வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக நரேந்திர மோடி, பிரதமர் ஆகவில்லை என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரியான கபில் பட்டீல் கூறியிருக்கிறார். மத்திய மந்திரியான கபில் பட்டீல், தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வரும் 2024-ஆம் வருடத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், இந்தியாவுடன் இணையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். பிரதமர் மோடி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை […]
Tag: மக்கள்
ஓமனில் கடந்தாண்டை விட 1.04 சதவீதம் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தெரிவித்துள்ளது. ஓமனில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 44,81,042 ஆக இருந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான மக்கள் தொகை கடந்த 2020 ம் ஆண்டை விட 1.04 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி நடப்பாண்டிற்கான ஓமன் நாட்டின் மக்கள் தொகை 45,27,466 ஆக உயர்ந்துள்ளது.
கனடாவில் தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பாக போராட்டம் வலுத்து நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் ….. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கனடா இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவிவருகிறது .இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன . இதிலும் குறிப்பாக எல்லை தாண்டி வரும் டிரக் ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் தலைநகர் ஒட்டாவில் உள்ள பாராளுமன்ற […]
ஜெர்மனியில் மக்களை அதிகளவில் தடுப்பூசி செலுத்த வைக்க போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கடுமையான சூழ்நிலை நிலவிய போது அங்கு மாட்டிக்கொண்ட ஜெர்மன் மக்களை மீட்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஏ400எம் என்ற போர் விமானத்தில் தற்போது தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த போர் விமானத்தை மிகவும் அரிதாக மக்கள் பார்வையிட காட்சிப்படுத்துவார்கள். இந்நிலையில் அந்த போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது, மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும், விமானத்தில் ஏறும் ஆவலோடு அதிகமான மக்கள் […]
பிரிட்டன் நாட்டில் அதிக மக்களால் வெறுக்கப்படும் பட்டியல் ஜிப்சிகள் மற்றும் ஐரிஸ் பயணிகள் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டனில் மக்கள் இஸ்லாமியர்களை எதிர்க்கும் வெறுப்புணர்வை போக்குவதற்காக ஒரு மாற்றம் உண்டாக்கும் வகையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் பிரபலமில்லாத சமூகங்களின் பட்டியலில் முதலிடத்தில் ஜிப்சிகளும், ஐரிஸ் பயணிகளும் உள்ளனர். இரண்டாம் இடத்தில் இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். இஸ்லாமியர்கள், மற்ற இனத்தை சேர்ந்த சிறுபான்மையினர் குறித்து பிரிட்டன் மக்கள் நினைப்பது என்ன? என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு […]
வடகொரியா மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதாவது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் அணு ஆயுதங்களை தொடர்ந்து சோதித்து வருகிறது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா வடகொரியாவின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் உள்ள மக்கள் கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனைகளால் வறுமையில் உள்ளனர். இந்நிலையில் இந்த பொருளாதார தடைகளால் மக்கள் மேலும் […]
உத்திரபிரதேசத்தில் எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பாஜக கொஞ்ச கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெருப்பு பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கட்டவ்லி தொகுதி பாரதிய ஜனதா எம்எல்ஏ அந்த பகுதியிலுள்ள ஒரு கிராமத்துக்கு ஓட்டு கேட்டு சென்றிருந்தார் அப்போது கிராம மக்கள் எம்எல்ஏ விக்ரம் சிஙகிற்கு எதிராக […]
கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் அன்னபூரணி சாமியார்.அதிகமாக பேசப்பட்டு வருகிறார். பளபளக்கும் பட்டுச்சேலை அணிந்துகொண்டு மக்களுக்கு இவர் அருள்வாக்கு சொல்லும் வீடியோக்களை பல்லாயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பார்த்து பலவிதமான விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இதற்கு இவரது கடந்த கால வாழ்க்கையே காரணமாகும். கடந்த சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கள்ளக்காதல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று இருந்த அன்னபூரணி சாமியாராகி சில ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தற்போதுதான் அவர் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். அன்னபூரணி மக்களுக்கு […]
தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்- 1952. இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைப் பெறுவதில் கூட பிரச்சனையாக இருந்தது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு தொழில்நுட்பம் கைகொடுத்தது. பல்வேறு ஆப்ஸ்கள், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவியாக இருந்தது. அந்தவகையில் இந்த ஆண்டு, கொரோனா பிடியில் சிக்கியிருந்த மக்களுக்கு உதவியாக இருந்தா சிறந்த 10 ஆப்ஸ் பட்டியல் வெளியாகியுள்ளது. அமேசான் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான அமேசான், மக்களுக்கு வேண்டிய பொருட்களை உலகின் மூலை முடுக்கில் இருந்தும் பெறக்கூடிய வசதியை வழங்கியுள்ளது. […]
இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவில் 7 புள்ளி 3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மலுகு தீவின் கிழக்குப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது. இதனால், டார்வின் நகரில் இருந்த வீடுகள் சில விநாடிகள் வரை குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதற்கான தகவல்கள் வெளியாகவில்லை.
நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டிசம்பர் 30-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பின்னர் கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான […]
சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் என முதல்வராக பொறுப்பேற்ற்று அதிரடியாக கையெழுத்திட்டு அசத்தினார். திமுக வெற்றிபெற காரணமாக இருந்த தேர்தல் அறிக்கை, திமுக மீதுள்ள நம்பிக்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகை […]
வேலூர் பேரணாம்பட்டு அருகே தரைக்காடு பகுதியில் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதை தொடர்ந்து தற்போது சற்று நேரத்திற்கு முன்பாக மீண்டும் தரைக்காடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் […]
மக்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது: “கொரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். தடுப்பு முகாம்களுக்கு சென்று தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகம் திரையரங்குகளில் வழங்கிய நடைமுறையை கட்டாயம் பின்பற்ற […]
2021 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. எனினும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்கான காலக்கெடு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது. அதற்குள் இந்த வேலைகளை முடித்துக் கொள்வது நல்லது. PF கணக்கு: உங்களிடம் பிஎஃப் கணக்கு இருந்தால், கட்டாயம் இந்த வேலையை உடனடியாக முடித்து விடுங்கள். பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி […]
வடக்கு ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தண்ணீருக்காக இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 44 மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் பல இடங்களில் கடும் வறட்சி நிலவி வருவதால் மக்கள் தண்ணீருக்கு பெரும் அவதி அடைந்து வருகின்றன.ர் அந்த வகையில் கேமரூன் எல்லை கிராமம் ஒன்றில் நீர்நிலையை பகிர்ந்துகொள்வதில் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. பின்னர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதில் நாற்பத்தி […]
டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 60க்கும் மேலானோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு போன்றவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டின் வடக்கில் உள்ள கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிலிருந்து வெளியேறிய பெட்ரோலை பாத்திரங்களில் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட தீயினால் லாரி வெடித்து சிதறியுள்ளது. அதில் 60 பேர் […]
இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]
மக்களே என்னுடைய தெய்வங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட காசி விசுவநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கு உள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி பார்த்தார். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள ஊழியர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து, அவர்களுடன் உணவும் அருந்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “என்னை பொருத்தவரை மக்களே என்னுடைய தெய்வங்கள்” என்றார். மேலும் காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்கிறார் பாரதி என பாரதியாரின் வார்த்தைகளை […]
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மக்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் நன்றி தெரிவித்துள்ளார்.. கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்று மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. அதாவது, மீட்பு […]
எலிக்காய்ச்சல் பரவலால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையிலுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் விவசாயம் போன்றவற்றுடன் தொடர்புடைய நிலத்தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு பலர் வாழ்கின்றனர். அவர்கள் தமது அன்றாட வேலைகளை கூட எலிக்காய்ச்சல் பரவக்கூடும் என்ற அச்சத்திலேயே செய்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்றின் காரணமாக 5,00,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 13,000 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் எலிக்காய்ச்சல் இலங்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றின் பரவலால் எலிக்காய்ச்சலின் மீது கவனம் […]
மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி, சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் இன்று முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 30 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இது பரவ ஆரம்பித்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 20 நாட்களில் வைரஸ் வேகமாக பரவி வருகிறதே தவிர இதன் வீரியம் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு என்பது […]
தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9 இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் […]
