புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் மேஜை, நாற்காலி கொடுக்காமல் சட்டப்பேரவை செயலகம் பாரபட்சம் செய்வதால் திமுக சம்பத் தரையில் அமர்ந்து மக்கள் பணியை கவனித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியே அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத்திற்கு 10 அடிக்கு 10 அடி அளவிலான அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு மேசை, நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. […]
Tag: மக்கள் பணி
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தேர்தலை […]
மக்களுக்கு நல்லது செய்யவே தான் பாஜகவில் இணைந்து உள்ளதாக குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்ற குஷ்பு, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்று தேசிய பொதுச்செயலாளர் சிடி. ரவி,தமிழகத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்துள்ளார். அதன் பிறகு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மக்களுக்கு நல்லது செய்யும் […]