Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!!… அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய மத்திய அரசு உத்தரவு….!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் 3 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு முறைகளை தீவிர படுத்தியுள்ளது. அதன்பிறகு மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை ‌ கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு, […]

Categories
தேசிய செய்திகள்

“குரங்கு அம்மை தொடர்பான அறிவுறுத்தல்கள்”….. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை….!!!

குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. எனவே இவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிர படுத்தியுள்ளது. அந்த வகையில் குரங்கு அம்மை நோய் தொடர்பாக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை உள்ளிட்ட வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குரங்கு அம்மை வந்தால் செய்ய வேண்டியவை:  குரங்கு […]

Categories
தேசிய செய்திகள்

முதுநிலைக்கான நீட் தேர்வு எப்போது?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

முதுநிலைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் சமீப வருடங்களாக இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது, நீட் தேர்வு மூலமாகத்தான் நடக்கிறது. அந்த வகையில், இந்த வருடம் முதுநிலைக்கான நீட் தேர்வு, வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி அன்று நடக்கவுள்ளதாக முன்பே  அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியமானது, முதுநிலைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 21ஆம் தேதி அன்று […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஒரே நாளில் 3,35,939 பேர் டிஸ்சார்ஜ்… ஆனால் உயிரிழப்பு அதிகம்… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட் …!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை குறைந்து மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மக்களே பயப்படாதீங்க..! ஒரே நாளில் 3,47,443 பேர் டிஸ்சார்ஜ்… இருந்தாலும் எச்சரிக்கையா இருங்க …!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை குறைந்து மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மக்களே பயம் வேண்டாம்… ஒரே நாளில் 3லட்சம் பேர் டிஸ்சார்ஜ்… இந்தியா கொரோனா ரிப்போர்ட் ..!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை உயர்ந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 384  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு அலெர்ட்…! மீண்டும் கடும் கட்டுப்பாடு…. மத்திய சுகாதாரத்துறை பரபரப்பு கடிதம்…!!!!

சென்னையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி மாஸ்க் அணிதல்,, சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 507 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த பகுதிகள் கட்டுப்பட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் 19வது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி…. அதிகாரப்பூர்வ செய்தி…!!!!

டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று தென்னாப்பிரிக்காவிலிருந்து மஹாராஷ்டிரா திரும்பிய ஒருவருக்கும், ஜிம்பாவே நாட்டில் இருந்து குஜராத் திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ,தற்போது இன்று ஒருவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS : இந்தியாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ்…. சோதனையில் உறுதி!!

கர்நாடகாவை சேர்ந்த  2 ஆண்களுக்கு ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் பரவி விடக் கூடாது என்ற ஒரு எண்ணம் அனைவரது மனதிலும் இருந்து வந்த நிலையில் தற்போது, இரண்டு பேருக்கு இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தத் தொற்று கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.. அதாவது, தென் ஆப்பிரிக்கா உட்பட 12க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.. அவர்களில் சிலருக்கு கொரோனா இருந்தது.. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. மத்திய சுகாதாரத்துறை அதிரடி…!!!

தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொடிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவிவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளை அதிகப்படுத்துவது உட்பட சில அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமிக்ரான் வைரஸ் அபாய நாடுகளாக ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, செக்குடியரசு, இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்தும், அந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஓமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 54% பேர்…. முதல் டோஸ் போட்டுருக்காங்க… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் கோவிஷீயீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால் நாடு முழுவதும் அனைத்து  மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 54 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். குறிப்பாக சிக்கிம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 100 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

