பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை […]
Tag: மகரவிளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளத்தில் உள்ள சாஸ்தா கோவில்கள் மிகவும் பழமை வாய்ந்ததும் பெருமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கோவிலுமாகும். பத்தனம்திட்டை மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள சபரிமலை என்ற மலை மீது பெருமை வாய்ந்த இந்த கோவில் அமைந்திருக்கின்றது. எல்லா மதத்தை சார்ந்தவர்களும் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் கோவில் சன்னிதானத்திற்கு மிக அருகில் கிழக்குப் பக்கமாக வாவர் என்பவருக்கான ஒரு இருப்பிடம் அமைந்துள்ளது. வாவர் […]
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இந்தவருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 15-ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 16-ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா முழக்கமிட இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனை காண வழக்கமாக […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடப்பதால் ஐயப்ப சுவாமி திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30 ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வருகின்ற 14ஆம் தேதி […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை முதல் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் […]
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 20ம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்திருக்கிறது. கொரோனா காரணமாக 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 3 ஆயிரம் பக்தர்கள் ஆக இருந்த நிலையில் 20 ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க தற்போது தேவசம்போர்டு முடிவு செய்திருக்கிறது. பக்தர்கள் அனைவரும் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.