சென்னை, ஆந்திரா அருகே வங்கக் கடல் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் அடையாறு, பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், அண்ணாநகரில் லேசான நில அதிர்வு உணர்ந்த மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
Tag: மக்கள் பீதி
குஜராத்தில் இன்று நண்பகல் ரிக்டரில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.08 மணியளவில் குஜராத்தின் ராஜ்கோட் நகருக்கு வடமேற்கே 151 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.0 அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதன் பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.மக்கள் நிலநடுக்கத்தால் பீதி அடைந்த வீதியில் தஞ்சமடைந்தனர்.
இங்கிலாந்தில் ஆயிரம் கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறிய காட்சி பீதியை கிளப்பியுள்ளது. இங்கிலாந்தில் exeter என்ற இடத்தில் பல்கலைக்கழகம் மற்றும் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்டுமான பணிக்காக பணியாளர்கள் பள்ளம் தோண்டி கொண்டிருந்த நிலையில் திடீரென 8 அடி நீளமும் சுமார் 1000 கிலோ எடையுடைய பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சி அடைந்து கட்டுமானப் பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டால் ஏற்படும் […]
கேரளாவில் மிக விரைவாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பரவிடுமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு மீன் போன்ற பொருட்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. கேரளாவிலிருந்து ஏர்வாடியில் உள்ள தர்காவிற்கு பிரார்த்தனைக்காக பக்தர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் பலர் வருகின்றனர். இவர்கள் யாருக்கும் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை. இராமநாதபுரம் மக்கள், ஏற்கனவே பன்றி காய்ச்சல் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது புதிதாக பறவை காய்ச்சல் வந்து விடுமோ […]
பெங்களுருவில் காதை கிழிக்கும் அளவிற்கு மர்ம ஒலியை உணர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிற்பகலில் சமயத்தில் நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுவதை போல் பெரும் சத்தம் கேட்டது. மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். வைட் பீல்ட், குக் டவுன், ஓசூர் சாலை, குந்தனகாளி, கம்மனகாளி உள்ளிட்ட இடங்களில் மர்ம சத்தத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, […]