பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீரபாண்டி-தேனி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். […]
Tag: போராட்டம்
ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு மாதந்தோறும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 2 ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி, குணமங்கலம், ரெட்டிபாளையம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்களை சாகுபடி செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் பகலில் 6 மணி நேரமும் இரவில் 6 மணி நேரமும் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக இரவில் இரண்டரை மணி நேரமும் பகலில் இரண்டரை மணி நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முறையாக […]
குவைத் அரசாங்கம், நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் இந்திய மக்களை நாடு கடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருக்கும் பகாஹீல் என்னும் பகுதியில் நபிகள் நாயகம் பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மிகப்பெரிய கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதிலும் பிற நாட்டை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்டாயமாக அனுமதி கிடையாது. […]
அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் தொடர்வதற்கு எதிராக மக்கள் மிகப்பெரிய பேரணியை தொடங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் பொதுவெளிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்ததாவது, நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து […]
நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அகவிலைப்படி நிச்சயம் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து, 13ஆம் தேதி நடைபெறவிருந்த நியாயவிலைக்கடை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அகவிலைப்படி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய நியாயவிலைக்கடை பணியாளர்கள் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இதனால், அத்தியாவசியப் பொருள்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இதனையொட்டி, கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பணிக்கு வராமல் […]
ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்பு திருவள்ளுவர் சிலை அருகே திரும்பவும் […]
தேர்வு எழுத அனுமதி கோரி கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் பல்லாவரம் அடுத்த ராயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரின் மகள் காமாட்சி. வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்த போது இவருக்கு திருமணம் நடைபெற்றது. காமாட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது படிப்பை தொடர வேண்டும் என்று […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் […]
பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அந்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 204.15 ஆகவும் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
பால் உற்பத்தியாளர்கள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம், கொண்டத்தூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பசும் பாலை ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக கொள்முதல் செய்வதற்கான தொகையை ஆவின் நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். இதனால் அவர்கள் உற்பத்தி செய்த பாலையும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் முதாரி கிராமத்தில் சுரேந்தர ரைக்வார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மே 30 அன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹேபா மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை பிறந்த குழந்தைக்கான சிறப்பு பிரிவில் அனுமதித்தனர். அந்த வார்டில் அழுக்கு மற்றும் எறும்புகள் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள், […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முழங்கால் போட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட 279 மனுக்களை பொதுமக்களிடம் […]
உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் அற்புதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணியரசி எந்த மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அற்புதராஜ் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அற்புதராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அற்புதராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு […]
ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்பவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மும்தாஜை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவருக்கு சொந்தமான வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் […]
தமிழகத்தில் திமுக வாக்குறுதியில் அறிவித்த படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகை இடுவோம் என்று பாஜக அண்ணாமலை கடந்த மே 22ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து இன்று திட்டமிட்டபடி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் […]
ரேஷன் கடை ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். அதன் பிறகு , *அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 […]
தென்அமெரிக்கா நாடுகளில் ஒன்றான சிலியில் உணவு பொருட்களுக்கான மானியம் மற்றும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நிதிஒதுக்கீடு போன்றவற்றை அந்நாட்டின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டனர். அந்த நாட்டின் தலைநகர் சாண்டியா கோவில் இப்போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காததால் மாணவர் அமைப்பினருக்கும், காவல்துறையிருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். இந்நிலையில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் அங்கு கலவரம் […]
உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்செந்தூரை சேர்ந்த மோகன் என்பவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் கடந்த 23-ஆம் தேதி நிறுவனத்தில் வைத்து திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக […]
விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் ரஜினி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 7 மாதமாக நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு குறித்து பலமுறை ஆதாரத்துடன் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர கடைகளின் உரிமத்தை ரத்து […]
துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க நாட்டில் விர்ஜினியா, மிச்சிகன் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வகையில் மிச்சிகன் மற்றும் விர்ஜினியா மாகாணங்களிலும் பள்ளி மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகக் […]
ஆற்றில் தலைகீழாக நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறான வீரசோழன் என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆற்றில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் பொதுமக்கள் கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையில் இருந்து சோழன் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. […]
ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டையில் மட்டும் ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் சேர்ந்த 2 லட்சம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இது குறித்து வட்டார விசைத்தறியாளர்கள் கூறியதாவது. தற்போது மிகவும் ஆபத்தான […]
ஆந்திர மாநிலத்தில் கொனசீமா எனும் மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என மாற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிரக்ஷனா சமிதி, கொனசீமா சாதனா சமிதி போன்ற பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் வன்முறையாக […]
காஷ்மீரில் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பால் புதைத்த குழந்தையை வெளியே எடுத்தபோது உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பங்கூத் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பஷாரத் அகமது குஜ்ஜார் மற்றும் ஷமீமா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான பேகம் நேற்று காலை பிரசவித்து இருக்கின்றார். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கின்றது. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்து விட்டது […]
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் சிவனடியார்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சிவதாமோதரன் சுவாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் உள்ள தில்லை காளி அம்மன் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய விஜய் என்பவரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நடராஜ சுவாமிகள், வாதவூரடி சுவாமிகள், திவாகர் சுவாமிகள், விஷ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, […]
