Categories
தேசிய செய்திகள்

“ஒரு மன்னிப்பு இல்ல, யாரும் ராஜினாமா செய்யல”…. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு…. மோர்பி பால விபத்தில் கொந்தளித்த காங்கிரஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு விபத்தில் சிக்கிய 170-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சீரமைப்பு பணிகள் திறக்கப்பட்ட 5 நாட்களிலேயே பாலம் இடிந்து விழுந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு குஜராத் மாநில அரசின் மீதும், மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சிகள் சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.  அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில்….. சிபிஐ நடத்திய சோதனை நிறைவு….!!!!

டெல்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான  ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு ஆகியவை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு ஏற்கனவே சிபிஐ, […]

Categories
மாநில செய்திகள்

எல்லாக் குடும்பங்களும் அங்கு ஒருமுறை போயிட்டு வாங்க…. ப. சிதம்பரம் ட்விட் பதிவு…..!!!!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சென்னையிலுள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்று வந்த அனுபம் தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சென்னையிலுள்ள அண்ணா நூலகத்துக்குச் சென்றேன். உலக நாடுகளின் தலைநகரங்களில் இருப்பது போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம். இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என கூறும் அளவுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்கவைத்தது. எல்லாக் குடும்பங்களும் ஒருமுறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம் அது. புத்தாண்டில் மனம் நிறைந்து […]

Categories
மாநில செய்திகள்

ப.சிதம்பரம், முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, ப. சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

மோடியின் ஐநா உரையை…. யாருமே பாராட்டவில்லை…. ப.சிதம்பரம் கருத்து…!!!

ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தைத் தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ஐநா பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது பெரும்பாலான உறுப்பு நாடுகள் சபையில் இல்லை என்று கூறியுள்ளார். மோடியின் உரைக்கு யாரும் பாராட்டு கூட தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஐநா நிரந்தர உறுப்பு நாடு என்ற இந்தியாவின் அந்தஸ்து புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

34 மாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை…. ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

23 கோடி மக்கள் வறுமைக்கு…. இது தான் காரணம்…. ப.சிதம்பரம் குற்றசாட்டு…!!!

இந்தியாவில் கொரோன இரண்டாவது அதிகமாக பரவி வருவதை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வேலையில்லாமல் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுதற்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் […]

Categories
தேசிய செய்திகள்

அதிசயம் ஆனால் உண்மை…. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை…. ப. சிதம்பரம் குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கு?… ப. சிதம்பரம் கடும் விமர்சனம்…!!!

பெண்களைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக என்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களைப் பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை… ப. சிதம்பரம் விமர்சனம்..!!

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றன. பெண்களைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு பிறகு பிரளயம் வரட்டுமே… ப. சிதம்பரம் டுவீட்…!!!

தமிழக முதல்வர் பதவி காலம் முடியும்போது தமிழகத்திற்கு கடனை விட்டுச் செல்கிறார் என ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல… பா சிதம்பரம் பதிவு ..!!

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற அதிமுக அரசு சொல்வது உண்மை அல்ல என்று பா சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ள பதிவில்: தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அதிமுக அரசு சொல்கிறது. அது உண்மை அல்ல. மின்மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையை பூர்த்தி செய்துகொண்டு மீதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள். அந்த நிலையில் தமிழ்நாடு தற்போது இல்லை தமிழ்நாட்டின் மின்சார தேவையில் 50 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்வதை கைவிடுக…. ப. சிதம்பரம் வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்தல் போன்றவற்றை கைவிட வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் இடத்தை பாஜக பிடித்துவிடும்… ப.சிதம்பரம் எச்சரிக்கை…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரஸ் இடத்தை பாஜக பிடித்துவிடும் என ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அலாவுதீனின் அற்புத விளக்கா”… அதிமுகவை சரமாரியாக விமர்சித்த ப. சிதம்பரம்…!!!

ஆட்சி முடியும் நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நேர வேடிக்கை மத்தாப்பூ என அதிமுக அரசை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மீள வழி இதுவே… ப.சிதம்பரம் கூறிய கருத்து…!!!

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதால் அது மீள இதுவே சிறந்த வழி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னுடன் விவாதிக்க தயாரா எடப்பாடி?”… ப. சிதம்பரம் அதிரடி கேள்வி…!!!

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் என்ன நன்மை என்று முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா என ப.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
உலக செய்திகள்

மற்றொரு நமஸ்தே டிரம்ப் நடத்துவாரா மோடி?… ப.சிதம்பரம் அதிரடி பேச்சு…!!!

இந்தியாவை நெருங்கிய நட்பு நாடு என்று கூறிய அமெரிக்க அதிபர் தற்போது இந்தியாவை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அதனால் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நடந்த பிரச்சாரத்தின் போது இந்தியாவை நட்பு நாடு என்று கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதனைப்போலவே சீனா மற்றும் ரஷ்யா ஆகிய […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியை போல ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்துங்கள் – ப.சிதம்பரம்

விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் ட்வீட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார திட்ட மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி மட்டுமே – ப.சிதம்பரம் ட்வீட்!

பொருளாதார திட்ட மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி மட்டுமே என ப.சிதம்பரம் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்டங்களாக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? ப. சிதம்பரம் கேள்வி!

