மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும். இதற்காக மார்ச் 1-ஆம் தேதி அன்று அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
Tag: மகா சிவராத்திரி
திசையன்விளை சுயம்புலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பூஜித்து பிராத்தனை செய்வார்கள் . இந்நிலையில் சிவபெருமானுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு இக்கோவிலில்,” தென் தமிழ்நாடு சேவாபாரதி ” சார்பாக சிவலிங்கத்திற்கு 1008 சிவபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் சிவ சுலோகங்கள் கூறியபடி சுவாமியை தரிசனம் செய்தார்கள் . இதனைத் […]
சிவகங்கை காரைக்குடியில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபட்டனர். சிவகங்கையில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து சிவனுக்கு செய்யப்பட்ட சிறப்பு அலங்கார பூஜைகளையும், அபிஷேகங்களையும் கண்குளிர கண்டு மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்து உள்ள காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில், பிரான்மலையில் உள்ள மங்கை பாகர் தேனம்மை கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், […]
மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். நாளை இரவு நாடு முழுவதும் சிவ ராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு சிவனை வழிபட்டால் வாழ்வில் செல்வ, ஞானம், புகழ், நாம் எண்ணிய உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் […]
ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் […]