உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் பேரணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்து அந்தப் பேரணியில் அவர் கலந்து கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அந்த சைக்கிள் பேரணியில் கலந்து […]
Tag: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிய XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று 200 மடங்கு அதிவேகமாகப் பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் XE வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை தொற்றினால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
அடுத்த 3 வாரத்திற்கு கொரோனா தொற்று 2ஆம் அலை உச்சம் தொடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2ஆம் அலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 7 யூனியன் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருடன் இந்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் […]
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தனது மனைவியுடன் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். இந்தியா கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட covid-19 தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 1 தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. அதில் 60 க்கும் மேற்பட்டோர் மற்றும் இணை நோய் பாதிப்பு கொண்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி பாரத் பயோடெகின் தடுப்பூசியை செலுத்தி […]
பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் போன்ற புதியதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், தொற்று அதிகமாகவும் பரவி உள்ளது. எனவே பல நாடுகள் பிரிட்டனின் விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. இந்தியாவிலும் இன்று நள்ளிரவு 11.59 மணியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வரை தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை […]
பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடும் படி எந்த கடவுளும் கேட்கவில்லை என்றும் தற்போது கொரோனாவை எதிர்த்து போராடுவதே முதல் தர்மம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என மருத்துவத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடங்க உள்ளதால் உயிரை பணயம் வைத்து பண்டிகை கொண்டாட வேண்டுமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]
பண்டிகை காலம் வரவிருப்பதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு கொரோனாவை கண்டறியும் சோதனைகளும் அதிகரிக்கபட்டுள்ளனர். எனினும் கொரோனா பரவல் குறையவில்லை இந்நிலையில் விரைவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜென் அட்டோலன் என்ற மக்கள் […]
புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா மிக எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளது. அதில் “புகைப்பழக்கம் கொண்டவர்கள் கையில் கொரோனா வைரஸ் தொற்றி விட்டால் வாய்க்கு மிக எளிதாக செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. புகைப்பிடிக்கும் போது கை விரல்கள் வாய் பகுதியினை அதிகமாக தொடக் கூடிய வாய்ப்பு உள்ளதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்ற நபர்களை விட மிக எளிதில் கொரோனா பரவும். […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.7% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் வர்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்த காலகட்டங்களில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது”. நாடு முழுவதும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த […]
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் 3.3% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் மீட்பு விகிதம் 29.9% ஆகவும் உயர்ந்துள்ளது எனவும் இவை மிகச் சிறந்த குறிகாட்டிகள் என கூறியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கான இரட்டிப்பு விகிதம் சுமார் 11 நாட்கள், கடந்த 7 நாட்களில் இது 9.9 நாட்கள் உள்ளது என கூறியுள்ளார். மேலும், பல வளர்ந்த நாடுகளைப் போல […]
இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தற்போது இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், ” நாட்டில் சமூக பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார். எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார். ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலை அளித்த போது, இத்தாலிய சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 28 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தெரிவித்து இருந்தார். அதற்குப் பிறகு பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிந்தவுடன் இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இதற்கிடையே பல்வேறு இடங்களில் […]