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.25,000, நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமானது. இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தலா 20 […]
மழை நேரத்தில் தனியாக உள்ள மரங்கள், குடிசைகள், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் கூடாரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய கூடாது. நீர்நிலைகள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விலகி இருப்பது அவசியம். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை தண்ணீருக்கு அருகில் விடக்கூடாது. மின்னல் அல்லது இடியின்போது, மின் சாதனங்கள் மற்றும் செல்போன், தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம். மழை நீர் தேங்கி உள்ள தெருக்களில் உள்ள மின்மாற்றி அருகே செல்ல வேண்டாம். திறந்திருக்கும் ஜன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் நிற்பதை தவிர்க்க […]
மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்போர் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சாலைகள், வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றது.. இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் […]
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல குடும்பங்கள் விறகு அடுப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தீபாவளிக்கு முன்னதாக அதாவது நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் தான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருந்தது. சிலிண்டர் விலை தொடர்ச்சியாக பல மாதங்கள் உயர்ந்து கொண்டே வருவதால் மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் 42 சதவீத கிராம மக்கள் தங்கள் […]
தனது பயணத்தின் போது மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். தனது வாகன பயணத்தின் போது பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். இது குறித்து சென்னை ராஜ்பவனில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஆளுனர் ஆர்.என். ரவி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு சி சைலேந்திரபாபு விடம் தெரிவித்துள்ளதாவது, தனது வாகனத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் எந்த […]
தீபாவளிக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்புவதை மூன்று நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளனர். தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெளியூருக்கு சென்ற மக்கள் மூன்று நாட்களுக்கு சென்னைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, […]
கொரோனாவை எதிர் கொண்டதால் இந்தியாவிற்கு எந்த துயரத்தையும் தாங்கும் சக்தி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்தியா நேற்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது: “நேற்று நாம் புதிய சாதனையை படைத்துள்ளோம். இந்தியா 247 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை எட்டியுள்ளது. இதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே காரணம். அதற்கு நாட்டு […]
ஜெயிலை விட்டு வெளியில் வந்த பிறகு ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவப் போவதாக ஆரியன் கான் விசாரணையின் போது தெரிவித்ததாக போதை தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் சேர்த்து 8 பேரை போதை தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பின்னர் அவர் மும்பையில் உள்ள பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரியன் […]
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடித வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே உள்ளாட்சி அமைப்புகளே ஆகும். ஒரு மரம் வளர ஆணிவேர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஒரு நாட்டின் வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற கூடிய […]
மதுரை மாவட்டத்தில் கட்டாத வீட்டை தூய்மையாக வைக்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியம் குறுஞ்செய்தி வந்ததால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம், காட்டுநாயக்கர் தெருவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 500 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றியுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஜூலை மாதம் 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உடல் நலத்திற்காக காலைவேளையில் சென்னை அடையார் தியாசபிகல் பூங்காவில் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் நேரடியாக முதல்வர் ஸ்டாலினுடன் தினமும் பேசி தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே நேற்று மு.க.ஸ்டாலின் நடைப் பயிற்சி செய்யும்போது போது ஒருவர் முதல்வர் ஸ்டாலின் உடல் நலத்தை விசாரித்தார். அதன் பின்னர் நீங்கள் 5 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தன்னம்பிக்கையாக வெளியே நடமாட முடிகிறது. […]
ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் நிறைய உள்ளதால் மக்கள் பாகிஸ்தானிற்கு அகதிகளாக செல்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களின் ஆட்சி முறைக்கு பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் மக்கள் வேறு வழியின்றி வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் எல்லைப் பகுதியான ஸ்பின் போல்டக் பகுதியில் தலீபான்கள் […]
இலங்கையில் ஒரு சில இடங்களில் வானத்திலிருந்து, சிலந்திக்கூடு போன்று ஒரு பொருள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அம்பாறை, தெஹிஅத்தகண்டிய மற்றும் கிராதுருகோட்டை போன்ற பிரதேசங்களில், நேற்று காலை நேரத்தில், சிலந்தி கூடு போல ஏதோ ஒன்று, வானத்திலிருந்து பறந்து வந்தது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியுள்ளதாவது, வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் நூல் போல ஒன்று வானத்திலிருந்து பறந்து வந்து தரையில் விழுந்தது. பகுதி முழுக்க அந்த நூல் படர்ந்தது. […]
வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சியின் பிரதமராக இருக்கும் முகமது ஹசன் அகுந்த், இராணுவ படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, நகரங்களில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை தலிபான்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்று மக்கள் பலரும் புகாரளித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தான், ஐக்கிய அமீரகத்தின் புதிய பிரதமரான முகமது ஹசன் அகுந்த் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்திருக்கிறார். அதாவது, பிரதமர் MOI, MOD மற்றும் உளவுத்துறையில் இருக்கும் இராணுவ வீரர்கள் […]
கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன்காரணமாகவே அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: கேரளாவில் 75 சதவீதம் […]
பல மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தற்போது தான் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் சற்று அதிகரித்து உள்ளது. இதனால் விரைவில் மூன்றாம் அலை வரலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் […]
ஜப்பான் நாட்டில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டாரா கோனோ நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமரான யோஷிஹிடே சுகா, பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே அந்நாட்டின், ஒரு செய்தி நிறுவனம் அடுத்த பிரதமராகக்கூடிய வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று தொலைபேசி வாயிலாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. எனவே, 1701 மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர், டாரா கோனோவிற்கு 32% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும், பாதுகாப்பு துறை முன்னாள் […]
காபூல் நகரில், பல நாடுகள் மீட்பு நடவடிக்கையை முடித்ததால், தலிபான்கள் விமான நிலையத்தின் அதிகமான பகுதியை அடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து, தங்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துவிட்டது. எனினும் தங்கள் நாட்டு மக்கள் உள்பட ஆப்கானிஸ்தானின் மக்களையும் கைவிட்டுத்தான் செல்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். அதன்பின்பு, ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் நபர்களை அங்கிருந்து மீட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. […]
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலவரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மக்களுடன் நட்புறவு தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்ட கால திட்டம். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விசா கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்கு விசா கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மத்திய அரசு மின்னணு விசாவை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள், தற்போது அவர்கள் இந்தியாவில் இல்லாத பட்சத்தில் உடனடியாக ரத்து செய்யப்படும். இனி ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவிற்கு […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவி வந்தது. இவற்றைக் கொண்டுவருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக தற்போது பல மாநிலங்களிலும் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதுதவிர சுமார் ஒரு […]
கண் நோய்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பாக ஆன்லைன் வழியாக இலவச மருத்துவ ஆலோசனை வழங்கு வதாக பிரபல அகர்வால் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்த இலவச சேவை ஆகஸ்ட் 15 வரை மட்டுமே கிடைக்கும். இதற்கு முன்பதிவு செய்ய தொடர்பு எண் : 9167376972, இணைய முகவரி: https://www.dragarwal.com அணுகலாம். கொரோனா தொற்று சூழலில் கணினி மற்றும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மணாலியில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் மத்திய அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மலை பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மணாலியில் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் புகைப்படம் வெளியாகி வருவதால், மத்திய அரசு கடுமையாக […]