Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா.?” போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு..!!!

போலீஸ் சூப்பிரண்டு போதை பொருட்களை ஒழிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென மோட்டூர், கீழ்மொனவூர், அப்துல்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? பொதுமக்கள் போதை பொருட்களை பயன்படுத்துகின்றார்களா? என சோதனை செய்தார். மேலும் மக்களிடமும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் காட்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு… போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு..!!

திருப்பத்தூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையங்களை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? என்பது குறித்தும் காவல்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் பகுதியில் ரணசிங்கபுரம், தென்மாபட்டு, பாபா அமீர்பாதுஷா மேல்நிலைப்பள்ளி, […]

Categories

Tech |