Categories
உலக செய்திகள்

ஈரானில் பயங்கரம்…. காவலில் வைத்து உயிரிழந்த பிரபலம்… வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்…!!!

ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார். இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரவீந்திரநாத்தை கைது செய்ய கோரி போராட்டம்; ஓபிஎஸ் கடும் அதிர்ச்சி …!!

கடந்த மாதம் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரத்துக்கு சொந்தமான தோட்டத்த்தை சுற்றி   சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த நிலையில்  தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கடந்த மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழலில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராக கூறி வனத்துறை சமன் அனுப்பியுள்ளது. இதுவரை ரவீந்திரநாத் நேரில் ஆஜராகவில்லை. […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி… சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்… காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

புதுச்சேரியில் ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பிள்ளை சாவடி மீனவ கிராமங்களை கடல் அரிப்பிலிருந்து காப்பதற்காக தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் தமிழக மீனவ பகுதியில் கடல் நீர் உட்பகுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியிலும் கற்கள் கொட்டப்பட வேண்டும் என தமிழக மீனவர்கள் பலமுறை கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

அதிபர் எதிர்ப்பு போராட்டம்… துப்பாக்கி சூடு சம்பவத்தில் 62 பேர் பலி… பெரும் பதற்றம்…!!!!!

ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டின் அதிபராக இட்ரிஸ் டெபி இட்னோ என்பவர் 30 வருடங்களாக பதவி வகித்து வருகின்றார். போராளிகளுக்கு எதிராக அவர் படையை வழிநடத்திய போது கடந்த வருடம் ஏப்ரல் இருபதாம் தேதி கொல்லப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது மகனும் ராணுவ தளபதியுமான மஹமத் இட்ரிஸ் டெபி(38) இடைக்கால அதிபர் ஆகியுள்ளார். அவரது 18 மாத பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைய இருந்தது ஆனால் சமீபத்தில் அவரது பதவி காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்” நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த விவசாயி…. சிபிஆர் செய்து காப்பாற்றிய போலீஸ்….. குவியும் பாராட்டு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தில் அமராவதியை தலைநகராக மாற்றுவதற்கு விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அமராவதியை தலைநகராக மாற்றாததால் நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காமன் இந்தியா பாலத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு விவசாயிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் இன்று அலறப்போகிறது?…. இபிஎஸ் திடீர் முடிவு…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் ஓபிஎஸ்ஐ எதிர்க்கட்சித்துறை தலைவராக வைக்க கூடாது அதற்கு பதிலாக ஆர்பி உதயகுமார் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பிறகு சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை […]

Categories
Uncategorized

தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்…. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் பல போராட்டங்களில் நடத்தி வந்தனர். இதனையடுத்துஅதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கால அவகாசம் கேட்டனர். இந்நிலையில் அதிகாரிகளின் […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்…. பிரபல நாட்டின் “பிரதமர் மீது அதிகரிக்கும் வெறுப்பு”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பிரபல நாட்டில்  புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ்  தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவர் வரி குறைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. எனவே பிரதமர் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்…. மாணவர்களின் திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!!

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விசாரித்ததில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்க்கும் பாபு என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை போலீசார் […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு விவகாரம்… “இந்த தீர்ப்பு கோர்ட் மற்றும் நாட்டிற்கு சோகமான நாள்”…? அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் பேச்சு….!!!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 1973 ஆம் வருடம் அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல 1992 ஆம் வருடம் நடைபெற்ற வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது பல்வேறு மாகாணங்களில் சட்ட வடிவில் இருக்கிறது இந்த சூழலில் 15 வாரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“ஹிந்தி மொழி திணிப்பு” நேரடியாக களத்தில் இறங்கிய உதயநிதி….. அக். 15-ல் பெரிய சம்பவம் இருக்கு….!!!!

தமிழகத்தில் மறைமுகமாக இந்தி மொழி திணிக்கப்படுவதாக திமுக, விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் கல்வி பணியிடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாகப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கற்பிப்பதற்கு உள்துறை அமைச்சர் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. இதனால் மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே வளர்க்க முயற்சி செய்வதாகவும், மற்ற மொழிகளை புறக்கணிப்பதாகவும் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

“பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு” சட்டசபை நோக்கி நடை பயணம்…. 17-ஆம் தேதி சம்பவம் செய்ய முடிவு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி, அக்கமாபுரம், குணகரம் பாக்கம், எடையார்பாக்கம், ஏக்னாபுரம், மடப்புரம், மேல்பெடவூர், நெல்வாய், தண்டலம், வளத்தூர், பரந்தூர் ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி தமிழகத்தின் 2-வது பெரிய பசுமை விமான நிலையம் அமைய இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மேலேறி, நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் மற்றும் ஏகனாபுரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : போராடும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு..!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி  அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி கோரி வந்தால் சேர்க்கக்கூடாது. நீக்கம் செய்யப்படும் பணியிடங்களில் உடனடியாக யுஜிசி விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

“100 நாள் வேலை திட்டம்” திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…..? திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை வழங்கவில்லை. இதை கண்டித்து தான் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலபாரதி தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளேவிவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக வழங்குங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… தீவிரமடையும் போராட்டம்… பள்ளி மாணவிகள் கைது…? பெரும் அதிர்ச்சி…!!!!!!

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் பள்ளி மாணவர்களை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் இஸ்லாமிய மத சட்டத்தின்படி பெண்கள், பெண் குழந்தைகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இந்த சூழலில் தெஹ்ரான் நகரில் பெண்கள் ஹிஜாப் அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் பின் அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
உலகசெய்திகள்

ஹிஜாப் விவகாரம்… தீவிரமடையும் போராட்டம்… 185 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

ஹிஜாப் விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் அனைவரும் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அந்த நாட்டின் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள்  […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் உச்சக்கட்ட போராட்டம்… இருவரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை…!!!

ஈரான் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லிம் மதத்தின் சட்டங்களை கடுமையாக கடைபிடித்து வரும் ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், தெஹ்ரான் நகரத்தில் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் அவரை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை எதிர்த்து நாடு முழுக்க பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் ஹிஜாபை கழற்றி […]

Categories
உலக செய்திகள்

இவர்களை உடனடியாக பணியில் இருந்து தூக்க வேண்டும்…. பிரபல நாட்டில்”நடைபெற்ற போராட்டம்”….. போலீசாரின் கொடூர செயல்….!!!!

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாட்டில் முல்லை தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் சிலர்  சட்டவிரோதமாக மீன் பிடித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அதிகாரிகளும்    அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று மீன் பிடிப்பவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த  போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் போராட்டம்”….. பெருகிவரும் நடிகைகளின் ஆதரவு…..!!!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நடிகைகள் தங்களது முடியை வெட்டியுள்ளனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் சிறுமியை படுகொலை செய்த போலீசார்….. போராட்டங்களை தடுக்க முடியாமல் திணறும் அரசு….!!!!

போராட்டத்தில் கலந்து கொள்ள   சென்ற 17 வயது சிறுமியை போலீசார் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி […]

Categories
உலக செய்திகள்

இதற்கு காரணம் இவர்கள்தான்?…. ஈரானில் வெடித்து வரும் போராட்டங்கள்…. திணறி வரும் அதிபர்….!!!!!

ஈரான் நாட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு வெளிநாடுகளின் சதி தான் காரணம் என அதிபர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
உலக செய்திகள்

இந்த செயல் கிரகத்திற்கு மரண தண்டனை…. பிரபல நாட்டில் ” வெடிக்கும் போராட்டம்”…. போலீசாரின் கொடூர செயல்….!!!!!

பிரபல நாட்டில் புதிய பிரதமரின் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியா நாட்டில் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றார். ஆனால் இவர் நாட்டில் எண்ணெய் , எரிவாயு எடுப்பதற்கு உரிமை கோரியுள்ளார் . இது நாட்டு மக்களிடையே போராட்டத்தை தூண்டியுள்ளது. இந்நிலையில் லண்டன், நாட்டிங்கான், மான்செஸ்டர் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்  போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் நகரில் காலநிலை ஆர்வலரான ஒரு […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட நெட் தேர்வில் வெற்றி பெற்றோர்…. சென்னையில் பரபரப்பு….!!!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட்  தேர்வில் வெற்றி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்  நேற்று NET   தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது   தேர்ச்சி பெற்றவர்களுக்கு   மீண்டும்  தேர்வு என்ற  அரசாணையை  ரத்து செய்ய வேண்டும். மேலும்  2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில்  தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இந்த பணியின் நியமனங்களை மேற்கொள்ளும் போது தற்போதுள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மேயரின் உறுதி…. அந்த ஒரு வார்த்தைக்காக…. தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்….!!!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வேலை தாங்க…. இல்லாவிட்டால் இதெல்லாம் திருப்பி கொடுப்போம்….. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஊழியர்கள் வசூல் மையங்களை பூட்டிவிட்டு சுங்கச்சாவடி அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இப்போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் வருவாய்த்துறை மற்றும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மின்சாரத்துறை தனியார் வசம் போகாது” அரசின் உறுதியால் போராட்டம் வாபஸ்….!!!!