“கேரளாவில் எகிறும் பாதிப்பு” தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு அலெர்ட்…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாதிப்பு உயர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் டிபி நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.வீட்டில் இருக்கும்போது முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்தனர். இவ்வாறு ஊரடங்கால் நாட்டில் காச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2019 காசநோயால் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2020ஆம் ஆண்டு டிசம்பர் வரை 18 லட்சம் பேர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியானது…. மத்திய சுகாதாரத்துறை…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து  வந்த நிலையில் ஒரு சில வாரமாக குறைந்து கொண்டே வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 15 மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. இதனால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்து முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அதாவது டெல்டா பிளஸ் வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில்…. மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் 80%, […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 71 மாவட்டங்களில் மட்டுமே 10 சதவீதம்…. மத்திய சுகாதாரத்துறை….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் 71 மாவட்டங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு விகிதம் பதிவாகி வருவதாக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 71 மாவட்டங்களில் மட்டுமே…. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் 71 மாவட்டங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு விகிதம் பதிவாகி வருவதாக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இனி கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி…. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வடமாநிலங்களில் குறைந்து வரும் கொரோனா…. மத்திய சுகாதாரத்துறை தகவல்….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக டெல்லி, குஜராத், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி…. இந்தியாவில் தொற்று பரவல் 13.31% குறைவு – மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்நிலையில் மக்கள் கொரோனாவிலிருந்து இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் அதற்கும் மேலாக நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு உதவிகளுக்கு உடனடி அனுமதி…. மத்திய சுகாதாரத் துறை….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கினால்…. கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது – மத்திய சுகாதாரத்துறை…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
உலக செய்திகள்

ரஷிய தடுப்பூசி செயல் திறன் கொண்டது…. சுகாதாரத் துறை நிபுணர் குழு அறிவிப்பு…!!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ரஷ்யா ஸ்புட்னிக் 5 என்ற புதிய தடுப்பூசியை அறிமுகபடுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகள் பல  மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்திய நிறுவனங்கள் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் ஜனவரி 16ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் செலுத்தும் பணி தொடங்கியது. மேலும் இதுபோன்ற புதிய தடுப்பூசிகள் பயன்பாட்டிற்க்கு  வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை… கொரோனா தடுப்பூசி… யாரும் பயன்படுத்த வேண்டாம்…!!!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான போலியான செய்திகளை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. மிக விரைவில் அது மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 16 கோடியே 71 லட்சம் பேருக்‍கு கொரோனா பரிசோதனை – ICMR தகவல்

நாடு முழுவதும் இதுவரை 16 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்துக்‍கும் அதிகமானோருக்‍கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 16 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 289 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜனவரி முதல் – மகிழ்ச்சியான அறிவிப்பு ….!!

வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் போடும் பணி தொடங்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் அவர், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக ராணுவ வீரர்கள், முன் களப்பணியாளர்கள், முதியோர்கள் உட்பட 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என குறிப்பிட்ட ஹர்ஷ்வர்தன், கொரோனா  தடுப்பூசித் தொடர்பாக மாநில […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” பெண்களுக்கு இந்த பிரச்சினை வரும் – மத்திய சுகா தார அமைச்சகம்…!!

தடுப்பு மருந்தினால் பெண்களுக்கு உடலில் முடி வளர்ச்சி இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர். இதையடுத்து தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து வெளிநாடுகளில் இந்த தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. கொரோனா பரவி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

காலையில் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகள் கொரோனவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து வந்த நிலையில் தற்போது ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒரு சில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்தியாவில் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 76 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46, 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,97,064 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7,48,538 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று இருந்து ஒரே நாளில் 69,721 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் …? ஆய்வில் கிடைத்த பதில்….!!

இந்தியாவில் கொரோனா தொற்று முடிவுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அளவு அடர்த்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி மும்பை, டெல்லி, அகமதாபாத், தானே ஆகிய நகரங்களில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு தற்போது சரிவை சந்தித்து வருவதாகத் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் 553 பேர் உயிரிழப்பு…. இந்தியாவில் 9 லட்சத்தை கடந்த பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் இந்திய நாடு ஊரடங்கு பிறப்பித்தது, பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலை தான், இருந்தும்  மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு…. கொரோனா பாதிப்பு, உயிரிழப்பையும் கட்டுக்குள் வைத்திருப்பது மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது தெளிவாகிறது. இந்த நிலையில் இன்று காலை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.66 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,66,840ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 418 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,893ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,15,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88,960ஆக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.48 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 380 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,475ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,10,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575ஆக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் கொரோனாவால் பாதிப்பு; 410 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,905ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,03,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் இந்த 4 மாநிலங்களில் இதுவரை உயிரிழப்புகள் இல்லை… மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீட்பு விகிதம் 49.95% …. ஒரே நாளில் 7,135 பேர் டிஸ்சார்ஜ்.. மத்திய சுகாதாரத்துறை!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 7,135 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 49.95% ஆக உள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 1,54,329 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1,45,779 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும், மற்றும் கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவ மேற்பார்வையில் உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

