கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளை வாக்குமூலம் அளித்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். சிசிடிவி காட்சிகளில் கோகுல்ராஜ் உடன் இருக்கும் பெண் யார் என்று நீதிபதிகள் கேட்டதற்கு யார் என்று தெரியவில்லை என சுவாதி பதிலளித்திருக்கிறார். உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டபோது சுவாதி கண்கலங்கி இருக்கிறார்.
Tag: மதுரை கிளை
மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள், பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]
அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் […]
தடை செய்யப்பட்ட பின்னரும் பிரீ பையர் விளையாட்டு செயல்படுவது எப்படி என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ப்ரீ பயர் (Free fire) விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறை விளையாடுவது எப்படி காவல் துறையினரும் சைபர் கிரைம் துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.. அதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லை எனில் இளம் தலைமுறையினர் […]
பள்ளி மாணவர்கள் மது அருந்துவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க கூறிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கூட சீருடையுடன் டாஸ்மாக்குக்கு சென்று மது அருந்தும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தருகின்றது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு […]
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் இன்று ஜூன் 20ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் . கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் . வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள்உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என உயர் நீதிமன்ற தலைமை […]
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு […]
தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமர்ந்து இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த உத்தரவும் கிடையாது என்று குறிப்பிட்டது. தமிழ் மீது கொண்ட அதீத […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பள்ளிக்கு ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் […]
தமிழகத்தில் எய்ம்ஸ்காக தற்காலிகமாக தேனி, சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை தேனி மற்றும் சிவகங்கையில் தற்காலிகமாக மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்காலிகமாக இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் […]
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை எந்த அளவிற்கு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று உள்ளதை பார்க்கும் போது தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை அதிக அளவில் உள்ளதா என்ற கேள்வி எழுவதாக மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் போதிய அளவு ஆக்ஸிஜன் இல்லாத காரணம் என்று நோயாளிகளின் உறவினர்கள் […]
சட்டப்பேரவை அறிவிப்பின்படி தமிழகத்தில் எட்டு இடங்களில் நூலகம் அமைக்க கோரிய வழக்கு குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017 2018 சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் நகரங்களில் நூலகம் மற்றும் காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்படி சிந்து நாகரிகம் மற்றும் பழம்பெரும் நாகரிக நூலகம் சிவகங்கையில் உள்ள […]
தமிழகத்தில் குவாரிகள் நடத்த அனுமதி கோரப்பட்டால், கனிமவள ஆய்வுக்குப் பின் தான் அனுமதி வழங்க முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்புக்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து சவுடு மண் எடுக்கத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத்தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி கொண்ட சிறப்பு […]
தமிழகத்தில் இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது கட்டாயம் என்று ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் மது வாங்குவதற்கு உரிய ரசீது வழங்க வேண்டுமென்றும், மது விலை பட்டியல் அடங்கிய தகவல் பலகையை கடைக்கு முன்பாக வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மதுபானக் கடைகளிலும் உரிய ரசீது வழங்கப்படவேண்டும், அதன் நகலையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இது தொடர்பான ஆய்வுகள் […]
தமிழகத்தில் நில அபகரிப்பு தடை சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் “திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள எனது நிலத்தை தந்தை பெயரில் வாங்கி இருந்தேன். இதை கடந்த 2008ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் தனது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர். இதையடுத்து துறையூர் புகார் நிலையில் காவல் அளித்தும் […]
டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று மதுரை உயர்நீதிமன்ற அரசுக்கு கேள்வி கேட்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டபடி டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு எத்தனை […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மோசடி மன்னன் காசி தொடர்ந்த வழக்கை மற்ற வழக்குகலோடு சேர்ந்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளம்பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாலியல் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவதாகவும், நாகர்கோயில் […]