Categories
உலக செய்திகள்

போலந்தில் ஏவுகணை மழை…. ரஷ்யாவின் அதிரடியால் இருவர் பலி… அவசர ஆலோசனை…!!!

போலந்து நாட்டை குறிவைத்து ரஷ்யா, ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு, போலந்தை அதிரச்செய்துள்ளது. அந்நாட்டில், சுமார் 12-க்கும் அதிகமான பெரிய நகர்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில்,  இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, போலந்து ஜனாதிபதியான ஆண்டிரெஜ் துடாவும், அமெரிக்க ஜனாதிபதியும் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, போலந்து அதிபரிடம்  பேசினேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு என் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணிகள்…. இந்தியரை கடுமையாக திட்டிய அமெரிக்கர்…!!!

போலந்தில், இந்தியரை ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணிகள் என்று கூறி அமெரிக்க சுற்றுலா பயணி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இனரீதியாக தாக்கப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், போலந்து நாட்டிற்குச் சென்ற அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ஒரு இந்தியரை பார்த்து, வீடியோ எடுத்துக்கொண்டே, எதற்காக போலந்து நாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? அமெரிக்க நாட்டிலும் பல பேர் இருக்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். மேலும், ஒட்டுண்ணி […]

Categories
உலக செய்திகள்

போலந்து நாட்டில் கடும் புயல்…. ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்வெட்டு… இருளில் மூழ்கிய நகர்…!!!

போலந்து நாட்டில் கடுமையாக புயல் வீசியதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. போலந்தில் நேற்று முன்தினம் கடுமையாக புயல் வீசி தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்தது. எனவே, மசோவா என்னும் மாகாணத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அந்நகரமே இருளடைந்து காணப்பட்டது. 36,000 மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், புயலில் சிக்கி ஒரு நபர் பலியானதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்புப்படையினர், புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியை  […]

Categories
உலக செய்திகள்

புடின் ஹிஸ்ட்லரை விட கொடியவர்… போலந்து பிரதமர் அதிரடி…!!!

போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி, ஹிட்லரை காட்டிலும் விளாடிமிர் புடின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, விளாடிமிர் புடின், ஹிட்லரும் கிடையாது ஸ்டாலினும் கிடையாது. அவர் அதை விட அதிக ஆபத்து நிறைந்தவர். உக்ரைன் நாட்டின் இர்பின், புச்சா, மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களில் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரி மகாராணியாருடன் ரகசிய சந்திப்பு…. என்ன பேசினார்கள்…? வெளியான தகவல்…!!!

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறிய இளவரசர் ஹாரி கடந்த வாரம் மகாராணியாரை இரகசியமாக சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரி கடந்த 2014ம் வருடத்தில் போரில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு Invictus Games என்ற ராணுவ போட்டிகளை உருவாக்கியிருக்கிறார். இந்த வருடத்தில் நெதர்லாந்து நாட்டில் இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நெதர்லாந்து நாட்டிற்கு செல்லும் வழியில் பிரிட்டன் நாட்டின் மகாராணியான தன் பாட்டியை இளவரசர் ஹாரி சந்தித்திருக்கிறார். மகாராணியை […]

Categories
உலக செய்திகள்

பேரழிவு உண்டாகும்…. பக்கத்து நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பெலாரஸ்…!!!

பெலாரஸ் அரசு, இராணுவ பலத்தை அதிகப்படுத்திய தங்கள் பக்கத்து நாடுகளை கடுமையாக எச்சரித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய சமயத்தில் பெலாரஸ் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொள்வதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் பெலாரஸ் ரஷ்யப்படைகளுக்கு இடம் தரக்கூடாது என்று எச்சரித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு அடுத்ததாக ரஷ்யா தங்களை குறிவைக்க நேரிடும் என்ற பயத்தில் லிதுவேனியா, போலந்து, லாட்வியா போன்ற நாடுகள் ராணுவ பலத்தை அதிகரித்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்… போலந்து எல்லையில் காத்துக்கிடக்கும் லாரிகள்… வெளியான வீடியோ…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லைப் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. எனவே, போலந்து நாட்டு எல்லைப்பகுதியான Kukuryk-Kozlovichi-ல் நீண்ட தொலைவிற்கு அதிக லாரிகள் காத்து கொண்டிருக்கின்றன. விரைவாக கெட்டுப்போகக் கூடிய சாப்பாடுகளும் மருந்து பொருட்களும் இருப்பதால் ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-பெலாரஸ் வாகனங்களுக்கு தடை…. எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லை பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நீளமான வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், பெலாரஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளோடு எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்நாடுகளின் சரக்கு வாகனங்களுக்கு தடை அறிவித்திருக்கின்றன. எனவே, போலந்து நாட்டின் எல்லை பகுதியான Kukuryk- Kozlovichi-ல் அதிக தொலைவிற்கு லாரிகள் நீளமான வரிசையில் காத்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன்-ரஷ்யா போர்” இது தீவிரவாதம்…. போலந்து ஜனாதிபதி திடீர் குற்றச்சாட்டு…..!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வருவது போர் தாக்குதல் அல்ல, தீவிரவாதம் என்று போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா தெரிவித்து உள்ளார். உக்ரைனின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளிலிருந்து ரஷ்ய ராணுவம் பின்வாங்கிய சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரஷ்யாவின் போர் அத்துமீறல்களை பார்வையிட்டார். இதையடுத்து நேற்று(புதன்கிழமை) பால்டிக் நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளின் ஜனாதிபதிகள் தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

காயமடைந்த உக்ரைன் மக்களுக்காக… விமானங்கள் அனுப்பும் ஜெர்மன் ஆயுதப்படை…!!!

உக்ரேன் நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் அழைத்து வருவதற்கு ஜெர்மன் நாட்டின் ஆயுதப்படை, விமானங்கள் அனுப்புவதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 47-ஆவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் காயமடைந்த உக்ரைன் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆயுதப்படை விமானங்கள் அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. Cologne-Wahn என்ற ராணுவ விமான தளத்திலிருந்து போலந்து நாட்டின் தென்கிழக்கு […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் அதிகாலையில் சைரன் ஒலிக்கப்படும்… எதற்காக..? வெளியான அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டின் ஸ்மோலென்ஸ்க் என்ற பகுதியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக் கூறும் விதமாக போலந்தில் நாளை சைரன் ஒலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நடக்கும் போர் எப்போது தான் முடிவடையும் என்று உலக நாடுகள் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றன. எனினும் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக போலந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்ய தாக்குதலிலிருந்து தப்பி உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 மில்லியன் மக்கள் போலந்து நாட்டில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து போலந்து சென்ற மக்கள்…. உறவினர்களை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி ரயில் வழியாக போலந்து நாட்டின் எல்லை பகுதியை அடைந்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால் அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். அதன்படி அந்நாட்டு மக்கள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு போலந்து நாட்டின் எல்லைப் பகுதியை அடைந்துள்ளனர். அங்கு எல்லை அதிகாரிகள், அவர்களை வழிநடத்திச் சென்று அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தங்கள் உறவினர்களை பார்த்தவுடன் அந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் உக்ரைன் மந்திரிகளை சந்தித்த ஜோ பைடன்…. போர் குறித்து ஆலோசனை…!!!

போலந்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியையும், ராணுவ மந்திரியையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். உக்ரைனில் போர் நடக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து  சென்றிருக்கிறார். அந்நாட்டின் வார்சா நகரத்தில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரியான  டிமிட்ரோ குலேபா மற்றும் ராணுவ மந்திரியான ஒலெக்சி ரேஸ்னிகோபோன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார். அவர்கள் உக்ரைன் நாட்டில் தற்போது இருக்கும் நிலையை ஜோ பைடனிடம்  தெரிவித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியான ஆண்டனி […]

Categories
உலக செய்திகள்

உக்கிரமடைந்த போர்…. பரிதாப நிலையில் மக்கள் …அறிக்கை வெளியிட்ட ஐ.நா…!!!!!

உக்ரைனில்  30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து சுமார்  30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருகின்றனர்.  ஐ.நா அகதிகளுக்கான  முகமை  தெரிவித்துள்ளது . இருப்பினும் உக்ரைனில் உள்ள  நகரங்களில்  இன்னும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உக்ரைன்  மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் உச்சமடையும் போர்…. கீவ் நகருக்கு சென்ற 3 நாட்டு பிரதமர்கள்…!!!

உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிவ் நகரத்திற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரில் ரஷ்ய படைகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய படையினர், தலைநகர் கீவை குண்டுவெடிப்பு தாக்குதல்களால் அதிர வைத்து வருகிறார்கள். அந்நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவெடிப்பு தாக்குதல்களால் பெரும் சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இருக்கும் சுலோவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளின் பிரதமர்கள் உக்ரைனிற்கு நேற்று […]

Categories
உலக செய்திகள்

தனியாக அழுதுகொண்டே நாட்டை கடக்கும் உக்ரைன் சிறுவன்… மனதை நொறுக்கும் வீடியோ…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் ஆதரவு இல்லாமல் தனியாக அழுதவாறே போலந்து நாட்டிற்கு சென்ற வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் ஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து மற்றும் மால்டோவா போன்ற பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். மேலும், மக்கள் தங்கள் உடமைகள், உறவினர்களை விட்டு ஆதரவின்றி பக்கத்து நாடுகளை அடைகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களில் ஒரு சிறுவன் யாருமின்றி […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை லட்சமா?…. உக்ரைனிலிருந்து திரண்டு வரும் மக்கள்….!!!

போலந்து எல்லை பகுதி காவலர்கள், தங்கள் நாட்டிற்குள் உக்ரைனிலிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நுழைந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கியதிலிருந்து ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்தியாவை சேர்ந்த மக்கள் 10,000 பேர் உட்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், போலந்து நாட்டின் எல்லை காவலர்கள், கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்யப்படை, உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து முதல் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உக்ரைனிற்கு போர் விமானங்கள் அனுப்பமாட்டோம்…. போலந்து அறிவிப்பு…!!!

போலந்து அரசு, உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் அனுப்பப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. எனவே, கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 50 கோடி டாலர் மதிப்பு கொண்ட போர் விமானங்கள், ஆயுதங்களை அந்நாட்டிற்கு அனுப்ப ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் தீர்மானித்தனர். இந்நிலையில் நேட்டோ அமைப்பில் இருக்கும் போலந்து, உக்ரைன் நாட்டிற்கு போர் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்த நேரத்துல இப்படி ஒரு மோசடியா…? மக்களே உஷாரா இருங்க….!!!

 உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி பெற்றோரிடம் பணம் மோசடி செய்த நபரை போலீஸ் கைது செய்துள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் பல்வேறு நாட்டு மக்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்திய அரசும் இதற்காக பல ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இந்நிலையில் இந்திய குடிமக்களை ருமேனியா, போலந்து நாடுகளின் வழியாக அழைத்து வருவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா!”…. 52 வருஷம் கழிச்சு டெலிவரியான தபால்…. ஒரு சுவாரஸ்ய நிகழ்வு….!!!

தற்போதைய நவீன உலகில் தபால்கள் அரிதாகிப் போன நிலையில் லிதுவேனியா நாட்டில் 52 வருடங்களுக்கு முன் தபால் செய்த கடிதங்கள் தற்போது உரிய நபரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது. போலந்து நாட்டிலிருந்து 12 வயது சிறுமி, தன் தோழிக்கு அனுப்பிய கடிதம், அவர் 60 வயதை தாண்டிய நிலையில் தற்போது உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி, கடந்த 1970-ம் வருடம் மார்ச் மாதம். அதாவது ஈவா என்ற 12 வயது சிறுமி தன் தோழிக்கு, கிராமத்தில் […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் தீவிரமடையும் கொரோனா…. ஒரு லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள்….!!

போலந்து நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். போலந்தில் கடந்த ஒரே நாளில் 493 நபர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,00,254 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், அங்கு கடந்த ஒரே நாளில் 11,462 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 32 ஆயிரத்து 356 ஆக அதிகரித்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Categories
உலக செய்திகள்

போலந்து அதிபருக்கு மீண்டும் கொரோனா…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!

போலந்து நாட்டின் அதிபருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்து அதிபர், ஆண்ட்ரெஜ் துடாவின் அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனையடுத்து அதிபர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த 2020 ஆம் வருடம், அக்டோபர் மாதத்திலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டாவது தடவையாக அவருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

20 வருசமா டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளி…. தானாக வந்து சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்….!!

