Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகள் மூடல் – 50 ஆயிரம் விவசாயிகள் பாதிப்பு…!!

பசுந்தேயிலை கொள்முதல் செய்ய கோரி முற்றுகை போராட்டம். ஒரு கிலோ பசும் தேயிலை 30 ரூபாய் 50 காசாக விலை நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் ஒரு வார காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் 50 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலை தொழிற்சாலைகளை திறந்து பசும் தேயிலையை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம்…!!

வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எலித் தொல்லை தாங்கல… தடுத்து நிறுத்துங்க… எலிகளுடன் போராட்டத்தில்… இறங்கிய விவசாயிகள்…!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் னர் விவசாயிகள் அனைவரும் தங்கள் கையில் எலிகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் விளைநிலங்களில் மணிலா பயிரிட்டுள்ளனர். அந்த வயல்களில் எலித்தொல்லை மிக அதிகமாக இருப்பதால், மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இந்நிலையில் பல சங்கங்களை சார்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

5 நாட்களில் 5 பெண்கள் பாலியல் வன்கொடுமை…!!

உத்தரபிரதேசத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது. உத்திரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்தும், நாக்கை துண்டித்து, முதுகுத் தண்டுவடத்தை கடுமையாகத் தாக்கியும், சித்ரவதை செய்தனர். இந்தப் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் பரிதாபமாக மரணமடைந்தார். பெற்றோரைக் கூட அனுமதிக்காமல் இளம் பெண்ணின் சடலத்தை உத்தரபிரதேச […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மூன்று லட்சம் சலூன்களை மூடி ஆர்ப்பாட்டம்…!!

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்காததால் மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மூன்று லட்சம் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரின்  12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் என்பவர் கடந்த ஆண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை நொறுக்கி அட்டகாசம்…!!

மதுரையில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் கும்பலை கைது செய்ய கோரி வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். திடீர் நகரில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அப்பகுதியில் உள்ள ரவுடிகள் அடித்து நொறுக்கி உள்ளனர். ரவுடிகள் அங்கு வந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ரவுடி கும்பலை கைது செய்யக்கோரி பெரியார் பேருந்து நிலையம் அருகே வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தை இறந்ததால் படிப்பை தொடர முடியாத மாணவன்…!!

தந்தை இறந்ததால் படிப்பை தொடர முடியாத சூழலில் இருக்கும் பட்டியல் என மானவனுக்கு 8 லட்சம் ரூபாய் அளித்தால்தான் மாற்றுச் சான்றிதழ் அளிக்க முடியும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ஒட்றைப்பிடாரத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற மாணவன் இந்த புகாரை கூறியிருக்கிறார். திருச்சி மாவட்டம் சிறுதன் ஊரில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரிகளில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை செலுத்தி பிஎஸ்சி மேலாண்மை படிப்பை அவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2-வது நாளாக ராகுல்காந்தி டிராக்டர் பேரணி…!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைவர் எனவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மத்திய அரசு சிதைத்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி பஞ்சாப்பில் இரண்டாவது நாளாக டிராக்டரில் பேரணியில் பங்கேற்றுள்ளார். பன்லாலா சவுத் பகுதியில் இருந்து பட்டியாலா வரையிலான 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி மேற்கொண்ட அவர் அங்கு பொதுமக்களிடையே உரையாற்றினார். மத்திய அரசின் புதிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டனம்…!!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அலகாபாத் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று கண்டன முழக்கம் இட்டனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 28 ஆண்டுகள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பணியிலிருந்த செவிலியரை தாக்கிய காவலரை கைது செய்க – மருத்துவர்கள் போராட்டம்…!!

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் போராட்டம். புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை தாக்கிய காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரத்தை கைது செய்யக்கோரி மூன்றாவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்  புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories
மாநில செய்திகள்

பணி வரைமுறை, பதவி உயர்வு வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை…!!

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆளுநர் மாளிகை மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்சிஎஸ்டி ஊழியர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் எஸ்சிஎஸ்டி ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி வரைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பத்து ஆண்டிற்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்க வேண்டும். வங்கிகளுக்கு இணையான ஊதியம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கிட […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பெண்ணின் மரணம்… காங்கிரஸ் கட்சியினர் ஆவேச போராட்டம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் […]

Categories
தேசிய செய்திகள்

 புதிய வேளாண் சட்டம்… பஞ்சாபில் தொடரும் 7வது நாள் போராட்டம்… விவசாயிகள் ஆவேசம்…!!!

புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக பஞ்சாபி விவசாயிகள் தொடர்ந்து 7வது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள் அனைவரும் ‘ரயில் ராகோ’ என்ற பெயரில் ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஏழாவது நாளாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்துள்ளது. பஞ்சாபி பாடகர்கள் பத்தின்டா என்கின்ற இடத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் […]

Categories
Uncategorized

பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கிட வலியுறுத்தி போராட்டம்…!!

பயிர் காப்பீடு செய்து 29 வருவாய்க் கிராம விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் ஆனைக்கொம்பன்  நோயால் பாதிப்பு அடைந்து பெரிய இழப்பிற்கு விவசாயிகள் ஆளாகினர். இந்நிலையில்  விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொண்ட நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்த போதிலும் கோட்டூர் ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் டிராக்டர் எரிப்பு… கொடூர போராட்டத்தில் இறங்கிய பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ்…!!!

டெல்லியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது டிராக்டர் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மத்திய அரசு நிறைவேற்றி இருக்கின்ற வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் மற்றும் எதிர் கட்சியினர் அனைவரும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் விவசாய அமைப்புகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் ….!!

ஆம்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கைலாசகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கடாபூர் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலும் பள்ளிவாசல் தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கும் அருகில் அரசு மதுபானக்கடை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனையடுத்து கடை முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதே இடத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெரியார் சிலைக்கு காவிச் சாயம் – குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியல்…!!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசி அவமதிப்பு செய்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனாம்குளத்தூர் பகுதியிலுள்ள சமத்துவபுரத்தில் நுழைவுவாயிலில் பெரியார் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மீது காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலையினை சுத்தம் செய்தனர். இவ்விவகாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்..!!

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா அரசால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதற்குத் துணைபோன தமிழக அரசை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாயிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை சின்னப்பா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் …!!

அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அரியலூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பேசிய  பொதுச் செயலாளர் சீனிவாசன் பாஜக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல திட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அடுத்த கொடூரம்…. காவல் அதிகாரி செய்த செயல்…. நாட்டை உலுக்கிய காணொளி…!!

போராட்டத்தின் போது சாலையில் கிடந்த நபரின் தலையில் போலீஸ் அதிகாரி தனது சைக்கிளை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த பிரொனா டெய்லர் எனும் கறுப்பின பெண் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுதலை செய்ய கென்டக்கி அட்டர்னி ஜெனரல் முடிவு செய்தார். இதனால் அமெரிக்காவின் சியோட் நகரிலும் மற்ற பல இடங்களிலும் புதிதாய் போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் நடைபெற்ற போராட்டத்தின் போது சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது – எதிர்க்கட்சிகள்..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே புதிய வேளான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுகவினர் அராஜக செயலுக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்

பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் திமுக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா  கட்சி இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறு கைகலப்பாக மாறியதில் திமுக நிர்வாகி சந்திரன் என்பவர் தாக்குதல் நடத்தியதில் பாஜகவை சேர்ந்த சிலர் காயம் அடைந்தனர்.  திமுகவின் இந்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் பல இடங்களில் பாஜக […]

Categories
மதுரை மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வரும் 29-ல் போராட்டம்..!!

தனியார்மயம் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை கண்டித்து வரும் 29ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு செல்வம்,     வருகின்ற செப்டம்பர் 29-ஆம் தேதி அகில இந்திய அளவில் தேசிய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. தேசிய எதிர்ப்பு தின பிரதானமான கோரிக்கை புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர்கள் பணிநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுக..!!

பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோகாஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்கள் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். அநீதியாக பணிநீக்கம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்குச் செல்ல பேருந்துகள் இல்லை – மக்கள் போராட்டம்..!!

கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. அப்போது மேலும் பல பயணிகள் அந்த பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் இருக்கைகள் நிரம்பியதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்ற பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து பயணிகள் திடீரென பேருந்தின் முன்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளைநிலம் வழியாக ரயில்வே பாலம் – எதிர்ப்பு..!!

தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் ஊருக்கு வெளியே பாலம் அமைத்தால் விவசாயம் அழிந்து விடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகூடு ஊர் வழியாக ரயில்வே பாலம் அமைக்க கோரி மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவ்அமைப்பினர் தலைவர் டாக்டர் சாமுவெல் ஜார்ஜ் விரிகூடு ஊருக்கு வெளியே பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மே தின பூங்கா அருகில் போராட்டம் […]

Categories
அரியலூர் கரூர் சேலம் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

சண்டே மார்க்கெட் திறக்க வியாபாரிகள் கோரிக்கை…!!

புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி காந்தி வீதி சாலையில் கடைகளை அமைத்து வியாபாரிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் காந்தி வீதியில் பல ஆண்டுகளாக சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகளும் கடைகளை போட்டு விற்பனை செய்கின்றனர். கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில். சண்டை மார்க்கெட்டையும் […]

Categories
கல்வி புதுச்சேரி மாநில செய்திகள்

கல்லூரி இறுதித் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்…!!

புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை  நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அமைச்சர் பதவி விலக வேண்டும்”… போராட்டத்தில் குதித்த பாஜக… போலீஸ் தடியடி…!!

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தலைமை செயலகத்தின் முன்பு போராட்டம் நடைப்பெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைச்சரை பதவி விலக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்த்து. அதாவது, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், பாஜக மற்றும் இளைஞர் காங்கிரசார் அணியினர் தலைமைச் செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறிய அறிவுறுத்தலையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழப்பத்தை ஏற்படுத்தும் அரசு – அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்து நூதன போராட்டம்…!!

குழப்பத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவை  கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூவை வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டணம் செலுத்தி இருந்தாலே அரியர் பாஸ் என்று செய்தியை வெளியிட்டு இருந்தார். ஊடகங்களில் அரியர் எக்ஸாம் பாஸ் கிடையாது என்று புரளி கிளம்பி வருகிறது. எங்களுக்கு ஒரு முடிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்…!!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரியலூரில்  தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குடி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எலந்தங்குடி கிராமத்தில் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் – அமமுகவினர் போராட்டம்…!!

திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் 27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடுமலையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்ற 4  மாத காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி 27 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய்கள், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உணவு சப்ளை செய்யும் குப்பை வண்டி… கொரோனா நோயாளிகளின் பரிதாபம்…!!!

ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு வினியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவு உறுதி செய்யப்படுகிறது. அதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, குறைவான பாதிப்புடைய குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 51 பேர் அந்தியூர் அருகே இருக்கின்ற பருவாச்சி செம்புளிச்சாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் […]

Categories
உலக செய்திகள்

“சீனா அணை கட்டக்கூடாது”… காஷ்மீரில் கடும் போராட்டம்…!!

ஜுலம் – நீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை எதிர்த்து காஷ்மீரில் தீப்பந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதில் ஒன்றாக ஜுலம் – நீலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டனர். இந்த அணை கட்டப்படுவதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – நாளை டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்..!!

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.. அதில், குடிமகன்களுக்கு முக்கியமாக மதுபானக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது.. அதன்படி, டாஸ்மாக் […]

Categories
மாநில செய்திகள்

“கோயம்பேடு சந்தை திறக்க வேண்டும்”…3 நாட்கள் கடையடைப்பு… போராட்டத்தில் வணிக சங்கத்தினர்…!!

கோயம்பேடு சந்தைகளை திறக்க கோரி மூன்று நாட்கள் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை நான்கு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டு திருமழிசை தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டு நடந்து வந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறந்து வைக்க வலியுறுத்தி வந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று கோயம்பேட்டில் இருக்கும் குறுங்காலீஸ்வரர் கோயிலில் கோயம்பேடு சந்தையைத் திறக்க கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தி வந்தனர். அதன் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்”… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்…!!

கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் அதிகமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இங்கு பிரகதி, ரம்யா, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளன. மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை மீட்ட காவல் துறையினர், […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“10 லட்சம் நிவாரணம் வேணும்”… போராட்டத்தில் குதித்த ஆட்டோ தொழிலாளர்கள்…!!

10 லட்சம் நிவாரணம் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஆட்டோ தொறிற்சங்கம் சார்பில், சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு அரசால் தற்கொலைக்குத் தூண்டப்படும் தொழிலாளர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு எதிராக போராட்டம்… வெளிநாட்டில் பாகிஸ்தானியர்களை எதிர்த்த இந்தியர்…!!!

ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தை இந்திய  இளைஞர் ஒருவர் எதிர்த்துள்ளார். வெளிநாடுகளில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் தற்போது இந்தியாவிற்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் ஒன்றிணைந்த இந்தியாவிற்கு எதிரான பேரணி நடத்தி, அதில் பல்வேறு கோசங்களையும் எழுப்பியுள்ளனர். அச்சமயத்தில் அங்கிருந்த பிரசாந்த் என்னும் ஒரு இந்திய இளைஞர் அவர்களுக்கு எதிராக இந்திய மூவர்ணக் கொடி ஒன்றை பிடித்து நின்றுள்ளார். அதனைக் கண்டு கோபமடைந்த பாகிஸ்தானியர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை – கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர்

அரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள சாத்தாம்பாடி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கூறியும் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்துப் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் போராட்டம்…வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி கொந்தளிப்பு…!!!

வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியினர் பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசை வலியுறுத்தி  மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியுள்ளனர். கொரோனா காரணமாக மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இன்னும் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கவில்லை. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதார தேவையை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். அதற்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாயார் போராட்டம்: மகளிடம் வரதட்சணை கேட்ட மணமகன் குடும்பத்தினர்…!!

திருச்சியில் மகளிடம் வரதட்சணை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த திரு. மகாலிங்கம், மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமதி ஹேமாபாரதி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திரு. தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகாலிங்கம் இறந்துவிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களுக்கு எதிரான ஆட்சி”… பாஜகவை கண்டித்து போராட்டம்… டி.கே சிவக்குமார் தீவிரம்…!!

பா.ஜக அரசு மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது. அதனால் இந்த அரசை எதிர்த்து காங்கிரஸ் அமைப்பு தீவிர போராட்டம் நடத்தும் என டி.கே சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரில், “இந்தியாவை பாதுகாப்போம்” என்ற பெயரில் பல்வேறு துறைசார்ந்த காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தப் போராட்டத்தில் டி.கே சிவகுமார் பேசியபோது, “நாட்டை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் அமைப்புகளுடன் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இதை நான் […]

Categories
உலக செய்திகள்

அலட்சிய அரசே பதில் சொல்! வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய போலீஸ்….. கலவர பூமியான லெபனான்….!!

சமீபத்தில் வெடி விபத்து நிகழ்ந்த லெபனான் தற்போது கலவர பூமியாக மாறியுள்ள புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன. சில தினங்களுக்கு முன்பாக லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்திற்கு பல நாட்டவர்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வரும் சூழ்நிலையில், அரசின் அலட்சிய போக்கால் தான் விபத்து நடந்ததாக குற்றம் சாட்டிய அந்நாட்டு பொதுமக்கள், இறந்த அத்தனை உயிர்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் […]

Categories
அரசியல்

மன்னிச்சுடுங்க இனி சம்பளம் கிடையாது – ஊழியர்கள் ஷாக்

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கு சம்பளம் வழங்க மாட்டோம், இதில் எவரும் எங்கள் மீது கோபம் கொள்ளக்கூடாது என கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா நெருக்கடி காலத்தில் அரசு ஊழியர்கள் இப்படி போராட்டம் நடத்தலாமா ? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வரும் நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு… போராட்டத்தில் இறங்கிய மக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நீடித்துக் கொண்டே வருகிறது. இரு நாட்டின் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வே பணிகளில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள்……பொன்மலையில் முற்றுகை போராட்டம் ….!!

ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து திருச்சியில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்காக தேர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அப்ரண்டிஸ் பயிற்சி முடிக்கப்பட்டவர்கள் 500 நூற்றுக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஆணை வழங்குவதற்காக பொன்மலை பணிமனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடந்த 3 நாட்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தமிழகத்தைச் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ….!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீன்வளத்துறையை மீனவர் நலத்துறையாக மாற்றக் கோரியும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து மீனவர்களுக்கும் தாமதமின்றி உடனே கிடைக்க வலியுறுத்தியும், நலத்திட்ட உதவிகளை  பெற முடியாத ஆயிரக்கணக்கான மீனவ மக்களை அரசிற்கு எதிராக திசை திருப்பிய மீன்வளத்துறை இயக்குனர் சாமிரன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இது தமிழ்நாடு மீனவர் […]

Categories

Tech |