மண் சரிவு ஏற்பட்டதால் வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், பொன்னானி, நெலாகோட்டை, கரியசோலை, பிதிர்காடு, அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று உப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த் என்பவரின் வீட்டின் முன்பு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டின் தடுப்புச்சுவர் மண்ணில் புதைந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறியதால் […]
Tag: மண் சரிவு
மழையின் காரணமாக கால்வாயில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு வலதுகரை கால்வாயில் இருந்து இடைக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை, முழுக்கோடு வழியாக பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயை சரியான முறையில் பராமரிக்காததால் பல இடங்களில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கால்வாயை தூர்வாருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கால்வாயில் மண் விழுந்து […]
போடிமெட்டு பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடி மெட்டு, குரங்கணி, கொட்டகுடி போன்ற பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை […]
பரவலாக மழை பெய்து வருவதால் தோண்டிமலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிமெட்டில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள பூப்பாறை வரை 11 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகள் முன்பு தொடங்கிய இந்த பணிகள் தற்போது 90% வரை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தேனியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போடிமெட்டுவில் இருந்து பூப்பாறை செல்லும் […]
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலை மிகவும் அழகிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் இருக்கும் சிறிய பாறைகள் சாலைகளில் உருண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்த […]
வாய்க்கால் கரையில் ஏற்படும் மண் சரிவை தடுத்து தரைப்பாலம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடியிலிருந்து மன்னஞ்சி செல்லும் சாலையின் இடையே பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் இருக்கின்றது. இந்தப் பாசன வாய்க்கால் மூலம் பெரியகொத்தூர். சின்னகொத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் குறுகலாக இருப்பதால் தண்ணீர் அதிகளவு செல்லும்போது கரையில் உள்ள மண் சரிந்து விழுந்து […]
தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் மைலாடி மற்றும் புதுக்கோட்டையின் தலா பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி […]