மணலியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் 35 வயதுடைய சிவகுமார். இவர் ஆர்.கே. நகர் போலிஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சிவகுமார் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த வாரம் […]
Tag: போலீஸ்காரர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் புவனகிரி சேந்திரக்கிள்ளை மணிக்கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் முனிசாமி. இவருடைய மகன் 28 வயதுடைய பெரியசாமி என்பவர் கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்சமயம் சிதம்பரம் தில்லை நகரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் […]
மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மதுரை மாவட்டம் நெல்பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்த சரவணன் என்பவர் பலியானார். கண்ணன் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடம் […]
ட்ராபிக் போலீஸ்காரர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை அந்தேரியில் உள்ள ஆசாத் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் டிராபிக் போலீஸ் விஜய்சிங் குராவ். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை அவர் வழிமறித்து உள்ளார். விதிமுறைகளை மீறி வந்த அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து போலீஸ்காரர் மீது மோதியுள்ளது. இதில் அவர் முன்பக்கம் உள்ள பேனட்டின் மீது விழுந்தார். இருப்பினும் அந்த […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள அருகம்பட்டியில் தெய்வராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் தெய்வராசு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் காவல் நிலையத்தில் தனது பணி முடிந்து கீரனூரில் இருந்து கள்ளிமந்தையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கோட்டை, உலகம்பட்டி சரகம் பகுதியில் இரண்டு காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி காவல் நிலையத்தில் 35 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த போலீஸ்காரர் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து கிருமிநாசினிகள் காவல் நிலையம் முழுவதும் தெளிக்கப்பட்டது. மேலும் மற்ற காவல்துறையினருக்கும் கொரோனா பரிசோதனை எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல எஸ்.எஸ்.கோட்டை காவல் […]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்தோ-திபெத் பயிற்சி மையத்திலிருந்து திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள பூவந்தி காவல் சரகத்தில் இலுப்பக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் புதிதாக கர்நாடகம் மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரஹாசா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஒரு வாரத்திற்கு […]
திருச்சி அருகே திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ஞாயிறு அன்று பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லால்குடி சாலையில் சாலக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு மினி வேன் ஒன்று குறுக்கே வந்துள்ளது. ரஞ்சித் குமார் பிரேக் […]
நாகர்கோவிலில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் போலீஸ்கார கணவர் மாமியார் வீட்டில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் ரிபா (33) என்பவர். இவருக்கும் குலச்சல் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆட்லின்ரிபாவின் கணவர் நெல்லை மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்லின் ரிபா தன் குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு […]