புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டு வந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் மாட்டு வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து நாட்டாணியிலுள்ள […]
Tag: மணல் கடத்தல்
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளி சென்ற 2 டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே நரசிங்கபுரம் குட்டையாகுளம், ஏ.வெள்ளோடு பகுதியில் உள்ள பெரியகுளம், சிறுமலை அடிவாரத்தில் உள்ள சில குளங்களில் இருந்து மணல் அனுமதி இல்லாமல் அள்ளி செல்லப்படுவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நேற்று […]
நெல்லையில் மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. தற்போது உள்ள காலத்தில் அனைத்து பகுதிகளிலும் எவரேனும் சட்டத்திற்குப் புறம்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். இச்செயல்களில் மிக முக்கியமாக ஒன்றாக மணல் கொள்ளை கருதப்படுகிறது. ஏனெனில் மணல் கடத்தலால் இயற்கை வளம் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர் பலியும் நேருகிறது. இக்குற்றச் செயல்களை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இச்செயல்கள் மறைமுகமாக நடைபெற்றுக் […]
இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கிராம உதவியாளர் அஞ்சலிதேவி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று தெய்வேந்திரன் என்பவரது வீட்டின் முன்பு மணலை கொட்டியுள்ளது. அதனைக் கண்ட கிராம உதவியாளர் டிப்பர் லாரியை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மணல் கடத்தலில் ஈடுபட்ட […]
மணல் கடத்தியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் என்ற ஊரைச் சேர்ந்த இருள்ராஜ் (வயது22), நல்லீஸ்வரன் (22), கருத்தாமலை (22), அழகர்சாமி (19), அரிகிருஷ்ணன் (23) ஆகிய 5 பேர் காரில் 25 மணல் மூடைகளை கடத்திச் சென்றுள்ளனர். அப்போது நடந்த வாகன சோதனையில் காரில் மணல் கடத்தியது சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் […]
சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு, அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பதிவெண் இல்லாத தனது மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாற்றிற்கு சென்றுள்ளார். அதன்பின் பாலாற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் காரை சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரது மோட்டார் […]
மணல் கொள்ளையை தடுக்க முயற்சித்த போலீஸ் கான்ஸ்டபிளை டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்தவர் சோனு சௌந்தரி. 2019 சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளான இவர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது மணல் திருடி டிராக்டரில் கொண்டு சென்ற கும்பலை விரட்டி பிடிக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் அவர் மீது அந்த கும்பல் டிராக்டரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே சோனு பரிதாபமாக உயிரிழந்தார். […]
உடையார்பாளையம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் எனும் பகுதியில் தாசில்தார் கலைவாணன் பகவதி ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க நேற்று ரோந்து சென்றனர். இந்நிலையில் அறம் கோட்டையில் இருந்து மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்ததில், முனி அதிரம்பட்டி […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மணல்கடத்தலின் போது மண் சரிந்து இளைஞர் ஒருவர் உயிர் இறந்தார். ஆரணி அருகே அத்திமலைப்பட்டி ஏரியில் அம்மாபாளையம் சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி நள்ளிரவில் மணல் அள்ளி உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம் என்ற இளைஞர் மணல் அள்ளி ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மண் சரிந்து டிராக்டரில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய பிரேம் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவல் அறிந்து […]
மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உயிர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை […]
மணல் கடத்தல்காரர்களுக்கு இனி முன்ஜாமீன் என்பது வழங்கப்படமாட்டாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மணல் கடத்தல்காரர்களின் அட்டூழியம் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்படும் பொழுது சுலபமாக முன்ஜாமீன் பெற்று வெளியில் சென்று விடுகிறார்கள். இதனால் அவர்களிடம் எந்த ஒரு பயமும் இருப்பதில்லை. எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் இது குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இது […]
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்படாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணல் கடத்தல் செய்து சிக்கியவர்கள் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த 15 மனுக்களை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா விசாரித்தார். அப்போது பேசிய அவர், “மிகவும் எளிதாக மணல் கடத்தல் குற்றம் செய்பவர்களுக்கு முன் ஜாமீன் கிடைத்து விடுவதால் தைரியமாக மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இத்தகைய நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கனிம வளம் இல்லாமல் போய்விடும். அடுத்த தலைமுறைகள் குடிநீருக்கு அவதிப்பட வேண்டிய சூழல் […]
ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாச்சியர் செந்தில்குமார் சென்ற காரின் மீது லார்ரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே கர்நாடகாவிற்கு எம் சேண்ட் கடத்தி சென்ற லாரியை துரத்தியபோது கோட்டாட்சியர் மீது லாரி மோதியது. இதில் சிறிது நூலிழைவில் கோட்டாட்சியர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் முன்னால் சென்ற மணல் லாரியை துரத்தும் போது கார் மீது பின்னால் […]
அனுமதியின்றி பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சி நடுத் தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ்(23) என்பவர் இவரது நண்பரான சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சாமுவேல்(21) என்பவருடன் சேர்ந்து ராணிப்பேட்டையில் இருக்கும் பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிள் மூலமாக பிளாஸ்டிக் பைகளில் மணலை கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சங்கர் நகர் அருகில் வந்த சமயம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இவர்களிடம் […]