போலந்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் 20 வருடங்களாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி என்று தெரியவந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தலைநகருக்கு வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அங்காடியில் ஒரு நபர் முகக் கவசம் அணியாமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். 45 வயதுடைய அந்த நபர் 20 வருடங்களுக்கு முன் கொலை செய்திருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிலும் பரவிய ஓமிக்ரான்…. தீவிரமாக அளிக்கப்படும் சிகிச்சை…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

போலந்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவருக்கு தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான்உலகம் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் போலந்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலந்தில் வசித்துவரும் பெண்மணிக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி […]

Categories
உலக செய்திகள்

இப்படிதான் அத்துமீறி நுழையுறாங்க….! அகதிகளுக்கு உதவும் பெலாரஸ்…. ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நாடு….!!

பெலாரஸ் பாதுகாப்பு படையினர் அந்நாட்டில் இருந்து போலந்துக்குள் ஊடுருவ முயற்சிக்கும் அகதிகளுக்கு உதவும் விதமாக அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகளை போலந்து நாட்டு வீரர்களின் கண்களில் அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெலாரஸ் இராணுவத்தினர் அந்நாட்டின் வழியாக சென்று ஐரோப்பாவில் தஞ்சம் அடைவதற்காக போலந்து ஊடுருவும் அகதிகளுக்கு உதவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் பெலாரஸ் ராணுவ வீரர்கள் லேசர் மற்றும் டார்ச் லைட்டுகளை செரெம்சா என்ற கிராமம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலந்து வீரர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இவங்க தான் உதவி பண்றாங்க..! அத்து மீறும் அகதிகள்… ஐரோப்பிய யூனியன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

பெலாரஸிலிருந்து குடியேறும் நோக்கத்துடன் போலந்து நாட்டிற்கு வரும் அகதிகள் அந்நாட்டின் எல்லையில் காயங்களுடன் காத்திருக்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. பெலாரஸிலிருந்து போலந்து நாட்டிற்கு வரும் அகதிகள் பெலாரஸ்-போலந்து எல்லையில் கூடாரங்கள் அமைத்து கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் போலந்து நாட்டைச் சேர்ந்த படையினர் அந்நாட்டிற்குள் நுழைய முற்படும் அகதிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலந்து படையினருக்கும், அகதியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அகதிகள் பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே […]

Categories
உலக செய்திகள்

அகதிகள் பிரச்சனைக்கு…. இவர்தான் மூலகாரணம்…. போலந்து பிரதமர் குற்றச்சாட்டு….!!

வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். வார்சா: பெலாரஸிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்யும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமரான மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மாடேயுஷ் மொராவிஸ்கி பேசியதாவது “பெலாரஸில் இருந்து போலந்துக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் படையெடுத்து வருவதற்கு ரஷ்யாதான் […]

Categories
உலக செய்திகள்

‘இது உடம்பா இல்ல ரப்பரா’…. பார்வையாளர்களை அசத்திய…. போட்டியாளர்களின் நடனம்….!!

இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். போலந்தில் 18வது ரெட்புல் சர்வதேச பிரேக்கிங் நடன போட்டியானது நடைபெற்றது. இதில் இளைஞர்களும் இளம் பெண்களும் சிலிர்க்க வைக்கும் வகையில் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தனர். இது நடனமா அல்லது உடலை வில்லாக வளைக்கும் ஜிம்னாஸ்டிக்கா என்று அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர். அதிலும் போட்டியாளர்கள் தலை கீழாக நின்று கை கால்களை பலவித கோணங்களில் அசைத்து சாகசம் செய்தனர். இந்த போட்டியில் அமெரிக்காவின் லாஜிஸ்டிக்ஸ் B-girl என்றும் […]

Categories
உலக செய்திகள்

“போலந்தில் சூறாவளியால் சேதமடைந்த 930 கட்டிடங்கள்!”.. 4 பேர் உயிரிழப்பு..!!