வாசனை, சுவை தெரியவில்லையா?… கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம்: மத்திய சுகாதாரத்துறை!

வாசனை மற்றும் சுவை தெரியவில்லை என்றால் அது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நோய்க்கான அறிகுறிகள் குறித்து மத்திய அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக இருமல், தொண்டை வறட்சி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு, இருமல், தசைபிடிப்பு நோய், ரைனோரியா, தொண்டை வலி, இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட நோய் அறிகுறிகள் இவை ஆகும். தற்போது, சுகாதார அமைச்சகத்தின் அறிகுறிகளின் பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 49.2% … 2ம் நாளாக மீட்பு எண்ணிக்கை உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியா முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு விகிதம் இன்று 49.2% ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, 2ம் நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது என தெரிவித்தார். நாடு முழுவதும் கோரோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,579 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேரும், தமிழகத்தில் 36,841 பேரும், டெல்லியில் 32,810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 5,991 பேர் டிஸ்சார்ஜ்… நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.35 லட்சமாக ஆக உயர்வு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5,991 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,205 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 1,33,632 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் முதல்முறையாக குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்துள்ளது. தற்போது மீட்பு விகிதம் 48.88% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,002 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.94% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 7.9 பேர் கொரோனவால் பாதிக்கப்படுகின்றனர்: மத்திய சுகாதாரத்துறை!!

உலகின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால், கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இந்தியாவில், கோவிட் காரணமாக நாட்டின் ஒரு லட்சம் மக்களுக்கு 7.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தொடங்கிய போது மீட்பு விகிதம் 7.1%… தற்போது 39.62% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,298 பேர் குணமடைந்துள்ளனர் என்பது திருப்திகரமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்தாவது, ” நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 7.1% ஆக இருந்தது. தொடர்ந்து ஊரடங்கு 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 11.42% ஆக இருந்தது. பின்னர் அது 26.59% ஆக உயர்ந்தது. இன்று மீட்பு விகிதம் 39.62% […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 38.73% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,350 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நோயாளிகளின் மீட்பு விகிதமும் 38.73% ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 24.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக என்றும் நேற்று மட்டும் 1.08 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் – மத்திய அரசு வெளியீடு!

அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை!!

நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ” கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோல தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து பரவுவதில்லை: இது மிகவும் பொறுப்பற்ற செய்தி… இணை செயலாளர்!

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து வருவதில்லை என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” COVID-19 பரவலை சமூக வாரியாக மேப்பிங் செய்வதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் குறித்து வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மதம் அடிப்படையில் கொரோனா வருவதில்லை” என அவர் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20917 ஆக அதிகரித்துள்ளது. அதன் விகிதம் தற்போது 31.15% ஆக உள்ளது. நாடு முழுவதும் 44029 பேர் தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால் கொரோனா பாதிப்பு தீவிரமடையும்: மத்திய சுகாதாரத்துறை!!

ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை பற்றி பேசும் போது, ​​நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வைரஸுக்கு எதிரான தடுப்பு வழிகாட்டுதல்கள் நடத்தை மாற்றங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த காலகட்டத்தில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவதிலும், செய்யக்கூடாதவைகளை புறக்கணிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்வதன் காரணமாக கொரோனா பாதிப்பு நாட்டில் உச்சமடைவதை தவிர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.. மத்திய சுகாதாரத்துறை..!

நாட்டில் சுமார் 216 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 28 நாட்களாக சுமார் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 1,273 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் […]

Categories

Tech |