சாராயம், மதுபாட்டில்களை விற்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சாராயம் விற்றதாக விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவில் வசித்து வந்த 37 வயதுடைய பாலமுருகன், 60 வயதுடைய ஆதிலட்சுமி, 55 வயதுடைய தேவகி, மேலமங்கலத்தை சேர்ந்த 55 வயதுடைய பிச்சுமணி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்றதாக டி. […]
Tag: மதுபாட்டில் விற்பனை
சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் சங்கனேரி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்பவர்களுக்கு சிலர் மதுபாட்டில்கள் சப்ளை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சங்கனேரி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சாரம் செய்பவர்களுக்கு 3 பேர் மது பாட்டில்களை சப்ளை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]
சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையின் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமாரி என்பதும், சட்டவிரோதமாக அப்பகுதியில் இந்த பெண் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் ஏரிக்கரையில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த சந்தோஷ், பெரியகண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 65 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் […]