போலந்து நாட்டில் சூறாவளி தாக்கியதில் 900-த்திற்கும் அதிகமான கட்டிடங்கள் பாதிப்படைந்ததோடு 4 பேர் உயிரிழந்துள்ளனர். போலந்து நாட்டின் மேற்குப் பகுதியிலும் மத்திய பகுதிகளிலும் சூறைக் காற்று பலமாக வீசியிருக்கிறது. இதில் அதிகமான மரங்கள் சாலைகளில் சாய்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் தலைநகரான வார்சாவில் ஒரு வாகனத்தின் மேல் மரம் சாய்ந்ததில், வாகனத்திலிருந்த இரண்டு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த சூறாவளி ஏற்பட்டதில் மொத்தமாக 4 நபர்கள் மரணமடைந்ததோடு, 18 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்ற வேண்டும்…. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் கூட்டறிக்கை…. பிரபல நாட்டிற்கு எச்சரிக்கை….!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்ற வேண்டும் என்று போலாந்திற்கு  ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலந்தை ஆளும் வலதுசாரி சட்டம் மற்றும் நீதி அரசியல் கட்சி அறிமுகப்படுத்திய நீதி சீர்திருத்தங்கள் தொடர்பாக போலந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இது நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பாவில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாம் என்ற […]

Categories
உலக செய்திகள்

போலந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறதா..? பிரதமர் அளித்த விளக்கம்..!!

போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இருப்பதாக கூறப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் விளக்கமளித்துள்ளார். போலந்து நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தங்கள் நாட்டை வெளியேற்ற விரும்புவதாக கூறினர். மேலும் முரண்பாடு ஏற்படும் சமயங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை காட்டிலும், போலந்து நாட்டின் தேசிய சட்டத்திற்கு முன்னுரிமை இருக்கிறது என்று அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மோதலை உண்டாக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய நிர்வாக குழு கூறியிருந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அதிரடியாக இயற்றப்பட்ட புதிய சட்டம்…. பொங்கியெழுந்த அரசுக்கு எதிரானவர்கள்…. பின்னணியை தெரிவித்த போலந்த்….!!

போலந்தில் ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியே உள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிரான சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியேவுள்ள ஊடக நிறுவனங்கள் தங்கள் நாட்டின் ஒளிபரப்பாளர்களை கட்டுப்படுத்துகிறது என்று கூறி போலந்து அரசாங்கம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒரு புதுவித ஊடக சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதாவது போலந்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஊடக சட்ட மசோதா வெளிநாட்டு நிறுவனங்களின் தடையை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம்.. போலந்து அரசு அறிவிப்பு..!!

போலந்து அரசு, இங்கிலாந்திலிருந்து வரும் மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. போலந்தில் சமீபத்தில் கொரோனா தொற்று நன்றாக குறையத்தொடங்கியுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே போலந்து அரசு, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின்  விமான போக்குவரத்தில் பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது,  இங்கிலாந்து நாட்டிலிருந்து போலந்திற்கு, வரும் […]

Categories
உலக செய்திகள்

புதுசா 2 பேர் வந்துருக்காங்க…. அழிந்து வரும் சைபீரிய இன புலி…மகிழ்ச்சியில் வன விலங்கு காப்பக ஊழியர்கள்…!!!

வன விலங்கு காப்பகத்தில் சைபீரிய இன புலி  2  குட்டிகளை ஈன்றுள்ளது. போலந்து நாட்டில் ப்ளாக் நகரில் வன விலங்கு காப்பகம் ஒன்று உள்ளது .இந்த வன விலங்கு காப்பகத்தில் இருக்கும்  சைபீரிய இன புலி ஒன்று 2  குட்டிகளை ஈன்றுள்ளது . இந்த புதிய புலிக் குட்டிகளின் பிறப்பால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் , அத்துடன் குறைந்து வரும் இந்த சைபீரிய இன புலிகளின் எண்ணிக்கை இனிவரும் காலத்தில் பெருகும் என்று நம்பிக்கை வைத்துள்ளதாகவும் வன […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

அயர்லாந்திலிருந்து, போலந்திற்கு சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அயர்லாந்திலிருந்து Ryanair நிறுவனத்தின் விமானம், சுமார் 160 பயணிகளுடன் போலந்து நாட்டிற்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இரவு சுமார் எட்டு மணிக்கு விமானம் திடீரென்று பெர்லினில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியுள்ளது. அதன்பின்பு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் பெடரல் காவல்துறையினர், உடனடியாக அந்த விமானத்தை சூழ்ந்து மோப்ப நாய்களுடன் விமானத்திற்குள் சோதனை செய்துள்ளார்கள். அதில் எந்தவித […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு…!! “ரிட்டையர் ஆகும் நாய்களுக்கும், குதிரைகளுக்கும் இனிமேல் பென்ஷன்”… வருகின்றது அதிரடி சட்டம்…!!

