Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் கனடா…. வெளியான அறிவிப்பு…!!!

கனடாவில் தலைநகர், உக்ரைன் நாட்டிலிருந்து வரும் மக்கள் தங்கள் நாட்டில் 3 வருடங்கள்  தங்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து, அந்நாட்டின் பல நகர்களை நிலைகுலைய செய்திருக்கின்றன. எனவே, மக்கள் பள்ளிகள், திரையரங்குகள் சமூக மையங்களில் பதுங்கியுள்ளனர். மேலும், தங்களை காத்துக்கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். தற்போதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். இந்நிலையில், கனடாவில் தலைநகர் ஒட்டாவா, உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறும் மக்கள், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதல்… உக்ரைனின் பாலே நடக்கலைஞர் பலி…!!!

ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் நாட்டின் நடனக்கலைஞர் ல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் உக்ரைன் நாட்டின் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில், 43 வயதுடைய அந்நாட்டின் பாலே நடன இயக்குனரான ஆர்டியோம் தத்சிஷினுக்கு  காயம் ஏற்பட்டது. எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த மூன்று வாரங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 109 குழந்தைகள் பலி…. தொட்டில்களுடன் நடந்த அஞ்சலி…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 24-ஆம் நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டின் லிவில் நகரத்தில் இருக்கும் கவுன்சில் அலுவலகத்தின்  வெளியில் குழந்தைகளுக்கான தொட்டில் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது வரை ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 109 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டிருக்கிறது. எனவே, போரில் […]

Categories
உலக செய்திகள்

உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றி…. பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய வங்காளதேச பிரதமர்…!!!

வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் வெளியேற உதவி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டில் நுழைந்த மூன்றாம் நாளில் அங்கு மாட்டிக் கொண்ட இந்திய மக்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலமாக, இந்திய மக்களுடன் சேர்த்து வேறு நாட்டினரும் மீட்கப்பட்டனர். பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

போர் எதிரொலி…. ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை…. நார்வே அறிவிப்பு…!!!

நார்வே அரசு, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து கடுமையாயக போர் தொடுத்து வருவதை உலக நாடுகள் எதிர்த்தன. எனினும், ரஷ்யா பின்வாங்கவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்திக்கொண்டன. இந்நிலையில், நார்வே தங்கள் நாட்டிலிருந்து பொருட்கள், சேவைகள், தொழில்நுட்ப ஏற்றுமதி […]

Categories
உலக செய்திகள்

சப்பா….!! இன்னும் எத்தனை நாள் தான் தாக்கு புடிக்க முடியும்….? திணறி வரும் ரஷ்யா….!!!

ரஷ்யாவின் படையடுப்பை 20 நாட்களுக்கு மேலாகியும் உக்ரைன் வீரர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனை ஒரே வாரத்தில் கைபற்றி விடலாம் என்று புதின் நினைத்து இருந்தார். இந்த நிலையில் 20 நாட்களுக்கு மேலாகியும் உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதற்கிடையில் ரஷ்யா உக்ரைனின் வான்வெளியை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் 1,396 போர் […]

Categories
உலக செய்திகள்

OMG….!! “நோய் தொற்று பரவும் அபாயம்”…. உக்ரைன் மருத்துவர்களின் பரபரப்பு தகவல்….!!!

ரஷ்ய படையினர் உக்ரைனின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டடு மழை நீரையும், பணியையும் சேகரித்து குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உயிருக்கு பயந்து பொது மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகள் மீது நடத்திய தாக்குதலால் மருந்துப் […]

Categories
உலகசெய்திகள்

இதுதான் காரணமா..? தடுப்பூசி அங்கீகரிப்பதில் தாமதம்… உலக சுகாதார அமைப்பு கருத்து…!!!!

ஸ்புட்னிக் வி  தடுப்பூசி மீதான மதிப்பீடு தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவியது. அதில் ரஷ்யாவில் தான் முதன் முதலாக கொரானா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் பின் ரஷ்யா உட்பட 60 க்கும்  மேற்பட்ட நாடுகளில்  ஸ்புட்னிக் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துங்க…. ரஷ்யாவுக்கு பறந்த அதிரடி உத்தரவு…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இப்போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்யபடைகள் முன்னேறி வருகிறது. அத்துடன் பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் தங்களது நாட்டில் ரஷ்யா இனப் படுகொலை […]

Categories
உலக செய்திகள்

“விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி!”…. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 21-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். இதனால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடு உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி…..!!!!

சென்னை கட்டுமான பணிக்கான சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்து அவ்வபோது விலையை  உயர்த்தி வருகிறது. சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு சிமெண்ட் விலை ரூபாய் 60 வரை உயர்த்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லரின் நாஸி படை போல் ரஷ்யா செயல்படுகிறது… உக்ரைன் குற்றச்சாட்டு…!!!!

ரஷ்ய ராணுவம் ஹிட்லரின் நாஸிப்படை போல் செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ராணுவம் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் போன்று செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குறை கூறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா பிரதிநிதி செர்கீ பங்கேற்று தற்போதைய போர்கள் பற்றி பேசியுள்ளார். உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வரும் இந்தியப் படையினர் மனித இனம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்டு 31 வரை ஏற்றுமதிக்கு தடை…. பல மடங்கு அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை….!!!

போர் காரணமாக ரஷ்யாவில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் ,ரஷ்யா  போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உன் மீது போர் தொடுத்த ரஷியா மீது மேற்கு உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் இருந்து வெளியேறி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் சர்க்கரை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. 12 ரஷ்ய ராணுவ அதிகாரிகள் இறப்பு…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யாவைச் சேர்ந்த 12 முக்கியமான ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் மரியுபோல் அருகே நடந்த தாக்குதலில் 31 வயதான கேப்டன் அலெக்ஸி குளுஷ்ஷாக் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதாவது ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRU-வின் உயரதிகாரி உட்பட 3 முக்கிய ஜெனரல்கள் உள்பட 12 தளபதிகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ நடவடிக்கையின் ரகசியம் காரணமாக அதிகாரிகள் மரணம் […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்டு 31 வரை ஏற்றுமதிக்கு தடை… சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. முன்னாள் சோவியத் நாடுகளுக்கு கோதுமை, கம்பு, பார்லி, சோளம் ஏற்றுமதிக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்… ரஷ்யாவிற்கு எதிராக குரல் எழுப்பிய உக்ரைன் பிரதிநிதி…!!!

ஐ.நாவிற்காக உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்ய தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கியமான நகரங்களில்ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநா விற்கான உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா உக்ரைன் சார்பாக பேசினார். அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

போர் முடிவடையுமா?…. 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

உக்ரைனில் போர் நடக்கும் நிலையில் உக்ரைன்-ரஷ்ய தரப்பில் உள்நாட்டு பிரதிநிதிகளிடையே  நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் உக்ரைன் நாட்டில் எப்போது போர் முடிவடையும்? என்று வருத்தத்துடன் இருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் அனைத்து நகர்களிலும் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் காணொலிக் காட்சி மூலமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சோகம்…! 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு… குவியல் குவியலாக புதைக்கப்பட்ட புகைப்படங்கள்…!!!!

ரஷ்யாவின் போரால் மரியு போல் நகரில் மட்டும் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து உக்ரைனில் மரியு  போல் நகரில் மட்டும் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்கள உயிரிழந்துள்ள நிலையில், குவியல் குவியலாக மனித உடல்கள் புதைக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்நாட்டின் தெற்கு பிராந்திய நகரமான மரியு  போலில்  தொடரும் தாக்குதலால் குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள் சிதைந்து கடந்த 12 நாட்களில் மட்டும் அங்கு1,500க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடைந்த போர்… 7 மருத்துவமனைகள் அழிப்பு…. சேதமடைந்த 104 மருத்துவமனைகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் தற்போது வரை 7 மருத்துவமனைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் தங்களை காத்துக்கொள்ள அந்நாட்டிலிருந்து அதிக அளவில் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் தற்போதுவரை 7 மருத்துவமனைகள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து 26 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு தகவல்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள்  பலனளிக்காமல் போனது. எனவே, உக்ரைன் போர் உலகளவில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் ரஷ்யப் படைகள் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டிருக்கின்றன. இதனால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் முழுக்க நிலைகுலைந்து போயிருக்கிறது. அந்நாட்டில், பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் நாடு […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. துப்பாக்கிசூட்டில் அமெரிக்க பத்திரிக்கையாளர் பலி…. லீக்கான தகவல்…..!!!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதனை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில் போர் காரணமாக இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

“ஒருவேளை கொல்லப்படலாம் அல்லது சிறைபிடிக்கப்படலாம்” ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு…. உக்ரைன் அதிபரின் வேண்டுகோள்….!!

ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் தனது டெலிகிராம் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 18 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த பேரனது  தொடக்கத்தில்  உக்ரைனின் ராணுவ தளங்களை அளிப்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால் தற்போது உக்ரைனின்  பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஆஸ்பத்திரிகள் போன்ற பல பகுதிகளை ரஷ்யா படையினர் தொடர்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்…. உக்ரைனில் மாட்டி தவித்து வந்த சீனர்கள் மீட்பு….!!!