புதுச்சேரியில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் கட்டண வசூல், மின் கணக்கிடும் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது. அதோடு பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் வெட்டும் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின்சார துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“18 அம்ச கோரிக்கைகள்” தூய்மை பணியாளர்கள் போராட்டம்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 721 வழங்கப்படுகிறது. இது சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ளார். அதன் பிறகு தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் சம்பளத்தொகையை உயர்த்த வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாநகரில் உள்ள 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 10,000 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓசி பயணம் விவகாரத்தில் அவர் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்குங்க… இல்ல போராட்டம் தான்… எஸ்.பி.வேலுமணி ஆவேசம்….!!!!

அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் கலந்துகொண்டு ஓசி பஸ்லதானே போறீங்க என பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் எனக்கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் அந்த மூதாட்டிக்கு பணம்கொடுத்து அ.தி.மு.க-வை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்து இருக்கிறார் என பேச்சு எழுந்தது. அதன்பின் பிருத்விராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிருத்விராஜ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அங்கன்வாடி ஊழியர்களுக்கு பென்ஷன், ஊதிய உயர்வு…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக அரசுக்கு  நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சலுகைகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படிப்படியாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை, சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படுகிறது.‌ கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆனது 31 சதவீதத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

இங்கு விமான நிலையம் வேண்டாம்!…. கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்…. பரபரப்பு….!!!!

சென்னையின் புது 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. அதிலும் குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உட்பட 13 கிராம பகுதிகளில் இந்த புது விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக கொண்டு நிலம் எடுப்பதாக தகவல் பரவி இருப்பதால், அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். புது விமானம் நிலையம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியாகிய நாளிலிருந்து, கிராமமக்கள் தினசரி பல விதமான நூதன […]

Categories
தேசிய செய்திகள்

முழு அடைப்பு போராட்டம், பள்ளிகளுக்கு விடுமுறை….. பேருந்து கண்ணாடி உடைப்பு…. பரபரப்பு…..!!!!

புதுச்சேரியில் தமிழக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரியில் இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் முழு […]

Categories
தேசிய செய்திகள்

“முழு அடைப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறை”… பி.எப்.ஐ அமைப்பினர் வீடுகளில் போலீஸர் அதிரடி சோதனை…!!!!!

முழு அடைப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக பிஎப்ஐ அமைப்பினர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்ற பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்னும் இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அமலாக்கத்துறை கடந்த 23ஆம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம்… கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories
உலகசெய்திகள்

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டம்.. பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!!!!!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தினால் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி(22) என்னும் குர்து இனப்பெண் உயிரிழந்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நாட்டின் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

Categories
உலக செய்திகள்

ஹிஜாபிற்கு எதிரான போராட்டம்…. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்… 50 நபர்கள் உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டில் ஹிஜாபை எதிர்த்து போராடும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாடு இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருகிறது. எனவே, அங்கு ஒன்பது வயதுக்கு அதிகமான சிறுமிகளும் பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இதற்கிடையில், குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சஹீஸ் என்னும் நகரத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளம்பெண்ணான மாஷா அமினி, ஹிஜாபை சரியாக அணியாத காரணத்தால் காவல்துறையினரால் கடுமையாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பஞ்சமி நிலத்தை மீட்டு வீட்டு மனை பட்டா வழங்குங்க”…. 3-வது நாளாக தொடர்ந்த போராட்டம்….!!!!!!

பஞ்சமி நிலத்தை மீட்க கோரி மூன்றாவது நாளாக குடிசைகள் அமைத்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டியில் இருக்கும் பஞ்சமி நிலம் எனக் கூறப்படும் ஆக்கிரமிப்பை அகற்றி வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 19ஆம் தேதி அப்பகுதியில் குடிசைகள் அமைத்து ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பேசு வார்த்தை நடத்தியதில் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார்கள். இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் அதிகரிக்கும் பதற்றம்…. ஹிஜாப்பை எதிர்த்து தீவிரமாக போராடும் பெண்கள்….!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் சென்ற 22 வயது பெண்ணை காவலர்கள் அடித்துக் கொன்றதையடுத்து, ஹிஜாபை எதிர்த்து பெண்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தற்போது வரை பெண் உட்பட மூன்று நபர்கள் பலியாகியுள்ளனர். ஐந்தாம் நாளாக தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், பெண்கள் பலர் தங்களின் ஹிஜாபை கழற்றி எறிந்திருக்கிறார்கள். மேலும், அதனை […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக நடைபெறும் தாக்குதல்கள்…. போராட்டத்தில் குவிந்த போராட்டக்காரர்கள்….. துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்….!!!!

