பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை நினைவு கூறும் விதமாக யோர்க் நகரில் அவரின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று மரணமடைந்தார். அதற்கு பின் முதல் தடவையாக அவரின் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியார் மரணமடைவதற்கு முன் ஆறு அடி ஏழு அங்குலம் உடைய அவரின் சிலை, 70 வருட கால முடியாட்சியை சிறப்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையை மகாராணியாரே தேர்வு […]
Tag: மகாராணியார்
டென்மார்க் நாட்டின் ராணி இரண்டாம் மார்கரெத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் அரண்மனை வெளியிட்ட தகவலின் படி, ராணிக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ராணி ஃப்ரெடென்ஷ்பார்க் அரண்மனையில் இருக்கிறார். ராணி, இந்த வாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் ராணி மார்கரெத்திற்கு, 82 வயதாகிறது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கிறது. இந்த வருடத்தில் ராணி மார்கரெத்திற்கு இரண்டாம் தடவையாக […]
அமெரிக்காவிலிருந்து தன் செல்லப் பேரன் ஹாரியின் அழைப்பு வந்த உடனே உற்சாகமாகும் மகாராணியார், சில காலங்களில் மாறிவிட்டதாக அரண்மனை பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹாரி, அரச குடும்பத்தை விட்டு பிரிந்து அமெரிக்க நாட்டிற்கு சென்று வாழ தொடங்கிய போதும், தன் பாட்டி மகாராணியாருடன் தொலைபேசியில் பேசுவாராம். தன் செல்லப் பேரன் ஹாரி அழைத்தவுடன் மகாராணியார் உற்சாகமடைவார் என்று அரண்மனை பணியாளர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், சில காலங்கள் அவரின் உணர்வில் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றும் […]
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மேலும் ஒரு வாரத்திற்கு அரச குடும்பத்தினர் துக்கமனுசரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணியார் மறைவை தொடர்ந்து, நாடு முழுக்க துக்கமனுசரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச்சடங்குகள் நேற்று நடந்தது. தேசிய துக்கமனுசரிப்பும் முடிவடைந்துள்ளது. எனினும், அரசக்குடும்பத்தினர், தனிப்பட்ட வகையில் துக்கமனுசரிக்க இருப்பதாக மன்னர் அறிவித்திருக்கிறார். எனவே, மகாராணியாரின் துக்கமனுசரிப்பு தினங்கள் 17-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின், நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. […]
பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கில் இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட் கலந்து கொண்ட நிலையில், இளவரசர் லூயிஸ் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்பதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருட காலங்களாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் கடந்த ஒன்பதாம் தேதி என்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு வெஸ்ட் மின்ஸ்டர் அவையில் நேற்று நடந்தது. இதில் ராஜ குடும்பத்தை சேர்ந்த நபர்களும், உலக தலைவர்களும் பங்கேற்றனர் […]
பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கிற்கு இளவரசர் வில்லியமின் மகன் கட்டாயமாக வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரச குடும்பத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் மற்றும் எவர் உயிரிழந்தாலும் முக்கியமாக சில மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, மகாராணி மரணமடைந்த பிறகு இளவரசர் சார்லஸ், அரசர் ஆகிவிட்டார். மேலும், இளவரசர் வில்லியமின் மகனான இளவரசர் ஜார்ஜ் தன் தந்தைக்கு அடுத்து நாட்டின் மன்னராகவும் நிலையில் உள்ளார். இதனை மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், அவர் சிறு குழந்தையாக இருந்தாலும் மகாராணியாரின் […]
பிரிட்டன் மகாராணியார், இம்மாதம் 8-ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் மரணமடைந்த தன் கணவர் இளவரசர் பிலிப்புடன் இணைந்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. மகாராணியாரின் காதல் கணவரான இளவரசர் பிலிப் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று தனக்கு ஆறுதல் கூற எவரும் இன்றி தேவாலயத்தில் தனியாக அமர்ந்திருந்த மகாராணியாரின் புகைப்படம் வெளியாகி மக்களை கலங்க செய்தது. மகாராணியார் தன் கணவர் மீது […]
பிரிட்டன் மகாராணியரின் இறுதிச்சடங்கில், இரைச்சல் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார், இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, அவரின் உடல் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாததை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை அதிகாலை வரை, அங்கு வைக்கப்பட்டிருக்கும். மகாராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் போது, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து புறப்படக்கூடிய மொத்த விமானங்களும் ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணிக்கு மரியாதை செலுத்த விமானங்கள் ரத்தாகியிருக்கின்றன. […]
பிரிட்டன் மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டேவிட் பெக்கம் வந்த நிலையில், அவருடன் மக்கள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் மறைவை தொடர்ந்து அவரின் உடலுக்கு மக்கள் நீளமான வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம், மக்களுடன் அமைதியாக பங்கேற்றார். அவரை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர். மேலும், சுமார் 12 மணிநேரங்களாக நின்ற மக்கள், டேவிட் பெக்காம் கூட்டத்திற்குள் எப்படி வந்தார்? என்று ஆச்சரியமடைந்தனர். அதன்பிறகு, […]
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடலை 24 மணி நேரங்களும் மெய்காப்பாளர்கள் பாதுகாத்து வரும் நிலையில், ஒரு காவலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியார், கடந்த 8-ஆம் எட்டாம் தேதி அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் மரணமடைந்தார். அவரின் உடலை அரண்மனையிலிருந்து நேற்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற அரண்மனைக்கு கொண்டு சென்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது. அதுவரை, அந்த அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கிறது. 24 மணி நேரங்களும் […]
மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடலை ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு கொண்டு சென்ற போது வழி எங்கிலும் மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். பிரிட்டன் மகாராணியார், அந்நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல் உலக மக்களாலும் நேசிக்கப்பட்டவர். கடந்த எட்டாம் தேதி அன்று, பால்மோரல் கோட்டையில் அவரின் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மகாராணியாரின் உடல் ஓக் மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, மகாராணியார் அதிகம் விரும்பும் பால்மோரல் கோட்டையிலிருந்து கருப்பு நிற வாகனத்தில் அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார், […]
மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடல் பால்மோரல், மாளிகையிலிருந்து ஸ்காட்லாந்தில் இருக்கும் எடின்பர்க்கிற்கு எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாராணியின் இறுதிச்சடங்கானது வரும் 19ஆம் தேதி அன்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்ர் வளாகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக ராஜ குடும்பத்தினர் மகாராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் […]
பிரிட்டன் மகாராணி அரண்மனையில் 26 அன்னப்பறவைகள் கருணை கொலை செய்யப்பட்டிருப்பது மகாராணிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டவர். ஆனால், தற்போது அவர் தொடர்ச்சியாக தன் செல்லப்பிராணிகளை இழந்து வருகிறார். கடந்த வருடத்தில் அவரின் இரண்டு செல்ல நாய் குட்டிகள் இறந்தது. இந்நிலையில், அவரின் 26 அன்ன பறவைகளை கருணைக் கொலை செய்துள்ளனர். இதனால், மகாராணி அதிக வேதனையடைந்திருக்கிறார். மகாராணியின் அன்னப்பறவைகளில் ஆறு பறவைகள் பறவை காய்ச்சலால் […]
பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் வீடியோவில், “ஒரு நபர் அம்பு வீசும் ஒரு கருவியை கையில் வைத்திருக்கிறார். அந்த நபர் கடந்த 1919 ஆம் வருடத்தில், இந்தியாவின் அமிர்தரஸ் என்னுமிடத்தில் இந்திய மக்களை பிரிட்டன் படை கொடூரமாக கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக அந்நாட்டு மகாராணியை கொலை செய்யப்போகிறேன்” என்று தெரிவிக்கிறார். https://twitter.com/LiliMems/status/1475243317667536909 […]
இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் காலநிலை மாறுபாட்டை கருத்தில்கொண்டு இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களை ஹெலிகாப்டர் பயணம் செய்வது தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் காலநிலை மாறுபாட்டை கருத்தில்கொண்டு இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களை ஹெலிகாப்டர் பயணம் செய்வது தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் இளவரசர் வில்லியம் அவருடைய மகனான ஜோர்ஜ் பிறந்த பிறகு சுமார் 115 மைல்கள் லண்டன் மற்றும் […]
