பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பாக முதல்வரின் ஆணைக்கிணங்க மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருக்கும் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, இந்த எந்திரத்தின் மூலம் ரூபாய் பத்து செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம். திருவள்ளூரில் ஒரு […]
Tag: மஞ்சப்பை
பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது நாளை முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்குவதுடன், முதல்வர் அறிவித்த மஞ்சள் பை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தொழில்துறையினர் கூறியது, பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிறகும் இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து வருகிறது. […]
பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்க தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்படும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் […]
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்த, ‘மஞ்சள் பை’ திட்டமானது பஹ்ரைன் நாட்டில் வரவேற்பு பெற்றிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மஞ்சள் பை என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதாவது, பாலிதீன் பைகளால் சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழிப்பதற்காக இத்திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் பக்ரைன் பன்னாட்டு தி.மு.க மூலமாக நேற்று பஹ்ரைன் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]