உக்ரைன் நாட்டில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்த சீன மக்களை ஏற்றிச் சென்ற விமானம் பாதுகாப்பாக சீனா சென்றடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 18ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் இருதரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, அந்நாட்டு மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கில் நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் மாட்டி தவித்து வந்த சீன மக்கள் தற்காலிக விமானத்தின் மூலமாக மீட்கப்பட்டு சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடைந்த போர்… அச்சத்தில் கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்…!!!

ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதால் அந்நாட்டின்  இர்பின் நகரத்திலிருந்து மக்கள் விரைவாக வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் தலைநகரை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. மரியுபோல் நகரத்தில் தாக்குதல்கள் தொடர்கிறது. 17 நாட்கள் நடந்த போரில் தற்போதுவரை 1300 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ரஷ்ய படைகள் கைப்பற்றிய மரியுபோல், கார்கிவ், மைக்கோலைவ், சுமி போன்ற நகர்களில் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து குண்டு […]

Categories
மாநில செய்திகள்

சிமெண்டு, ஜல்லி, செங்கல், விலை கடுமையாக உயர்வு… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!!

உக்ரைன்,  ரஷ்யாவின் மீது தொடர்ந்து 16 வது நாளாக கடுமையான  தாக்குதலை நடத்தி வருகிறது.  உக்ரைன் மீது ரஷ்யா பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ரூபாய் 350 க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் ரூபாய் 450ஆகவும்,செங்கல் ஓன்று8.50க்கு விற்ற நிலையில் தற்போது  ரூபாய் 11.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கால் இன்ச் ஜல்லி  ரூ.3,300 ஆகவும்(பழைய விலை ரூ.2,500)  ஒரு கிராவல் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ், ஜெர்மன் தலைவர்களுடன் பேசிய புடின்…. வெளியான தகவல்…!!!

ரஷ்ய அதிபர், ஜெர்மன் பிரதமரிடமும், பிரான்ஸ் அதிபரிடமும் தனித்தனியாக தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். ரஷ்ய அதிபரின் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதால் பாதிப்படைந்த பகுதிகளில் மனிதாபிமான நிலைகள் பற்றி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டின் தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்….. நிறுத்த இதுதான் ஒரே வழி…. டி.எஸ்.திருமூர்த்தி அட்வைஸ்…..!!!!!

தற்போது உக்ரைன், அமெரிக்க கூலிப் படையின் உதவியுடன் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதற்கிடையில் உக்ரைனில் ரசாயன ஆயுத ஆய்வகங்கள் இல்லை. அதற்கு பதில் உக்ரைன் மற்றும் பல்வேறு முன்னாள் சோவியத் நாடுகளில் அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை சுகாதார ஆய்வகங்களே இருக்கின்றன. அது அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்துக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. மேலும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் என்று உக்ரைன் பதிலளித்தது. […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் – ரஷ்யா போர்” எங்களின் 1300 வீரர்கள் உயிரிழப்பு…. அதிபர் அளித்த பேட்டி….!!

உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பேட்டியளித்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போர் உலக நாடுகளிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ரஷ்யா நாளுக்கு நாள் உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்து வருவதால் மக்கள் குழிக்குள் பதுங்கிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைன் அதிபர் பேசுகையில் “இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளார். குண்டுகளை வீசுவதும் மக்களை கொன்று நகரத்தை கைப்பற்றுவதும் தான் ரஷ்ய படையின் குறிக்கோள் என்றால் வரட்டும் […]

Categories
உலக செய்திகள்

போருக்கு அப்புறம் நாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம்…. அச்சம் தெரிவித்த ரஷ்ய வீரர்கள்…..!!!!!!

உக்ரைன் மீதான போர் 16-வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதலுக்கு பின் ரஷ்யா திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படுவோம் என்று உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்யவீரர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷிய வீரர்கள் சில பேர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஒரு ரஷ்ய இராணுவ வீரர் போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக நாங்கள் கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிலிருந்து 25 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்ட பிறகு உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 25 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டையே நிலைகுலையச் செய்திருக்கிறது. எனவே, உக்ரைன் மக்கள் தங்களை காத்துக்கொள்ள நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ⚡️UN: At least 2.5 million Ukrainians have fled the country since Russia’s full-scale invasion began on Feb. 24. According to the […]

Categories
உலக செய்திகள்

இதே நிலை தொடர்ந்தால் அவ்வளவு தான்…. ரஷ்ய அதிபருக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவது ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து  கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் முக்கியமான நகர்களில் பீரங்கி, ஏவுகணை, ராக்கெட் மூலமாக தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரேன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 10,000 கோடி நிதியுதவி… சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்…!!!!