பிரிட்டன் மகாராணியார் மற்றும் அவரின் செல்லப் பிராணிகளான நாய்களுக்கு, ஓநாய்கள் மற்றும் கரடிகளால் ஆபத்து இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனின் மகாராணியார் பால்மோரல் என்ற எஸ்டேட்டில், தன் செல்லப்பிராணிகளோடு வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரான Lord Marland, இனிமேல் அவர் செல்லப்பிராணிகளோடு, அந்த எஸ்டேட்டிற்கு சென்றால் ஓநாய்கள் மற்றும் கரடிகளால் தாக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, Chris Packham என்ற சுற்று சூழலியலாளர், பிரிட்டன் மகாராணியாருக்கு […]
நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியார் கலந்து கொள்ளாதது குறித்து தொலைக்காட்சி பிரபலம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரித்தானியா தொலைக்காட்சி பிரபலமான பியர்ஸ் மோகன் அரசக் குடும்பம் குறித்து தமது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக இவ்விவகாரங்களில் பல முறை சிக்கியுள்ளார். இருப்பினும் தமது கருத்துக்களை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியார் கலந்து கொள்ளாதது அனைவருக்கும் அவரின் உடல்நிலை சரியில்லையா என்ற சந்தேகத்தையும் கவலையும் அளித்துள்ளது. ஏற்கனவே […]
நேற்று நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியாருக்கு பதிலாக இளவரசி கலந்து கொண்டுள்ளார். பிரித்தானியா விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த ராணுவத்தினற்காக நினைவேந்தல் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது மகாராணியார் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது பிள்ளைகள் என குடும்பமாக அதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மகாராணியாருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் கடந்த 22 ஆண்டுகளில் முதல் தடவையாக அவர் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்துள்ளார். […]
மகாராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. இங்கிலாந்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “மகாராணியார் எலிசபெத் பொதுப் பணிகளில் இருந்து சில தினங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று பிற்பகல் வழக்கமான பரிசோதனைகளுக்காக மகாராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வின்ஸ்டர் […]
மகாராணியார் அதிக அளவில் மது அருந்தக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பிரித்தானியாவின் மகாராணியான எலிசபெத் தற்பொழுது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் அவர் பொதுவாக கணவர் பிலிப், இளவரசி கேட், இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மற்றும் இளவரசி சோபி ஆகியோர் மட்டுமே நடப்பார். இந்த நிலையில் தற்பொழுது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடப்பதால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி இன்று 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி பிறந்த அன்று, அரண்மனை எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் திளைத்ததோ, அந்த அளவிற்கு அவரின் திருமணத்தின் போதும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு, இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. மேகன், விவாகரத்து பெற்ற அமெரிக்க […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கு முன்பு, அவருக்கு மகாராணியார் ரகசிய வாக்குறுதி மற்றும் சத்தியம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் மாதத்தில் 9-ம் தேதி அன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கில் மகாராணியார் வருத்தத்துடன் தனியாக அமர்ந்திருந்தது, நாட்டு மக்கள் அனைவரின் மனதையும் நொறுக்கியது. எனினும் மகாராணியார் இளவரசர் மரணமடைந்த நான்கு நாட்களில் தன் கடமைகளை தொடங்கினார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது இளவரசரின் இழப்பில் இருந்து மகாராணி மீண்டு வர குறைந்தபட்சம் […]
ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் மகாராணி மற்றும் பிரதமரை சந்திக்க பிரிட்டன் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் சான்சலர் பதவியிலிருந்து ஏஞ்சலா மெர்கல் ஓய்வு பெற இருக்கிறார். எனவே பிற நாட்டு தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் விடை பெற்று வருகிறார். எனினும் பிரிட்டன் மகாராணியை அவர் சந்திப்பதற்கு இதுதான் காரணம் என்று சரியாக தெரிவிக்கப்படவில்லை. முதலில் ஏஞ்சலா மெர்கல் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்திற்கு சென்று, அவரை சந்திக்கவுள்ளார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, செல்லும் […]
அமெரிக்க அதிபரான ஜோ பைடன், மீண்டும் மரபு விதிகளை மீறியுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜ குடும்பத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு வந்து விட வேண்டும், கடைசியாகத்தான் மகாராணி வருவார். அதன்பின் நிகழ்ச்சி முடிந்தவுடன் முதலில் மகாராணியார் தான் செல்வார் என்பது நீண்ட காலமாகவே இருக்கும் மரபு ஆகும். இதேபோல் மகாராணியாருடன் தனியாக பேசும் எவரும் தாங்கள் எது குறித்து உரையாற்றினோம் என்பதை வெளியில் சொல்லக் கூடாது என்பதும் வழக்கத்திலிருக்கும் […]
