மர்ம நபர் ஒருவர் பேருந்தில் பயணித்த பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள டைக்ரே மாகாணத்தில் கிளர்ச்சி படையினருக்கும், அரசுப் படையினருக்கும் இடையே தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிளர்ச்சிப் படையினரை சார்ந்த பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் எத்தியோப்பிய அரசு படையினரும் பலர் பலியாகி வருகின்றனர். இதையடுத்து இந்த உள்நாட்டுப் போரின் தீவிரம் தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று பனிஷங்குள் […]
Tag: போலீசார் விசாரணை
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் கிராப்பட்டியிலுள்ள சின்கோ காலனி 2வது தெருவில் வசிக்கும் தம்பதிகள் மோகன்தாஸ்(70)-சுமதி(64). மோகனதாஸ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று இத்தம்பதியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். சந்தோசமாக தீபாவளியை கொண்டாடி விட்டு அவர்கள் வீட்டிற்குள் சென்று தூங்க சென்று விட்ட நிலையில் காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் […]
கணவன் மனைவி சண்டையில் விரக்தியடைந்த மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியிலுள்ள குடுமி குடிசை கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ஏழுமலை(51)-சாந்தி(46). ஏழுமலை தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஏழுமலை சாந்தியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சாந்தி வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். […]
வீட்டில் தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே அடித்து நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் வசிப்பவர் திருநாவுக்கரசு (43). இவர் கண்ணமங்கலத்தில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். இவரின் குழந்தை தூங்கும் சமயத்தில் அழுது கொண்டிருந்ததால் கதவை மூட மறந்துள்ளனர். இதையடுத்து மர்ம […]
பிரபல தொலைக்காட்சியின் துணை நடிகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவி” சீரியலில் தொகுப்பாளினி ஜாக்லின் நடிகையாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார். மேலும் துணை நடிகராக செல்வரத்தினம்(45) என்பவர் நடித்து வந்துள்ளார். இவர் எம்ஜிஆர் நகரில் உள்ள வள்ளல் பாரி தெருவில் வசித்து வந்துள்ளார். இலங்கை தமிழரான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். […]
இளம்பெண் ஒருவர் ஓடும் இரயிலில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி ரயிலானது சிவ மெக்காவுக்கு புறப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று 10 மணி அளவில் சிவமெக்கா பழைய ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் நிலையம் நோக்கி செல்லும் வழியில் உள்ள தூங்கா ஆற்று பாலத்தில் மேல் இரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு இளம் பெண் ஒருவர் ஆற்றில் […]
கணவர் இறந்த பிறகு இரண்டாவதாக 10 வயது இளைய நபரை திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் வசிப்பவர் அனுசியா(35). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவருடைய கணவர் கடந்த வருடம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுசியா தன்னை விட 10 வயது குறைவான ஒரு நபரை காதலித்து வந்ததால் அவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று […]
தூங்கிக்கொண்டிருந்த மூன்று மாத குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பழ வியாபாரம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழை மண்டி அருகே வசித்து வந்துள்ளார். மேலும் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பினாள் கொரோனா பரவி விடும் என்ற பயத்தினால் அங்கேயே இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]
பெண் ஒருவர் கணவர் குடும்பத்தாரின் கொடுமை தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்திலுள்ள பெண் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமான முதலில் இருந்தே பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அவரிடம் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் பெண்ணின் அப்பாவின் சொந்த வீட்டையும் கணவரின் பெயருக்கு மாற்றி வாங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த […]
மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் ஏற்ற முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள Halifox ல், சம்பவத்தன்று சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் வந்து இறங்கி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பிய இளம்பெண், தனக்கு தெரிந்த நபரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். […]
தன் மனைவியின் பிரசவத்துக்கு அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி மோசடி செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் Clay Marvin Hunt என்பவர் தனது காரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவர் டிரக் ஓட்டுனரிடம் சென்று தனது காரை டிராக்கில் கட்டி இழுத்து செல்ல வேண்டும் அதற்கு தான் பணம் தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து காரை டிரக்கில் ஏற்றி அவர் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் சொன்னது போலவே டிரக் ஓட்டுனருக்கு clay […]
ஆம்பூர் அருகே மனைவியை கொலை செய்ய முயன்று காவல்துறையிடம் சரணடைந்த கணவரிடம் புகார் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் இவருக்கும் இவரது மனைவி மஞ்சு ரேகாகவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக சண்டையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவனை பிரிந்த மஞ்சு ரேகா குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தரர். இந்நிலையில் மனைவி மஞ்சு ரேகா பணிபுரியும் தனியார் நிறுவனத்திற்கு சென்று கணவன் தினேஷ் தகராறில் ஈடுபட்டார். […]
மதுரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அமைந்துள்ள குடியிருப்பில் மர்ம குறியீடுகள் காணப்படுவதால் வடமாநில கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள DRO காலனி மதுரை மாநகரில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சில வீடுகளின் கதவுகள் அருகே […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொரோனா அச்சம் காரணமாக கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கட்டனாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக உள்ள சகிலா என்ற பெண் இரண்டு நாட்களாக காணவில்லை என ராசிபுரம் காவல் நிலையத்தில் அவருடைய மகன் சாகுல் புகார் கொடுத்த நிலையில் இன்று பாலாஜி நகர் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அதிகாரிகள் கொரோனா […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டி குன்னத்தூர் சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேல் கமல் பாஷா பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் தற்போது தீபாவளி பண்டிகைக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுவகையிலான பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் […]
அரக்கோணத்தை சேர்ந்த இளைஞர் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 146 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் சுவால்பேட்டைபால் சொஸைட்டி சுப்பிரமணியம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் கஞ்சா வைத்திருந்ததாக சென்னை மயிலாப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் விசாரணையில் பாலாஜி அரக்கோணம் சுவால்பேட்டைபால் சொஸைட்டி சுப்பிரமணியன் தெருவில் வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அரக்கோணம் சென்னை காவல் துறையினர் பாலாஜியின் வீட்டில் சோதனையிட்டதில் 146 கஞ்சா இருந்தது. […]
புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் துப்பு ராயப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் நரசிங்கன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திப்பு ராயப்பேட்டையைச் சேர்ந்த திப்ளான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த திப்ளான் பெயிண்டராக வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதிக்கு திப்ளான் […]
தேனி மாவட்டம் கம்பம் அருகே குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். காமயகவுண்டன்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் கவிதா தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளனர். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் பிரபாகரன். இதனை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் கவிதாவை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கவிதாவை பிரபாகரன் […]
பூந்தமல்லி அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லி அடுத்த நசரேத் பேட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிரமான கண்காணிப்பில் இறங்கிய காவல்துறையினர் நசரேத் பேட்டையை அடுத்த வரதராஜபுரம் பகுதியிலுள்ள புல்லட்டில் வந்த இரண்டு நபர்களை மடக்கி விசாரணை செய்தனர். மேலும் அவர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இவர்களை கைது செய்த […]
நெடுஞ்சாலைகளில் செல்லும் கண்டெய்னர் லாரிகளில் இருந்து திரைப்படத்தில் வருவது போல செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் கும்பலை ஆந்திரா போலீசார் பிடித்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓடும் லாரியில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் எப்படி கொள்ளை போகின்றன, என்பதை விளக்கும் படத்தையும் அதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பரபரப்பான தங்க நாற்கர நெடுஞ்சாலை, ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கொல்கத்தா செல்லும் சாலை. ஊருக்கு வெளியே மாற்று வழி சாலை என்பதால் மக்கள் நடமாட்டமின்றி […]
சென்னை காவல்துறையிடம் வகையாக சிக்கியிருக்கும் புல்லட் களவாணிகள் வாட்ஸ் அப் குழு அமைத்து திருடியது அம்பலமாகியிருக்கிறது. திருட்டு வாகனம் என்று தெரிந்தே வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து எப்படிப்பட்ட பைக் வேண்டும் என்று ஆர்டர் பெற்று அதன் அடிப்படையில் அவர்கள் திருட்டை அரங்கேற்றி இருப்பதே திரைப்பட காட்சிகள் போல சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது. அக்டோபர் 6-ம் தேதி மக்கள் நடமாட்டமிக்க எழும்பூரில் வசிக்கும் தலைமைக் காவலரின் புத்தம் புதிய புல்லட் மோட்டார்சைக்கிள் மாயமானது. இதேபோல சொல்லி வைத்தது போல புல்லட் […]
திண்டுக்கல்லில் வீட்டையின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க செயினை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திண்டுக்கல்லில் புறவழிச்சாலையில் உள்ளது எஸ்.பி.ஆர் நகர் இரண்டாவது தெருவில் சௌந்தரராஜன் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் தங்களது சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சௌந்தரராஜன் இறந்த பிறகு தமிழ்செல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தமிழ்ச்செல்வி வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள அவரது மகள் சசிரேகா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று வீட்டு வேலைக்காக […]
புதுச்சேரியில் தனியார் கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 கடத்தல் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள தனியார் கட்டடத்தில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டது. எழுபத்து நான்கு […]
இலங்கைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நபர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தஞ்சாவூர் விளார் சாலையில் இருக்கும் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் யூசப். இவர் இலங்கையை சேர்ந்த அசிலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று யூசப் தனது காரில் சென்று கொண்டிருந்த சமயம் அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள காரிலிருந்து […]
பீளமேட்டில் ஒரு வீட்டில் பெண் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒரு ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையிலும் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பீளமேடு அருகே காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக பல மாதங்களாக கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் திலகவதிக்கு அப்பகுதியில் வசித்துவரும் பத்மநாபன் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையிட்டு […]
32 வயதான ரஷ்ய நபர் சனிக்கிழமை இரவு தனது குடியிருப்பின் அருகில் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மாஸ்கோவின் யெலட்மா கிராமத்தில் 32 வயதான ரஷ்ய நபரின் அபார்ட்மெண்டிற்கு வெளியே 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கூட்டமாக கூடிநின்று சத்தமாக பேசிகொண்டியிருந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது […]
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில்நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் உள்ள கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை […]
ஈரோடு மாவட்டம் அருகே அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மாயமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மவுலி, தருண்ஸ்ரீ, விஜய், மிதுன் ரித்தீஷ் ஆகிய நான்கு மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும் வீடு திரும்பவில்லை. மாலை முழுவதும் அனைத்து சுற்றுவட்டார பகுதிகளிலும் தேடிய நிலையில், அவர்கள் […]