உக்ரைனுக்கு  பத்தாயிரம் கோடி அவசர உதவியாக வழங்குவதற்கு சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுபற்றி கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா  ஜார்ஜீவா “போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை  சமாளிக்க  1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்காக நிர்வாக குழுவிற்கு அனுப்பி இருக்கிறோம். […]

Categories
உலக செய்திகள்

“தேவைப்பட்டால் எங்களிடம் உள்ள தளவாடங்களை அனுப்புவோம்”…. உக்ரனியர்களுக்காக பிரபல நாட்டின் அறிவிப்பு….!!!

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளதாக ஸ்பெயின்  அறிவித்துள்ளது. உக்ரைன் ,ரஷ்யா   இடையேயான போர் தொடர்ந்து 15வது நாளாக நீடித்து வருகிறது. இதில் இரு நாடுகள் இடையே ஏராளமான பொதுமக்கள், வீரர்கள் என பல பேர் உயிரிழந்துள்ளனர். போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள்  பாதுகாப்பைத் தேடி வெளியேறி வருகின்றனர். அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடு கொடுத்து வருகிறது. மேலும் தொடர்ந்து சண்டையிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் தேவைப்பட்டால் மேலும் ஆயுதங்களை வழங்க […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: “242 இந்தியர்களுடன்”…. தலைநகர் வந்தடைந்த “சிறப்பு விமானம்”…!!

உக்ரேனில் சிக்கித்தவித்த 242 இந்தியர்களை ஏற்றுக்கொண்டு போலந்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்தடைந்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 16 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் சிக்கல் ஏற்படும்….!!!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, உக்ரைன் போர் நீடிக்கும் பட்சத்தில் கொரோனாவின் போது எதிர்கொண்ட நிதி நெருக்கடியை காட்டிலும் கடும் நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைனில், ரஷ்யா மேற்கொள்ளும் போர் காரணமாக சர்வதேச சந்தையின் முதுகெலும்பாக திகழும் விற்பனை சங்கிலியில் பெரிதாக தாக்கம் உண்டாகி, பொருட்கள் பல மடங்கு விலை  அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஹெர்பெர்ட் டைஸ் கூறியிருக்கிறார். எனவே, ஐரோப்பிய நாடுகள் அதிக […]

Categories
உலக செய்திகள்

போர் விவகாரம்: சேவைகளை நிறுத்தும் “வணிக நிறுவனங்கள்”…. சொத்துக்களை முடக்க “சட்டம் போட்ட ரஷ்யா”….!!

ரஷ்யாவில் பல வணிக நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்தி வைத்துள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் இது தொடர்பாக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 நாளுக்கும் மேலாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய…. டைட்டானிக் பட கதாநாயகன்… !!!!

டைட்டானிக் படத்தின் கதாநாயகன்  உக்ரைனுக்கு 77 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 14வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.இதுவரை ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. ரஷ்யாவின் படை எடுப்பை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவும் நோக்கில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்கி வருகிறது. இந்நிலையில் டைட்டானிக் திரைப்படத்தில் ஜாக் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்: குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல்…. கடும் கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா…!!!

உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம்  ஏற்பட்டிருப்பதால் ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இன்றுடன் 15வது நாள் ஆகிறது. அந்நாட்டின் பல நகர்கள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், அங்கிருக்கும் மரியுபோல் நகரத்தில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில், ரஷ்யப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ரஷ்யாவில் வணிகத்தை நிறுத்திய வார்னர் மீடியா…!!!

வார்னர் மீடியா, ரஷ்ய நாட்டில் தங்களின் புதிய வணிகங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளும் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தையும் சேவையையும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்து வருகின்றன. WarnerMedia halts all new business operations In Russia Read @ANI Story | https://t.co/ia9Bh1XzBC#WarnerMedia #Russia pic.twitter.com/12dp3gXkAW — […]

Categories
உலக செய்திகள்

சுமி நகரில் போர் நிறுத்தம் அறிவிப்பு…. 17 வெளிநாட்டவர்களை மீட்டெடுத்த இந்தியா…..!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் அங்கு உள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் வாயிலாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தாய்நாடு வந்து சேர்ந்துள்ளனர். இந்நிலையில் சுமி நகரில் ரஷ்யப் படைகள் குண்டுமழை நடத்தி வருவதால், அங்கு சுமார் 700 இந்திய மாணவர்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: ரஷ்யாவில் உணவகங்களை மூடிய “பிரபல நிறுவனம்”…. அரை மாதமாக நீடிக்கும் போர்….!!

