ரயிலில் இருந்த 12 கிலோ புகையிலை பொருட்கள், 1/2 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். மது பாட்டில்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரயில்களில் கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சிறப்பு படையினர் புவனேஸ்வரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் ரயிலில் […]
Tag: போலீசார் பறிமுதல்
சேலம் வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் போலீசார் சோதனை செய்தபோது 3 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ரயில் நிலையங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் கொல்கத்தா சாலிமர் – நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சேலம் நோக்கி பொம்முடி-சேலம் இடையே வந்தபொழுது சேலம் சிறப்பு […]
சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 1/2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள கீழ்கரிப்பூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி ,மணி மற்றும் போலீசார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சென்ற சரக்கு வேனை வழிமறித்த போலீசார் சோதனை நடத்த […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகள் கடத்தி வந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் . திருவள்ளூரில் ஆந்திராவில் இருந்து திருட்டுதனமாக தமிழகத்துக்கு நெல் மூட்டைகளை கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திருவள்ளூரை அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற லாரிகளில் உரிய ஆவணம் இன்றி ஆந்திராவிலிருந்து நெல் மூட்டைகளை […]
தஞ்சையில் ஆற்றுப்பகுதிகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்ட லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை, பாபநாசம், மெலட்டூர் போன்ற ஆற்றுப்பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டான ஆனந்தின் உத்தரவின்படி ,பாபநாசம் இன்ஸ்பெக்டரான விஜயா, அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டரான அழகம்மாள் மற்றும் மெலட்டூர் சப்- இன்ஸ்பெக்டரான உமாபதி ஆகிய போலீசார் ,நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தினர். இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள […]
திருக்காட்டுப்பள்ளி பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ,ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்த, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர் . தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் திருவாலம்பொழில் கிராமத்தில் ,நேற்று திருவையாறு தொகுதியில் கண்காணிப்பு குழு அதிகாரியான கஜேந்திரன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டரான பாலன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதி வழியே கண்டியூரிலிருந்து வந்த ஸ்கூட்டரை மறைத்து சோதனை செய்தபோது அது 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் […]