இந்தியாவில் ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என ப. சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை 3ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு இன்றுடன் நிறைவடைடைய உள்ள நிலையில் 4ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பிரதமர் மோடி கொடுத்த காலிப்பக்கத்தை நிதியமைச்சர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் – ப. சிதம்பரம் ட்வீட்!

பிரதமர் கொடுத்த காலிப்பக்கத்தை நிதியமைச்சர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் என ப. சிதம்பரம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார […]

Categories
மாநில செய்திகள்

நாட்டில் பஸ் மற்றும் விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் – ப.சிதம்பரம் ட்வீட்!

பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம் என்பதால் அதனையும் தொடங்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது… நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும் – ப.சிதம்பரம் ட்வீட்!

ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது, நம்பிக்கையோடு இருங்கள் என ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நாங்கள் கேட்கிறோம்….! ”பதில் சொல்ல யாருமில்லை” ப.சிதம்பரம் அதிருப்தி

ஏழை மக்கள் பதில் சொல்வதற்கு தான் யாரும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்கவும் – ப. சிதம்பரம் ட்வீட்!

ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 65 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாராக் கடன்…! ”ஏட்டுச்சுரைக்காய் விவாதம்” ப.சிதம்பரம் கருத்து …!!

வராக் கடன் குறித்த விவாதம் ஏட்டுச்சுரைக்காய் போன்றது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களின் கடன் ரூ. 68,000 கோடியை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  தனது […]

Categories
அரசியல்

ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு குடியேறியவர்களை அடைக்க முடியும்?: ப.சிதம்பரம்

ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராததால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலை…. இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது – ப. சிதம்பரம் தாக்கு!

இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலையில், இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என ப. சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 15,000ஐ கடந்துள்ளது. நாட்டில் 15,712 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 507 பேர் உயிரிழந்த நிலையில், 2,231 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் படும் துயரங்கள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து […]

Categories
தேசிய செய்திகள்

என் அன்பான நாடே அழு – மோடி கருத்துக்கு ப.சிதம்பரம் விமர்சனம் …!!

பிரதமரின் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நாளான இன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று உத்தரவிட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவு மூலம் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய  அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகளை மறுபரிசீலனை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பை தவிர பிரதமர் மோடி உரையில் புதிதாக ஒன்றுமில்லை – ப. சிதம்பரம் அதிருப்தி!

இந்தியாவை மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பை தவிர பிரதமர் மோடி உரையில் புதிதாக ஒன்றுமில்லை என ப. சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி உரையை ஆவலுடனும், கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் – ப. சிதம்பரம் ட்வீட்! 

 பிரதமர் மோடி உரையை ஆவலுடனும், கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.   இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9352 ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 980 குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளையுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள  நிலையில் இதனை மேலும் நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள்…. ட்விட்டரில் பட்டியலிட்ட ப. சிதம்பரம்!

மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய தகவல்கள் குறித்து ட்விட்டரில் ப. சிதம்பரம் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நாட்டு நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதில் ஊரடங்கை இரு […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு ரூ.1 கோடி உதவி: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பி.சிதம்பரம் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியை மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதியாகியுள்ளது.பிம்ப்ரி- சின்ச்வாட்டில் 19, மும்பையில் 11, அகமதுநகர், சதாரா மற்றும் வசாய் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் […]

Categories
அரசியல்

ஒலி,ஒளியால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது: ப. சிதம்பரம் கருத்து

“ஒலி,ஒளியால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது” – முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேக்குது தெரிவித்துள்ளார்.மேலும், கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ” எதிர்க் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம்; இந்தியா முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது – ப. சிதம்பரம் ட்வீட்!

இந்தியாவில் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பலவேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இத்தலைவர்கள் தங்களுடைய ஆலோசனையை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறத. இந்த நிலையில் இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார, நோயியல் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும் – மோடிக்கு ப. சிதம்பரம் வலியுறுத்தல்!

ஏப்ரல் 5ம் தேதி பிரதமர் மோடி கூறியதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் ஒளியேற்ற கூறும் பிரதமர் தயவு செய்து பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். Dear @narendramodi,We will listen to you and light diyas on April 5. But, in return, please listen to us and to the wise counsel of epidemiologists and […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் முடிவை நான் வரவேற்கிறேன்….. ப.சிதம்பரம் ட்வீட்!

ரெப்போ வட்டி வீதத்தைக் குறைப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவையும், அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நான் வரவேற்கிறேன். எனினும் இ.எம்.ஐ தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்ற நிலையில் உள்ளது. I had suggested that all due dates falling before 30 June may be deferred to 30 June. Borrowers have been made dependent on the bank concerned and will be disappointed. — […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் – ப. சிதம்பரம் ட்வீட்!

தமிழ்நாடு அரசு மாநில எல்லைகளை மூடினால் போதாது ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை (முடக்கத்தை) அறிவிக்க வேண்டும். மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும். ஊரடங்கைத் தவிர்க்க முடியாது. நாளை செய்ய இருப்பதை இன்றே செய்யலாமே? தமிழ்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கி விவகாரத்தில் பாஜக அரசின் திறமையின்மை அம்பலம் – ப. சிதம்பரம் ட்வீட்!

யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ப. சிதம்பரம் ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, மூலதன நிதியை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் […]

Categories

Tech |