வட கொரிய அதிபர் கிங் ஜாங் உன் உடல் எடையை குறைத்துள்ள விவகாரம் அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வட கொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவர் எங்கு இருக்கிறார் , எப்படி இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் 6ஆம் […]
Tag: மக்கள் கவலை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,376 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 92,22,217 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 481 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,34,699 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 37,816 பேர் குணமடைந்து […]
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து 37,960- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4745 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4740 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹5 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹38,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 40 உயர்ந்து ₹37,960-க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,576 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 89,58,484ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,31,578 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 48,493 பேர் குணமடைந்து வீடு […]
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 39,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 39,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 17 ரூபாய் குறைந்த 4,884 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 70 ரூபாய் காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,41,889 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசுகளை விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கும், பட்டாசுகளை விற்பதற்கும் பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசு விற்பதற்கும் படிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அம்மாநில அரசு தடை […]
டிசம்பர் மாதம் வரையில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதால், கடந்த ஒரு வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிக அளவு தமிழ் நாட்டிற்கு வரும். அம்மாநிலங்களிலும் மழை […]
தாய்லாந்தில் 100 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் முதல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதிலும் சில நாடுகள் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டன. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் […]
மழை குறைந்தும் வெள்ளம் வடியாததால் கேரளாவின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை நேற்றுமுதல் குறையத் துவங்கியது. இதனால் பல பகுதிகளில் தேங்கி காணப்பட்ட மழை வெள்ளம் வடியும் நிலை ஏற்பட்டது. பல பகுதிகளில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருந்தாலும் கோட்டயம், ஆலப்புழா மாவட்டத்தில் மாவட்டங்களின் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி காணப்படுகிறது. வீடுகளை சூழ்ந்தும், தெருக்களில் தண்ணீர் நிறைந்தும், காணப்படுவதால் […]
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் சிதைந்து இருக்கும் நிலையிலும் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பாமர மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறாத ஒன்றாக மாறி இருக்கின்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மக்கள் மனதில் தித்திக் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 40ஆயிரத்தை நெருங்கி மான்களை கலங்கடிக்கின்றது. 22 கிராம் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் உலுக்கி வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு மட்டும் 67,655 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாம் இடத்தில் நீட்டிக்கிறது. எந்த அளவுக்கு கொரோனாவில் தொற்று அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமானோர் […]