போலந்து நாட்டில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற நாய்களுக்கும்,குதிரைகளுக்கும் பென்சன் வழங்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் புதிய சட்டத்தை கொண்டுவர இருக்கின்றது. போலந்தில் திருடர்களை பிடிப்பதற்கு, போதை பொருட்களை கண்டறிவதற்கு, மீட்பு பணியில் ஈடுபவதற்கு  போன்ற சேவைகளுக்காக காவல்துறை,தீயணைப்பு துறை மற்றும் எல்லைக்காவல் துறை போன்ற இடங்களில்  நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இத்தனை வேலைகள் செய்தாலும் கூட அந்த நாய்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் மட்டுமே அரசால் கொடுக்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாய்களுக்கும் குதிரைகளுக்கும் அரசு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் 3வது அலை”… பாதிப்பு அதிகமா இருக்கு… புலம்பும் பிரபல நாடு….!!

ஐரோப்பிய நாடான போலந்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்கத்தை எங்கள் நாடு எதிர்கொண்டு வருகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சமீபத்தில் போலந்தில் சினிமா,ஹோட்டல், பனிச்சறுக்கு, திரையரங்குகள் போன்றவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா வைரஸின் பரவல் தீவிரம் அடைந்தால்  ஊரடங்கு நடவடிக்கைகள் மீண்டும் அமலில் கொண்டு வர வேண்டிய நிலைமை உருவாகும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இந்நிலையில்  போலந்து  கொரோனா வைரஸின் மூன்றாவது  அலையின் […]

Categories
உலக செய்திகள்

77 வருடங்கள் பழமை வாய்ந்த…. தேவாலய மணி…. பல வருட போராட்டத்திற்கு பிறகு மீட்க்கப்பட்ட சம்பவம்…!!

சுமார் 77 வருடங்களுக்கும் மேலான பழமையான தேவாலய மணி ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.  தெற்கு போலந்தில் உள்ள Slawicice என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் 1555 ஆம் வருடத்துடன் தொடர்புடைய பழமை வாய்ந்த தேவாலய மணி ஒன்று தங்களுக்கு சொந்தமானது என்று கடந்த இரண்டு வருடங்களாக தேடி வந்துள்ளார்கள். அப்போது ஜெர்மனியில் உள்ள மான்ஸ்டர் என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆலயத்தில் 400 கிலோ கிராம் எடையுள்ள அந்த மணி வைக்கப்பட்டுள்ளது […]

Categories
உலக செய்திகள்

நாஜி ஆட்சியில் நடந்த கொலைகள்… 75 வருடங்களுக்கு பிறகு முதியவர்க்கு கிடைத்த தண்டனை…!!

யூத சிறை கைதிகளை கொல்வதற்கு உதவியதாக கூறி முதியவர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் 1944 லிருந்து 1945 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் போலந்தின் ஸ்டான்ஸக் சிறையில் காவலராக பணிபுரிந்தவர் புருனோ. அப்போதைய காலகட்டத்தில் யூதர்கள் உட்பட 65 ஆயிரம் சிறைக் கைதிகள் ஸ்டான்ஸக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேலானோர் சிறையில் கொல்லப்பட்டனர். இதில் பலர் தலையில் சுடப்பட்டும்  விஷவாயு பரப்பியும் […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் நுழைந்த கொரோனா… முதலாவதாக ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!

போலந்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் மேற்கு போலந்தில் ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன்… தைரியமாக அடித்து விரட்டிய மூதாட்டி… வைரல் வீடியோ!

போலந்தில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் தைரியமாக துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   போலந்து நாட்டில் பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறார். இந்த அங்காடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் முகமூடி அணிந்து கொண்டு வந்த கொள்ளையன் ஒருவன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த மூதாட்டி அவனை பார்த்ததும் துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த மூதாட்டி […]

Categories

Tech |