மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து போலி இணையதளம் பதிவு கட்டணம் வசூல் செய்கின்றது. கட்டணம் செலுத்திய பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது cbse.gov.in என்ற இணையதளம் தான் அதிகாரபூர்வ இணையதளமாகும். பின்வரும் https://cbsegovt.com என்ற இணையத்தளம் போலியானது என்று PIB ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மாணவர்கள் பணம் கொடுத்து அட்மிஷன் பேப்பர்களை பெற சொல்வது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. […]
Tag: போலி இணையதளம்
கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபார தளமாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கோவிலுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி, அதற்கான ரசிதினை பெற்று செல்கின்றனர். […]
மானியம் வழங்குவதாக கூறும் போலி இணையதளங்களுக்கு எதிராக தபால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சில ஆய்வுகள் மற்றும் வினாடி வினாக்கள் மூலமாக அரசு மானியங்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் மோசடியான இணையதள யூஆர்எல்-களுக்கு எதிராக இந்திய அஞ்சல் சனிக்கிழமை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கணக்கெடுப்புகளின் அடிப்படையில் மானியங்கள், போனஸ் அல்லது பரிசுகளை அறிவிப்பது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் இந்திய அஞ்சல் ஈடுபடவில்லை என்பதை நாட்டின் குடிமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். […]
அமுல் நிறுவனம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த இணையங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் கூட்டுறவு பால் விற்பனையகமான அமுல் நிறுவனத்தின் பெயரை வைத்து, மோசடி செய்யும் நபர்கள் போலியாக அமுல் நிறுவனத்தின் பெயரில் இணையதளங்களை உருவாக்கி, விநியோக உரிமம் பெற்றுத்தருவதாக ஏமாற்றி, லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மக்கள் அமுல் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது. மேலும் இது குறித்து அமுல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் […]