பிரபல நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். பிரபல நாடான இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் பாலஸ்தீனம் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு  வருகிறது. ஹமாஸ் அமைப்புகள் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படுகிறது. மேலும் பல அமைப்புகள் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“இரட்டை வேஷம்” நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…. கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றல…. ஜிகே வாசன் ஆவேசம்…..!!!

தமிழகத்தில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு பிறகு ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உச்சகட்டத்தை அடைந்த ஹிஜாப் பிரச்சனை…. காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்…. நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள்….!!!!

 இளம்பெண்ணை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 22 வயதுடைய  மஹ்சா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியாமல் வந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணை கைது செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
அரசியல்

“ஜெயிலுக்கு போறது எங்களுக்கு புதுசு கிடையாது” 100 துரோகிகளை பார்த்தாச்சு….. திமுக அமைச்சர்களை வம்பிழுத்த மாஜி…..!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அதிமுக கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது, எங்களுடைய போராட்டத்தின் மூலம் திமுக கட்சிக்கு ஒரு செய்தி சொல்ல நினைக்கிறோம். அதிமுக கட்சியில் இருந்து கொண்டு 4 முறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சற்று நேரத்தில் போராட்டம்….!!

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. செங்கல்பட்டில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான இபிஎஸ் பங்கேற்க உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்திரளானோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் அங்கபிரதட்சணம் செய்த நித்தியானந்தா…… எதற்காக தெரியுமா?…… வெளியான தகவல்…..!!!

கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. அதன் பிறகு மழையின் தீவிரம் குறைந்ததையடுத்து சாலைகளில் தேங்கி இருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. மழை வெள்ளத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சாலையை சீரமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உடுப்பியில் சாலையை சீரமைக்க கோரி நித்தியானந்தா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் நூதன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“காதலித்து திருமணம் செய்த வாலிபர்” திடீர் சம்பவத்தால் பரிதவிக்கும் திருநங்கை…. போராட்டத்தால் பரபரப்பு…!!!!

இளைஞரின் வீட்டிற்கு முன்பாக திருநங்கை போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சின்னம்பட்டி பகுதியில் ஸ்ரீநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு திருநங்கை. இவர் ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் சாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். இந்த வாலிபருக்கும் ஸ்ரீநிதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக விவேக் கோவிலில் பூசாரியாக சேர்ந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு!!…..மீண்டும் நாடு திரும்பும் கோத்தபய ராஜபக்சே….. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்….!!!

இலங்கை முன்னாள் அதிபர் நாளை நாடு திரும்புகிறார். இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என கூறி நாட்டு மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த மாதம் தொடக்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் ஜூலை 13-ஆம் தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். இதனையடுத்து அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர் தனது அதிபர் பதவியை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சவளக்காரன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2  நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும், குடிநீர் கட்டுப்பாட்டை போக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி-திருவாரூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்கள் முரணாக செயல்படுகிறார்கள்….. போராட்டத்தில் ஈடுபட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர்…..!!!!

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்துதல் போன்ற அநீதிகளை எதிர்த்து போராடி உரிமைகளை பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில்  நமது நாட்டு மக்கள்  தினம் தோறும் தனியாகவும்   அல்லது பொது மக்களுடன்  சேர்ந்தும் ஏதோ ஒரு கொள்கைக்காக போராடி கொண்டுதான் இருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் வீட்டை இடிக்க கூடாது….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை….!!!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடியப்பன் குளம், பிள்ளைக்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை அப்பகுதியில் வசிக்கும் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இதனை அகற்ற வேண்டும் என தனி நபர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலதாமதம் செய்தனர். இந்நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த தாலுகாவில் எங்கள் கிராமத்தை இணைக்க கூடாது….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…..!!!!

பொதுமக்கள் திடீரென  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் ஓரத்துநாடு தாலுகாவில் அமைந்துள்ளது. தற்போது திருவோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் அறிவித்தார். அதற்கான பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  பட்டுக்கோட்டை தாலுகாவில் இருக்கும் அதம்பை  வருவாய் கிராமத்தை திருவோணம் தாலுகாவில் சேர்ப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த  கிராம […]

Categories
உலக செய்திகள்

சதுர் ஆதரவாளர்-ஈரான் ஆதரவு குழுக்கள் இடையே மோதல்…. 15 பேர் பலி….. பயங்கர சம்பவம்….!!!!

ஈரானில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அதிகபட்சமாக 73 இடங்களை வென்ற ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்-சதரின் கட்சியின் ஈரான் ஆதரவு குழுக்கள் ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அரசியலில் இருந்து விலகுவதாக சதர் நேற்று அறிவித்தார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் சதரின் […]

Categories

Tech |