உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர்வதற்கு 500-க்கும் மேலானோர், தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அச்சடித்திருப்பதை அரசு தேர்வுகள் துறை கண்டுபிடித்திருக்கிறது. இதுவரை 2 ஆயிரத்து 500 மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்திற்கும் மேல் போலி என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட நபர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் அளித்து தமிழ்நாடு உட்பட பல்வேறுமாநில அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருவது உறுதியாகியிருக்கிறது. பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் […]
Tag: போலி சான்றிதழ்
போலி சான்றிதழ் மூலமாக தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து மோசடியில் ஈடுபட்ட வடமொழித்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “தமிழகத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. சுமார் 200 வடமாநிலத்தவர்கள் அஞ்சல் ஊழியர் பணி, சிஆர்பிஎஃப் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் போலி சான்றிதழ்களை தந்து பணியில் சேர்ந்துள்ளனர். […]
தமிழக அரசின் போலி சான்றிதழ் அச்சிட்டு வழங்கிய ஆசாமிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தபால்துறை பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையமானது நடத்திய தேர்வில் கலந்துகொண்ட பலர் இந்த போலி சான்றிதழ் வழங்கி இருப்பதை தபால்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு மேற்கொண்டனர். இதில் தபால்துறை பணியில் சேர்ந்தவர்கள் அளித்த தமிழக பள்ளிக்கல்வி சான்றிதழ்கள் போலியானது என்று தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக நம் […]
மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண் போலி சான்றிதழை கொடுத்து பயிற்சியில் சேர்ந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி பயிற்சிக்கு வந்துள்ளனர். இப்பயிற்சிக்கு வந்தவர்களின் […]
இத்தாலியில் காவல்துறையினர் உட்பட பல மக்களுக்கு தடுப்பூசியளிப்பது போல் பாசாங்கு செய்து, போலியாக சான்றிதழ் அளித்த செவிலியர் உட்பட 3 நபர்கள் கைதாகியுள்ளனர். இத்தாலியில் தடுப்பூசி முகாம் ஒன்றில் போலியாக தடுப்பூசி சான்றிதழ்கள் அளிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே காவல்துறையினர், அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அதில் ஒரு செவிலியர், சிரஞ்சில் இருக்கும் மருந்தை, வெளியில் ஊற்றிவிட்டு, வெறும் ஊசியை செலுத்துகிறார். அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை வைத்து உடனடியாக […]
இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக நீதிபதி ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்ததால் அவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2000ம் ஆண்டு நீதிபதியாக பணியில் இருந்தவர் முகமது யூசப். இவர் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருந்தார். பணியில் சேரும் பொழுது இவர் ரிசர்வ்டு பேக்வேர்டு ஏரியா எனப்படும் பின்தங்கிய பகுதியை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை கொடுத்திருந்தார். ஆனால் முகமது யூசப் மிர்குண்ட் தெஹ்சில் எனப்படும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போலி மதிப்பெண் சான்றிதழ் கண்டறியப்பட்டால் சேர்க்கை ரத்து செய்யப்படுவதுடன் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் […]
கொரோனா தொடர்பான அரசு சான்றிதழுக்கு பதிலாக போலியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுவிட்சர்லாந்து குற்றவியல் சட்டப் பிரிவின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கும், தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும், தொற்று பாதிப்பில்லை என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் அந்நாட்டு அரசாங்கம் கொரோனா குறித்த சான்றிதழ் ஒன்றை வழங்குகிறது. ஆனால் பொதுமக்கள் கொரோனா குறித்த […]
தனது மனைவியின் ஐந்தாம் வகுப்பு சான்றிதழில் மோசடி செய்ததாக ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ அம்ரித் லால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தன் மனைவியை போட்டியிட வைப்பதற்காக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை போல போலி சான்றிதழை அவர் தயாரித்துள்ளார். அதன் பிறகு இந்த உண்மை வெளியே தெரியவர போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
போலி சன்றிதழ்கள் கொடுத்து 21 வருடங்களாக ஏமாற்றி ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வியே ஒருவருக்கு உண்மையான கண் என்று கூறப்படுகிறது. நமக்கு கற்பிக்கும் குரு ஆசான் என்று போற்றக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்நிலையில் கடந்த 21 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த 1999ஆம் வருடம் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது 12ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் கொடுத்து அவர் ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ளார். […]
கொரோனா பரிசோதனை செய்யாமல் தொற்று இல்லை என போலி சான்றிதழ் கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என போலி முடிவுகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனையின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முஹமது என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்களுக்கு தொற்று இல்லை என்று கூறி போலியான சான்றிதழ்களை வழங்கியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுமார் ஒன்பது நாட்களாக முகமதை […]