Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்….. 1200 மதுபாட்டில்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1200 மதுபாட்டில்கள் மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோரின் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |