி இழப்பு மற்றும் குறைவான ஊதியத்தை எதிர்த்து, விமான பணிப்பெண்கள் பொது இடத்தில் சீருடைகளை களைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் ITA Airways என்ற புதிய தேசிய விமான நிறுவனத்தின் சேவை கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த விமானப் போக்குவரத்தில் முக்கியமான சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் Alitalia விமான ஊழியர்கள் பணிஇழப்பு மற்றும் குறைவான சம்பளத்தை எதிர்த்து, தங்கள் உடைகளை அவிழ்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். ரோம் […]
பாகிஸ்தானின் தடைசெய்யப்பட்ட அரசியலமைப்பு போராட்டத்தின்போது நடத்திய வன்முறையில் 3 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் தெக்ரி-இ-லெப்பைக் என்ற அரசியல் அமைப்பானது இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீன் ஹசன் ரிஸ்வி இருந்து வருகிறார். அந்நாட்டில் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று இந்த அமைப்பு கூறி வருகிறது. மேலும் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அமைப்பு வலியுறுத்தி வருகின்றது. இதன் சார்பாக நடைபெறும் போராட்டங்கள் பெரும்பாலானவை […]
சென்னையில் தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தற்பொழுது தங்களது பணிகளை நிரந்தரமாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகவே 3 பேர் கொண்ட குழுவினை அமைத்து செவிலியர்களுடன் 15 நாட்களில் கலந்து பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர உள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செவிலியர்கள் […]
தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் தலைவர் கி.வீரலட்சுமி தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொல்லிவரும் சீமானிடம் 2016 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின்போது தமிழர்கள் தமிழர்களே ஆள வேண்டும் என்று பாராளுமன்றம் முன்பு தீக்குளிக்க சீமான் தயாராக இருக்கிறாரா? என்று சவால்விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப்பில் சிலர் ஆபாச படங்களை அனுப்பி வருகிறார்கள். அந்த ஆபாச படங்களை […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக திரண்டு போராட வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களுடைய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி வருகிறது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த […]
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரின் கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரின் உடலானது வெள்ளிக்கிழமை காலை விவசாயிகள் போராட்டம் செய்த இடத்திற்கு அருகே காவல்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. Barbaric inhumane…This protest has […]
நீலகிரி மாவட்டம் மன்னார்குடியில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி வந்த T-23 புலியை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். நேற்று இரவு மயக்க ஊசி செலுத்தப்படும் தப்பியோடிய புலி இன்று மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நான்கு பேரையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொண்டுள்ள இந்த புலியை கடந்த 21 நாட்களாக பிடிப்பதற்கு வனத்துறையினர் பெரிதும் போராடி வந்தனர். 21 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு புலி உயிருடன் பிடிபட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழர் முன்னேற்றப் படை நிறுவன தலைவர் கி. வீரலட்சுமி அறிவித்தது போல போஸ்டர் ஒன்று பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை சகோதரி விஜயலட்சுமிக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்த போகிறேன் என வீரலட்சுமி அறிவித்துள்ளார்.விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு நவம்பர் 27ஆம் தேதியன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தம்பிகள் ஒரு கை பார்த்து […]
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அறவழியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மேல் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப் படுவதாக முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவற்றிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் சிஏஏ சட்டம், வேளாண் சட்ட திருத்த மசோதா, உள்ளிட்டவர்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கூடங்குளம் அணுமின் நிலையம், எட்டுவழிச்சாலை, அணுமின்நிலையம், நியூட்ரினோ திட்டம், போன்றவற்றுக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு […]
சுமார் லட்சக்கணக்கானோர் போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். போலந்து அரசு ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து விலகுவது “போலெக்ஸிட்” என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து நாடு வெளியேறினால் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். எனவே இதனை கண்டித்து நூற்றுக்கணக்கான இடங்களில் நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போலெக்ஸிட் பயத்திற்கு மத்தியில் அந்நாட்டில் […]
வாக்காளர்களுக்கு மூக்குத்தியை பரிசாக கொடுத்ததாக தி.மு.க-வினரை கண்டித்து அ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அதன் படி குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லசெரி ஊராட்சியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை பரிசாக கொடுப்பதாக தகவல் பரவியதால் அ.தி.மு.க-வினர் அங்கு திரண்டுள்ளனர். இதனையடுத்து வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக […]
புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு வார்டு வரையறை செய்யவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என கோரி நடைபெறும் முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசு பேருந்தும் குறைந்த அளவிலேயே இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.