உலக தலைவர்கள் பங்கேற்ற ஜி-7 உச்சி மாநாடு நிகழ்வில், பிரிட்டன் மகாராணியார் வாளால் கேக் வெட்டியுள்ளார். இங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில் இருக்கும் கார்பிஸ் பே என்ற ஓட்டலில் 47 வது உச்சி மாநாடு நேற்று ஆரம்பித்தது. இந்த ஜி-7 அமைப்பானது, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இயங்குகிறது. இந்த நிகழ்வில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்துடன், அவரின் மகன் இளவரசர் சார்லஸ் மனைவி கமிலா, பேரன் இளவரசர் […]
மகாராணியார் காலனித்துவத்தின் சின்னம் என்பதால் அவருடைய படத்தை பிரபல சட்ட வல்லுனரது மகன் ஆக்ஸ்போர்ட் கல்லூரியிலிருந்து நீக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க நாட்டின் பிரபல சட்ட வல்லுனரது மகனான Matthew katzman என்பவர் ஆக்ஸ்போர்ட் கல்லூரியிலிருக்கும் இங்கிலாந்து ராணியாரின் படத்தை நீக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் மகாராணியாரின் படத்தை நீக்குவது தொடர்பாக ஆக்ஸ்போர்ட் கல்லூரி மாணவர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 1952 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட மகாராணியாரின் படம் மாக்தலென் கல்லூரியின் பொது அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
பிரிட்டன் அரசகுடும்பத்தில் மகாராணியாருக்கு பிறகு கேட் தான் அதற்கு தகுதியானவர் என்று அவரது தாய்மாமா கூறியுள்ளார். பிரிட்டன் அரச குடும்பத்தில் காலடி எடுத்து வைத்து முழுமையாக அனைத்தையும் எந்த அளவிற்கு எளிதில் நாசமாக்க முடியும் என்பதை மேகனை பார்த்தால் தெரியும். இதற்கு அப்படியே எதிராக இருப்பவர் கேட். இவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும் போது வாகனத்தின் ஜன்னல் வழியே கருப்பு நிற உடை அணிந்து இருந்தார். அப்போது அவரது கண்கள் அரச குடும்பத்தில் பிறந்த இளவரசிகளை […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு, மகாராணியார் இறுதி விடை கொடுக்கும் விதமாக தன் கையால் எழுதிய அட்டை ஒன்றை அவரின் சவப்பெட்டியின் மேல் வைத்துள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து, செயிண்ட் ஜார்ஜ் செப்பலில் அவரது உடல் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மகாராணியார் தனியாக இருந்துள்ளார். அதாவது இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் 73 வருட திருமண வாழ்க்கையில் தற்போதுதான் கணவரை பிரிந்து இருக்கிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/17/7284058078706909126/640x360_MP4_7284058078706909126.mp4 எனவே அவருக்கு, மகாராணியார் தன் கையால் […]
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பத்தாவது கொள்ளுப்பேரன் பிறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டன் அரண்மனையின் மகாராணி இரண்டாம் எலிசபெத். இவருடைய மகள் சாரா டின்டால். இந்நிலையில் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக்கேல் டின்டால் என்பவரை திருமணம் செய்து ஏற்கனவே இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். இதனையடுத்து சாரா டிண்டாலுக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் நேற்று குளியலறையை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது சாரா டின்டாலுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே […]
நேர்காணலில் ஹரியும்-மேகனும் கூறிய குற்றச்சாட்டால் அவர்கள் மீது எனக்கு கோபமில்லை என்றும் வருத்தம் தான் இருக்கிறது என்றும் பிரிட்டன் மகாராணி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் ஓப்ரா வின்ப்ரேக்கு அளித்த பேட்டி ஒளிபரப்பப்பானது. அந்த பேட்டியில் தம்பதியர் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். இந்த பேட்டி உலகிலுள்ள பல்வேறு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த பேட்டியில் ராஜ குடும்பம் இனப்பாகுபாடு […]
பிரிட்டன் ராஜகுடும்பத்தினர் ஹரி-மேகன் தம்பதிக்கு போட்டியாக களமிறங்க தயாராகியுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹாரி மேகனை திருமணம் செய்த நாளிலிருந்து ராஜ குடும்ப மரபுகளின் விதிகளை மீறி இருவரும் மீறிவருகிறார்கள். அதாவது மேகன் நடிகையாக இருப்பதால் ராஜ குடும்பத்தின் வாழ்க்கையோடு இணைந்துகொள்ள ஆரம்பத்தில் சற்றே திணறியிருக்கிறார். மேலும் ஹரி-மேகன் தம்பதியருக்கு உதவியாக பணியாற்றிய பலரும் மேகனின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வேலையை ராஜினாமா செய்தனர். ஆனால் ஹரியோ மேகன் எது கேட்டாலும் அதனை அவருக்கு வழங்க வேண்டும் […]