போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுபத்ரா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது தந்தை பார்த்தசாரதி பெயரில் கோபாலபுரம் பகுதியில் 12.5 சென்ட் நிலம் இருக்கிறது. போலி ஆவணங்கள் மூலமாக அந்த நிலத்தை கோபாலபுரத்தைச் சேர்ந்த திருவேங்கடம்மாள் தனது […]
Tag: போலி ஆவணங்கள்
போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரிப்போல் கையெழுத்திட்டு வீட்டுமனைகள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி பகுதியை சேர்ந்தவர்கள் அரசு மற்றும் தணிகைவேல். ஆரணியிலிருந்து ஆற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் வெள்ளேரி பகுதியில் சென்ற 2019 வருடம் ஆர்.பி.ஜி கார்டன் தொடங்கப்பட்டு அங்கு வீட்டுமனைகள் விற்பனை நடைபெற்றது. இங்கு உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாததால் தனி அலுவலர்களாக இருந்த ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் கையொப்பமிட்டு […]
சொத்தை அபகரித்த குற்றத்திற்காக 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நாவலூர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இவர் தனது தாய் வீட்டின் மூலம் கிடைத்த 11 சென்ட் நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் சொத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு போலி பத்திரங்கள் தயார் செய்துள்ளார். இந்த போலி ஆவணங்களை காட்டி சாந்தகுமாரியின் வீட்டின் சுற்றுச்சுவரை பொக்லைன் இயந்திரம் […]
பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்ற விவசாயி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவாளூர் கிழக்கு தெருவில் முருகன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில் இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த போது அவரது பெயர், முகவரி மற்றும் சான்றிதல்களை பயன்படுத்தி ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது […]
சென்னையிலுள்ள ஜேப்பியார் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்ற முயற்சிப்பதாக அவரது மனைவி மத்திய குற்றப்பிரிவிற்கு புகார் கொடுத்துள்ளார். ஜேப்பியார் கல்வி குழுவின் தலைவரான ஜேப்பியார் , சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் உள்ள கணபதி தெருவில் அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த வீடானது அவரது மனைவியின் பெயரில் இருக்கின்றது. இந்நிலையில் ஜேப்பியார் இறந்த பிறகு இந்த வீடு பற்றிய பிரச்சினை கிளம்பியது. இந்த வீட்டை வைத்து ரூபாய் 5 கோடிக்கு கடன் வாங்கியதாகவும், இந்த கடனானது […]
சென்னையில் போலியான ஆவணங்களை வைத்து நிலத்தை அபகரித்த இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சென்னையை சேர்ந்த செல்வம் என்பவர் 2003 ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஸ்ரீகாமகோட்டி நகரில் 3600 சதுர அடி கொண்ட காலி நிலத்தை அவரது மனைவி திருமதி பாக்கியலட்சுமி பெயரில் வாங்கியுள்ளார்.நிலத்தின் மதிப்பு சுமார் 1.30 கோடி மதிப்புடையதாகும். இவர் நிலத்தை பார்த்து வெகு நாள்கள் ஆன நிலையில் அண்மையில் நிலத்தை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.அப்போது அவர் […]
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனையை போலி ஆவணங்கள் மூலம் உறவினர்கள் அபகரித்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் 6 மாதங்களாக கோவிலில் வசித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் வருவாய் துறையினரை போலி ஆவணங்களை தயாரித்து இறந்தவரின் பெயரில் பட்டா மற்றும் மாற்றம் செய்வதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வந்தவாசியை அடுத்த சாலமேடு கிராமத்தை சேர்ந்த வெட்டியானுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு 3 சென்ட் அளவு வீட்டுமனை பட்டா வழங்கியது. அந்த இடத்தில் கட்டிய […]