நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ரயில்வே நிலையத்தில் இருக்கும் காலி பணியிடங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியன் ரயில்வே துறையில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன்படி குரூப் ஏ பிரிவில் 2021 காலி பணியிடங்கள் இருக்கிறது. இதனையடுத்து குரூப் பி பிரிவில் 858 காலி பணியிடங்கள் இருக்கிறது. மேலும் குரூப் சி பிரிவில் 3,12,944 காலி பணியிடங்கள் […]
Tag: மத்திய மந்திரி தகவல்
நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 5ஜி சேவை குறித்து பேசியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கிவிட்டது. இந்த சேவையானது கடந்த மாதம் 26-ம் தேதி வரை 50 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை இந்தியாவில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் வருகிற 2024-ம் […]
இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் தூய்மை இயக்கம் நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய தூய்மை இயக்கம் வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தூய்மை இயக்கத்தின் முக்கிய பகுதியாக கழிவுப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதோடு விதிமுறைகள் எளிதாக்கப்படுவதோடு கோப்புகளை ஆய்வு செய்து தேவையற்றதை நீக்கியும் வருகின்றனர். இப்படி தேவையற்ற கோப்புகளை நீக்குவதன் மூலம் இடமும் சேமிக்கப்படுகிறது. அதன்பிறகு கழிவுப்பொருட்கள் விற்பனையின் மூலம் பல […]
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் அமைக்கப்படும் பணிகளுக்கு உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1500 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் இந்தியாவின் கனவு திட்டம் சுகன்யான் திட்டம் ஆகும். இந்த திட்டம் பற்றி பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றும்போது முதன்முதலாக தெரிவித்தார். இந்த திட்டம் ரூ.10,000 கோடியில் நிறைவேற்றப்படும் என்று அப்போது அவர் குறிப்பிட்டு இருந்தார். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் போன்ற இந்தியாவின் சுகன்யான் விண்கலத்தில் வீரர்களை பூமியின் தாழ்வட்டப்பாதைக்கு அனுப்பி ஏறத்தாழ ஏழு நாட்கள் விண்வெளி ஆய்வுக்கு பின்னர் அவர்களை மீண்டும் பத்திரமாக […]