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தை கண்டித்து இன்று அனைத்து மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என்று திராவிட கட்சி தலைவர் கி வீரமணி அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் திராவிட கட்சி இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை உறுப்பினர்கள், இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளர். மேலும் வங்கி, ரயில்வே, அஞ்சல் மற்றும் பல மத்திய அரசு துறைகளின் ஊழியர்களிள் வடமாநிலத்தவர்கள் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
குடிமங்கலம் அருகே உள்ள ஆமந்தகடவு கிராமத்தில் அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட வரும் முட்டை கோழி பண்ணையை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆமந்தகடவு கிராமத்தில் சுற்றிலும் ஏற்கனவே முட்டை கோழி பண்ணைகள் அதிக அளவில் உள்ளது. தற்போது புதிதாக பிஏபி கால்வாயில் முட்டை கோழி பண்ணை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமன்றி ஊருக்கு அருகிலேயே இந்த கோழிப்பண்ணை […]
தூக்கில் தொங்கிய வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அரிகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக குடியிருப்புக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அரிகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அனல் மின் நிலையத்தின் […]
மே 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதால் அன்று வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல முறை இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வேலை நிறுத்த போராட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 30, 31 ஆகிய நாட்களில் பல்வேறு […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், அஞ்சம்மாள், மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், ராஜ்குமார், பிரகாஷ், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, […]
உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தில் தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன் அறிவழகனிடம் வேலைக்கு செல்லாமல் வேறு ஒருவரிடம் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அறிவழகன் மது குடித்துவிட்டு தீபனின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். மேலும் அறிவழகன் தீபனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் […]
நூல் விலை உயர்வு காரணமாக முழு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளன. திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி மூலமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் கொடுத்து அதை துணியை மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்த நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த […]
இலங்கைக்கு கொழும்புவில் உள்ள ஒரு என்ஜிஓ அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அதிபர் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை இல்லாதவர்கள் உட்பட பல பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இவர் விடுதலையானதை தொடர்ந்து பல கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல்வர் முக ஸ்டாலின் வரலாற்றில் நினைவு கூறத்தக்க தீர்ப்பு இது என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் அவரை நேரில் அழைத்து பேசினார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் இவரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று பல இடங்களில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து […]
தமிழகத்தில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமல் அப்படியே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் […]
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 9 ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் அதிபர் அலுவலகம் அருகில் உள்ள காலிமுக திடலிலும், மகிந்த ராஜபக்சே வீடு அமைந்துள்ள டெம்பிள் ட்ரீஸ் ஆகிய பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையில் அமைதியாக போராடிய வந்தவர்கள் மீது கடந்த 9ஆம் தேதி ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியினர் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் […]
சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் பகுதியில் கணிக்கர் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடுகுடுப்பையுடன் குறி சொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றார்கள். இவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு சாதிசான்றிதழ் தேவைப்படுகின்றன. அதற்காக இப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்துள்ளார். மேலும் இந்த பகுதியில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் […]
இலங்கையில் இன்று இரவு எட்டு மணியிலிருந்து ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பின் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கையில் பல வன்முறைகள் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்தது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். எனினும் அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு புத்த பூர்ணிமா விழாவை முன்னிட்டு நேற்று ஊரடங்கு […]
நாட்டில் கடும் விலைவாசி உயர்வு காரணமாக 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்துவதற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக இடதுசாரி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள, நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மக்கள் மீது வரலாறு காணாத சுமையை ஏற்றி வருகின்றது. இதனால் கோடிக்கணக்கானோர் கடும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வரும் வேலையின்மை மக்களின் துயரங்களை மேலும் அதிகப் படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் […]
குற்றவாளியை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் விஷ்ணு, மணிமேகலை, கலியன் உள்ளிட்ட 7 பேர் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிமேகலை, விஷ்ணு உள்ளிட்ட 5 பேரை கைது […]
காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் பபினா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்படை காவலரான மகாராஜன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பபினா 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனையடுத்து பபினா தனது கணவருடன் […]
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சென்ற வருடம் தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தது. இதனையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும் அரசு கல்விக் கட்டணமாக வருடத்திற்கு ரூபாய் 13 ஆயிரம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது. பிற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக வருடத்திற்கு ரூபாய் 4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. ஒரே கல்லூரியில் இருவேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், பிற அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது போன்று இங்கேயும் […]
இலங்கையின் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே எதற்காக கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்து பாதுகாப்புத் துறை விளக்கமளித்திருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனினும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மஹிந்த ராஜபக்சேவின் பாரம்பரிய குடியிருப்பையும் நெருப்பு வைத்து எரித்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததால் தன் குடும்பத்தினருடன் அலரி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவர் கடற்படை […]
இலங்கையில் போராட்டத்தில் கலவரம் நடக்காமல் இருக்க கன்னியாஸ்திரிகள் இரவு முழுக்க உறங்காமல் போராட்டக்காரர்களை காத்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீப நாட்களாக கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கலவரம் வெடித்தது. அங்கு பதற்ற நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மத மோதலாக மாற்றுவதற்கு இலங்கை […]
இலங்கையிலிருந்து மகிந்த ராஜபக்சே வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்திருக்கிறது. பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக மகிந்தராஜ பக்சே அறிவித்திருந்த சிலமணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசுக்கும் எதிராக போராடுபவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பல பேர் காயமடைந்து இருக்கின்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இருப்பினும் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்து வருகின்றது. […]
இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தை உடனே கூட்டுவதற்கு சபாநாயகரிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தது, கொழும்பு நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்நிலையில், மக்கள் கடுமையாக கொந்தளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே, சபாநாயகரிடம் உத்தரவிட்டிருக்கிறார்.
இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்கு ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
மதுரையில் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.