உக்ரேன் போரை முன்னிட்டு ரஷ்யாவிலுள்ள தங்களது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 15 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த அத்துமீறும் செயலுக்கு அந்நாட்டின் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி ஆகுமா…? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்…..!!!!

மாணவர்களின் கல்விக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக வங்கிகளில் பெற்ற கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது, உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர் சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அந்தந்த  மாநிலங்களில் உள்ள மருத்துவக் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் போர்க் உக்ரைனுக்கு அப்பால் பரவக் கூடாது… கருத்து தெரிவித்த நோட்டா அமைப்பு …!!!!

ரஷ்யாவின் போரானது உக்ரைனுக்கு அப்பால் பரவக் கூடாது என நோட்டா  அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் நோட்டா  அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நாட்டின் மீது  ரஷ்யா போர் தொடுத்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் நோட்டா உக்ரைனுக்கு நேரடியாக எந்த உதவிகளையும் வழங்காமல் வெறுமனே  ரஷ்யாவிற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் போர் உக்ரைனுக்கு  அப்பால் பரவக் கூடாது என நோட்டா அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்  கூறியுள்ளார். இதுபற்றி அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… பரபரப்பு தகவல்… அமைச்சர் கூறிய விளக்கம் என்ன…?

பெட்ரோல், டீசல் விலை உயர் உள்ளதாக பரவி வரும் தகவல் தொடர்பாக மத்திய அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா போரின் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் 118 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுஇறக்குமதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடைவிதிக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால் கச்சா எண்ணெய் விலை ஒரே […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வெளியேறிய 20 லட்சம் அகதிகள்…. ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைனில் போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள், தங்களை காத்துக் கொள்ள அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைகிறார்கள். இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து 20 லட்சம் மக்கள் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு விரைவாக நடந்த வெளியேற்றம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தம்… கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் அதிரடி…!!!

உக்ரைனில் போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோகோ கோலா, பெப்சி போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எம், லிவிஸ்,நெட் பிளிக்ஸ், மெக்டொனால்டு மற்றும் ஆப்பிள் ஆகிய பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், கோகோ கோலா, பெப்சி ஆகிய குளிர்பான நிறுவனங்கள், திடீரென்று ரஷ்யாவில் தங்கள் சேவையை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில்… போர்க்களத்தில் சிக்கித்தவிக்கும்…. 4000 வன விலங்குகள்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் 4000 வனவிலங்குகள் மீட்கப்படாமல் பரிதாப நிலையில் இருக்கின்றன. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் மேற்கொள்ளும் தாக்குதல்களால், சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் உயிரை காக்க, தப்பித்து வருகிறார்கள். தலைநகரான கீவ் பகுதியில் இருக்கும்  உயிரியல் பூங்காவில் சுமார் 4000 விலங்குகள் இருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல 2 இல்ல 61 மருத்துவமனைகள்…. ரஷ்ய ராணுவம் செய்த அட்டூழியம்…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்ய தாக்குதல் காரணமாக இதுவரையிலும் 61 மருத்துவமனைகள் சேதமடைந்து இருப்பதாக உக்ரைனின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இன்று 14-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரக்கூடிய ரஷ்ய படைகள் தலைநகரான கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இப்போரில் ரஷ்ய சார்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

தனியாக அழுதுகொண்டே நாட்டை கடக்கும் உக்ரைன் சிறுவன்… மனதை நொறுக்கும் வீடியோ…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் ஆதரவு இல்லாமல் தனியாக அழுதவாறே போலந்து நாட்டிற்கு சென்ற வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் ஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து மற்றும் மால்டோவா போன்ற பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். மேலும், மக்கள் தங்கள் உடமைகள், உறவினர்களை விட்டு ஆதரவின்றி பக்கத்து நாடுகளை அடைகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களில் ஒரு சிறுவன் யாருமின்றி […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலக போருக்கு பின்…. முதல் தடவையாக…. இயேசு சிலை வேறு இடத்திற்கு மாற்றம்…!!!

இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் தடவையாக உக்ரைன் நாட்டில் உள்ள வீவ் நகரத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் சிலை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடந்த 1939 ஆம் வருடத்திலிருந்து 1945ஆம் வருடம் வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் உக்ரைன் நாட்டில் இருக்கும் வீவ் என்னும் நகரத்தின் ஆர்மீனியன் தேவாலயத்தில் இருந்த இயேசு சிலையை, குண்டு வீச்சு போன்ற தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக […]

Categories

Tech |