நாடாளுமன்றம் குளிர் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. தனஞ்சய பிம்ராவ் மஹாதிக், நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் அளவு பற்றி கேட்டார். இதற்கு மத்திய பெருநிறுவன விவகாரத் துறை இணை அமைச்சரான ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது, ” சென்ற 15 வருடங்களில் இந்தியாவில் 41 கோடியே 50 லட்சம் பேர் வறுமைக் கோட்டிலிருந்து வெளியேறி இருப்பதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு பரிமாண வறுமைக்கோடு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு இருப்பதாகவும், […]
Tag: மத்திய அரசு தகவல்
நாடாளுமன்றத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் 60 வயதை கடந்தவர்கள் சீனியர் சிட்டிசன்கள் என்றும், 80 வயதை தொட்டவர்கள் மிக சீனியர் சிட்டிசன்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். அதன்பிறகு சீனியர் சிட்டிசன்களுக்காக மத்திய சமூக நீதித்துறை அடல் வயோ அபியுதய் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீ திட்டம் […]
இந்தியாவில் கோடைகாலத்தில் தேவைப்படும் அதிக அளவிலான மின் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சார துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மத்திய மின்சார துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2 முக்கிய விஷயங்களில் […]
நாடாளுமன்றத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் இழப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெகு தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு கூட தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்க்கிறது. […]
மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்குவங்கம், உத்தரகாண்ட், திரிபுரா, சிக்கிம், ராஜஸ்தான், பஞ்சாப், நாகலாந்து, மிசோரம், மேகலாயா, மணிப்பூர், கேரளா, இமாச்சல் பிரதேசம், அசாம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியமானது 15-வது நிதிய குழுவின் பரிந்துரையின்படி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 86,201 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 7,183.41 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை 12 தவணைகளாக விடுவிப்பதற்கு […]
இந்தியாவில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு அதிக அளவில் ஊக்குவிக்கிறது. ஏனெனில் விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி உரம் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ராஷ்டிரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம் ஜெர்மனியின் கே. ப்ளஸ் எஸ். மினரல்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விவசாயிகளுக்கு எம்ஓபி உரமானது தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு […]
மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி குறிப்பிட்ட சில சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி தீர்வைகளில் சலுகை வழங்கப்பட்டது. உலக அளவில் தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு போன்றவற்றால் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் சில்லறை விற்பனை விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி […]
இந்தியாவில் கடந்த வருடம் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலங்கள் தொடர்பான விவரத்தை மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரானா பரவலின் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வந்ததால் மீண்டும் சுற்றுலாத்துறை ஆனது வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் உள்ள மகராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவிற்கு அதிகபட்சமாக […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த இலவச திட்டம் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்த திட்டம் காலாவதி ஆகிறது. மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள […]
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் சில்லறை பணவீக்கமானது அதிகரித்துள்ளது. அதன்படி 7 சதவீதம் சில்லறை பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த சில்லரை பணவீக்கம் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் தான் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காய்கறிகள், மசாலா பொருட்கள், விளக்குகள், எரிபொருள் மற்றும் காலணிகள் போன்றவற்றின் விலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. […]
கடந்த 5 வருடங்களில் எரிவாயு சிலிண்டர்களின் விலை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 5 வருடங்களில் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளது. அதாவது 5 வருடங்களில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எரிவாயு சிலிண்டரின் விலை 723 ரூபாய் ஆக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டின் […]
இந்தியத் தயாரிப்பான தேஜஸ்போா் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆா்வம்காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ்போா் விமானங்கள் ஒற்றை என்ஜினைக் கொண்டவை ஆகும். அதை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள வான்வெளிப் பகுதிகளிலும் ஈடுபடுத்த முடியும். இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ்போா் விமானங்களை ரூபாய்.48,000 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் சென்ற வருடம் பிப்ரவரியில் மத்திய […]
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 6000 ரூபாய் என மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது வரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 10-வது தவணைக்காக பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் பணம் வரும் என்று தகவல் வெளியாகி […]