மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி கண்ணன் காலணியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று சாமியை வணங்கி கையில் கயிறு கட்டினால் குடி பழக்கத்தை நிறுத்தி விடலாம் என சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை நம்பி ரவி தனது நண்பர்களான இன்பராஜ், அய்யனார், கார்த்திக் ஆகியோருடன் […]
Tag: போலீசார் எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜ் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் அதிகமாக கடைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் பேருந்து நிலையத்திற்குள் நீண்ட நேரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக போலீசார் பேருந்து நிலையத்திற்குள் […]
கூடலூர் சாலையில் காலை, மாலை நேரங்களில் ஒரு வழி பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் வேலியில் இருந்து கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹெல்த் கேர் வழியாக கூடலூர் நகருக்குள் ஒரு வழி பாதையாக வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்த நடைமுறையை சில வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது […]
பொது இடங்களில் பிராங்க் செய்யக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களாகிய பள்ளி வளாகங்கள், நடைபயிற்சி மைதானங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் பொதுமக்களை பிராங்க் செய்து வீடியோ எடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனால் கோவை மாநகர காவல்துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிலர் குறும்புத்தனமான வீடியோக்களை எடுக்கின்றனர். இந்த வீடியோக்களை யூடியூப் சேனலிலும் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். இந்த பிராங்க் […]
வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை சேர்ந்த வசந்தா என்பவர் சம்பவத்தன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தான் வசித்து வரும் வீட்டை தனது மகன் மற்றும் மருமகள்கள் இருவரும் கேட்டு தன்னை கொடுமை செய்வதாக கூறியுள்ளார். இதனால் இதுபற்றி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விசாரணை செய்தபோது, […]
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. தற்போது கொரோனா காரணத்தால் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு இருக்கும் கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருவி பகுதியில் இருக்கும் சாலையோர ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை வியாபாரிகள் ஊரடங்கை மீறி நேற்று நடந்தது திறந்து வைத்துள்ளனர்.இதுகுறித்து […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவையின்றி வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று குறித்து பொதுமக்களுக்கு இன்னும் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் நோயின் தாக்கம் அறியாமல் தேவையின்றி வெளியே வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா […]
திருவள்ளூர் பேரம்பாக்கம் பஜார் வீதிகளில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா , முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நேற்றும், இன்றும்( ஞாயிற்றுக்கிழமை)காலை 6 மணி முதல் 9 மணி வரை ,அனைத்து கடைகளும் திறந்திருக்க தமிழக அரசு […]